search icon
என் மலர்tooltip icon

    தேனி

    • இவர் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபருடன் பழகி வந்துள்ளதாக தெரிகிறது.
    • அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது அந்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றது தெரிய வந்தது.

    சின்னமனூர்:

    சின்னமனூர் வ.உ.சி. நகர் 4-வது தெருவைச் சேர்ந்த பழனிச்சாமி மகள் பவதாரணி (வயது 21). இவர் அதே பகுதியைச் சேர்ந்த கிஷோர் என்ற வாலிபருடன் பழகி வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று பவதாரணி வீட்டை விட்டு மாயமானார். அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது பவதாரணியை கிஷோர் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து பழனிசாமி சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தப்பட்ட இளம்பெண்ணையும், அவரை கடத்திச் சென்ற வாலிபரையும் தேடி வருகின்றனர்.

    • முதலீடுகளை ஈர்க்கும் வகையில் மாவட்ட அளவிலான சிறப்பு நோக்கு கூட்டம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.
    • சேவைத் துறையில் 7 நிறுவனங்கள் ரூ.60.70 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தேனி:

    தேனியில் தொழில் முதலீட்டு மாநாடு 2024-ஐ முன்னிட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் மாவட்ட அளவிலான சிறப்பு நோக்கு கூட்டம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியினை பெருக்குவதற்கும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு வரும் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய நீடித்த மற்றும் நிலையான வளர்ச்சியினை நோக்கமாக கொண்டு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கு திட்டமிடப்பட்டு இம்மாநாடு நடைபெற உள்ளது.

    உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 சார்பாக, தேனி மாவட்டத்திற்கு ரூ.540 கோடி முதலீடுகளை ஈர்ப்பதற்கு குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டு, தற்போது 35 நபர்களிடமிருந்து ரூ.479.12 கோடி முதலீடுகள் அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் உற்பத்தி துறையில் 28 நிறுவனங்கள் ரூ.418.42 கோடி முதலீடு செய்வதற்கும், சேவைத் துறையில் 7 நிறுவனங்கள் ரூ.60.70 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.60.88 கோடி குறியீட்டினை அடைவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தேனி மாவட்டத்தின் புவியியல் அமைப்பு மற்றும் மூலப்பொருட்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் தொழில் முனைவுகளையும் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்முனைவுகளையும் அதிக அளவில் ஊக்குவிக்க நமது மாவட்டத்தின் சார்பில் அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    மேலும், அதிக அளவு மானியம் தரக்கூடிய திட்டமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் புதிய முனைவோர்களுக்காகவும், தொழிலை மேம்படுத்துவதற்காக உள்ள திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் பெண்கள் தொழில் முனைவோர்களாக வளர்வதற்கும், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    • கம்பம் துணை மின்நிலையத்தில் நாளை 25-ந்தேதி மாதாந்திர பரமாரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • எனவே காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்

    சின்னமனூர்:

    கம்பம் துணை மின்நிலையத்தில் நாளை 25-ந்தேதி மாதாந்திர பரமாரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கம்பம், கூடலூர், உத்தமபுரம், ஊத்துக்காடு, அண்ணாபுரம், புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்படும். இதே போல் மார்க்கையன்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மார்க்கையன்கோட்டை, அய்யம்பட்டி, புலிக்குத்தி, கீழசிந்தலைச்சேரி, மேலசிந்தலைச்சேரி, பல்லவராயன்பட்டி, குண்டல்நாயக்கன்பட்டி, அம்மாபட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என சின்னமனூர் மின்பகிர்மான செயற் பொறியாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.


    • மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கேரளா விலும், முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியிலும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.
    • கடந்த 2 நாட்களில் 2 அடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

    கூடலூர்:

    மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கேரளா விலும், முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியிலும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களில் 2 அடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. நேற்று காலை 4118 கன அடியாக இருந்த நீர் வரத்து மாலையில் 5800 கன அடியாக அதிகரித்தது.

    இன்று காலை அணைக்கு 3617 கன அடி நீர் வருகிறது. நேற்று 134.90 அடியாக இருந்த நீர் மட்டம் இன்று காலை 135.80 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 6068 மி.கன அடியாக உள்ளது.

    தொடர்ந்து மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதால் முல்லை ப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடி வரை தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ரூல்கர்வ் அடிப்படையில் அணையில் இருந்து தண்ணீர் திறப்பை கைவிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

    71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 67.32 அடியாக உள்ளது. நீர் வரத்து 4583 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து பூர்வீக பாசனத்துக்காகவும், மதுரை குடிநீர் தேவைக்காகவும் 5899 கன அடி நீர் வெளி யேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5162 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 100 கன அடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் முழு கொள்ள ளவை எட்டி 126.93 அடியில் உள்ளது. அணைக்கு வரும் 521 கன அடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கன அடியாக உள்ளது. தொடர் மழை காரணமாக கும்பக்கரை அருவியில் இன்று 22-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல் மேகமலை, சுருளி அருவியிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் அங்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பெரியாறு 5.8, தேக்கடி 11.4, கூடலூர் 3.6, உத்தம பாளையம் 2.4, போடி 3.2, வைகை அணை 14, மஞ்ச ளாறு 3, சோத்துப்பாறை 26, பெரியகுளம் 18, வீரபாண்டி 12, அரண்மனைபுதூர் 11 மி.மீ மழை அளவு பதிவாகி யுள்ளது.


    • இந்த தெருப்பகுதிக்கு சாக்கடை வடிகால்கள் இல்லாததால் கொட்டகையில் இருந்து வெளியேறும் மாட்டுச் சாணம் மற்றும் கழிவு நீர் சாலையிலேயே தேங்கி நிற்கிறது.
    • தெரு வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் மாட்டு ச்சாணத்தின் மேல் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் கடமலைக்குண்டு அருகே மேலப்பட்டி பட்டாளம்மன் கோவில் தெருப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இதே தெருவில் வசிக்கும் தனிநபர் ஒருவர் அவரது வீட்டில் கொட்டகை அமைத்து பசுமாடுகள் வளர்த்து வருகிறார். இந்த தெருப்பகுதிக்கு சாக்கடை வடிகால்கள் இல்லை.

    எனவே கொட்டகையில் இருந்து வெளியேறும் மாட்டுச் சாணம் மற்றும் கழிவு நீர் சாலையிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மாடுகளின் கழிவை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அகற்ற வேண்டும் என அவருக்கு பொதுமக்கள் பலமுறை முறையிட்டும் எந்த வித பலனும் இல்லை. அதே போல கடமலை க்குண்டு ஊராட்சி நிர்வாக த்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை.

    அதனால் தற்போது இந்த தெருப்பகுதி முழுவதும் மாட்டு சாணம் குவிந்து காணப்படுகிறது. தெரு வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் மாட்டு ச்சாணத்தின் மேல் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. சுகாதார கேடு ஏற்பட்டுள்ள காரண த்தால் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகளால் தொடர்ந்து அவதியுற்று வருகின்றனர்.

    அதேபோல குழந்தைகளுக்கு தோல் பிரச்சனைகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூலம் மாவட்ட கலெ க்டர் அலுவலகத்தில் முறை யிடப் போவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

    • வயல்களில் மழை நீர் தேங்கியதால் விவசாயிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.
    • மேலசொக்கநாதபுரம் பகுதியில் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்தது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக முக்கிய அணைகள், கண்மாய்கள், குளங்கள் நிரம்பியது. இதனால் விவசாய பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

    ஆற்றங்கரையோரமுள்ள பகுதிகளில் தண்ணீர் அதிக அளவு சென்றதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். போடி விசுவாசபுரம் பகுதியில் தென்னை, வாழை, செவ்வந்திப்பூ உள்ளிட்ட விவசாயம் அதிக அளவு நடைபெற்று வருகிறது. இந்த வயல்களில் மழை நீர் தேங்கியதால் விவசாயிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

    பயிர்கள் அனைத்தும் மழையில் நனைந்து வீணாகி விட்டதால் ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் செலவு செய்து பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் மேலசொக்கநாதபுரம் பகுதியில் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்தது. இதனால் வீடுகளில் இருந்த மக்கள் வெளியேற முடியாமல் மிகுந்த சிரமம் அடைந்தனர். நேற்று மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அதுபோன்ற அறிவிப்பு வெளியாகவில்லை.

    இதனால் மாணவ-மாணவிகள் கல்வி நிலையங்களுக்கு செல்ல முடியாமல் மிகுந்த சிரமம் அடைந்தனர். குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர். மேலும் பெரியகுளம் அருகே நெல் வயலுக்குள் தண்ணீர் புகுந்ததில் 20 ஏக்கர் மதிப்பில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. கீழவடகரை பகுதியில் உள்ள ஆண்டிக்குளத்தில் இருந்து வெளியேறிய தண்ணீர் வயல்களை சூழ்ந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே அதிகாரிகள் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதே போல் தேனி முல்லை நகர் காலனியிலும் தண்ணீர் அதிக அளவு குடியிருப்புகளை தேங்கியதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாயினர். 

    • கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளனவா என ஆய்வு மேற்கொண்டனர்.
    • இந்த ஆய்வில் 4 கடைகளில் தடை செய்த புகையிலை பொருட்கள் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது‌.

    பெரியகுளம்:

    தேனிமாவட்டம் பெரியகுளம் அருகே எ.புதுப்பட்டி, அழகர்நாயக்கன்பட்டி பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறையினர் மாவட்ட நியமன அலுவலர் ராகவன் உத்தரவின் பேரில் பெரியகுளம் உணவு பாதுகாப்பு அலுவலர் சக்தீஸ்வரன், மதுவிலக்கு பிரிவு போலீஸ் ஜெயசீலன் மற்றும் போலீசார் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளனவா என ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வில் 4 கடைகளில் தடை செய்த புகையிலை பொருட்கள் கண்டறியப்பட்டு தலா ரூ.5000 வீதம் 4 கடைகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கடை உரிமையாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கி எச்சரித்தனர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு இதயத்தில் ஆபரேசன் செய்துள்ளார்.
    • ஆனால் தொடர்ந்து மது குடித்து வந்துள்ளார்.

    கம்பம்:

    கம்பத்தை சேர்ந்தவர் சர்தார் (வயது63). இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதயத்தில் ஆபரேசன் செய்துள்ளார். ஆனால் தொடர்ந்து மது குடித்து வந்துள்ளார். இந்த நிலையில் குள்ளப்புரத்துக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்ற அவர் மாயமானர்.

    அவரது உறவினர்கள் தேடி பார்த்தபோது கம்பம் இ.பி. ஆபீஸ் சாலையில் உள்ள தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து கம்பம் தெற்கு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கூடலூர் அருகே குள்ளப்பகவுண் டன்பட்டியை சேர்ந்த முத்துமணி (55). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. இதனால் மன வெறுத்த முத்துமணி விஷ மாத்திைர தின்று மயங்கினார். கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துமணி உயிரிழந்தார். இது குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • முதல் மகளுக்கு தேனி அம்மாபட்டியை சேர்ந்தவரை திருமணம் செய்து கொடுத்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள முருக்கோடை ராயர்கோட்டையை சேர்ந்தவர் முருகன். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். முதல் மகளுக்கு தேனி அம்மாபட்டியை சேர்ந்தவரை திருமணம் செய்து கொடுத்தனர். அவருக்கு குழந்தை பிறந்ததையடுத்து தனது மனைவியுடன் பேத்தியை பார்க்க புறப்பட்டார்.

    அப்போது 2 வது மகளான 10ம் வகுப்பு படிக்கும் கோபிகா (14) என்பவர் தானும் உடன் வருவதாக கூறி உள்ளார். அதற்கு அடுத்தமுறை செல்லலாம் என்றும், வீட்டிலேயே இருக்குமாறு கூறி விட்டு முருகன் தனது மனைவியுடன் சென்றுவிட்டார்.

    இதனால் மனமுடைந்த கோபிகா தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பலத்த காயங்களுடன் தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேனியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி சார்பில் கல்லூரி மாணவர்களுக்காக நடைபெற்ற கல்விக் கடன் முகாம் நடைபெற்றது.
    • இதில் 100 மாணவர்களுக்கு ரூ.4.56 கோடி மதிப்பிலான வங்கி கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி சார்பில் கல்லூரி மாணவர்களுக்காக நடைபெற்ற கல்விக் கடன் முகாமில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா 100 மாணவர்களுக்கு ரூ.4.56 கோடி மதிப்பிலான வங்கி கல்வி கடனுதவிகளை வழங்கினார்.

    இதில் கலெக்டர் பேசியதாவது,

    வங்கிகளில் உள்ள கடன் திட்டங்கள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்வதற்காகவும், கடன் வாங்குவதற்கான புரிதல் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்து வதற்காகவும் இந்த கல்வி கடன் முகாம் நடத்தப்படு கிறது.

    ஆன்லைன் மூலம் சுலபமாக விண்ணப்பிக்கும் முறைகள் மற்றும் திட்டங்களை நேரில் மாணவர்கள் தெரிந்து கொள்வதற்காகவும், சேமிப்பு மற்றும் கடன் பற்றிய புரிதல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடம் ஏற்படுத்துவதற்காகவும் இந்த முகாம் நடத்தப்படு கிறது.

    இதில் 100 மாணவர்க ளுக்கு ரூ.4.56 கோடி மதிப்பிலான வங்கி கல்வி கடன் வழங்கப்பட்டு ள்ளது. மேலும், கடந்த முறை நடைபெற்ற கல்வி கடன் முகாமில் 36 மாணவர்களுக்கு ரூ.1.8 கோடி மதிப்பிலான வங்கி கல்வி கடன் வழங்கப்பட்டது.

    இதுவரை, தேனி மாவட்டத்தை சேர்ந்த 136 மாணவர்களுக்கு ரூ.6.36 கோடி மதிப்பில் வங்கி கல்வி கடன் வழங்கப்பட்டு ள்ளது. இதுபோன்ற கல்வி கடன் முகாம் குறித்து பிற மாணவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என பேசினார்.

    கல்விக் கடன் முகாமில் பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி, வேளாண் மற்றும் தோட்ட க்கலை கல்லூரி, கால்நடை மருத்துவ கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி என அனைத்து வகையான கல்லூரிகளில் படிக்கின்ற முதலாம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக தேனி மாவட்டதில் உள்ள வங்கிகளின் மேலாளர்கள் முகாமில் கலந்துகொண்டு மாணவர்கள் இணைய தளத்தின் மூலம் சுலபமாக கல்விக்கடன் விண்ண ப்பத்தை பதிவு செய்வத ற்கான பணிகள் மற்றும் வங்கிகளின் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

    • ஓட்டலில் 3 பேர் உணவு சாப்பிட்டுவிட்டு பணம் கேட்டால் கொலை செய்துவிடுவதாக உரிமையாளரை மிரட்டியுள்ளனர்.
    • புகாரின்பேரில் போலீசார் 3 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் அருகே காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் காசிபாண்டியன்(61). இவர் அதேபகுதியில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்த கடைக்கு விக்னேஷ்(21), வாஞ்சிநாதன்(22), ரவீந்திரன்(25) ஆகிய 3 பேரும் அடிக்கடி வந்து செல்வார்கள்.

    தீபாவளி பண்டிகையின்போது பார்சல் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் மிரட்டியுள்ளனர். மேலும் சம்பவத்தன்று 3 பேரும் உணவு சாப்பிட்டுவிட்டு பணம் கேட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர்.

    நாங்கள் அடிக்கடி வருவோம். எங்களுக்கு உணவு தரவேண்டும். பணம் கேட்ககூடாது என்றனர். மேலும் காசிபாண்டியனிடம் மதுகுடிக்க ரூ.1000 கேட்டனர். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

    • போடியில் பெய்த கனமழைக்கு மூதாட்டியின் வீடு உள்பட 2 வீடுகள் இடிந்து தரைமட்டமானது.
    • பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள் வழங்கவேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சிலமலை நடுத்தெரு பகுதியில் சரஸ்வதி(50) என்பவர் தனியாக வசித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர் கூலிவேலை பார்த்து பிழைப்பு நடத்தி வந்தார்.

    இவரது வீடு ஏற்கனவே பலம் இழந்து காணப்பட்ட நிலையில் இன்று அதிகாலை வீட்டின் சுவர் இடிந்து தரைமட்டமானது. நல்வாய்ப்பாக சரஸ்வதிக்கு எந்த காயமும் ஏற்படடவில்ைல. இருந்தபோதும் வீட்டில் இருந்த பொருட்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி சேதமடைந்தது.

    இதேபோல் போடி யை சேர்ந்த செல்வராஜ் தனது மனைவி செல்வி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது வீடு கனமழைக்கு இடிந்து விழுந்தது. இதில் அவர்கள் காயமின்றி உயிர்தப்பினர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள் வழங்கவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×