என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
திருப்பத்தூர்
- போக்குவரத்துக்கு இடையூறாக நடத்தப்பட்டதால் நடவடிக்கை
- போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் தீவிரமாக கண்காணித்தனர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலையில் குதிரை வண்டிகளை வைத்து ஓட்ட பந்தயம் நடத்துகின்றனர்.
இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கு ள்ளாவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார்கள் தெரிவித்து வந்தனர்.
அதன்படி போலீசார் இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டதோடு தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று போக்குவரத்துக்கு இடையூறாக குதிரை பந்தயம் நடந்தது.
இதனை பார்த்த போலீசார் உடனே அந்த குதிரை வண்டியை விரட்டி பிடித்தனர்.
மேலும் பந்தயம் நடத்திய வாணியம்பாடி நியூடவுன் பகுதியைச் சேர்ந்த பிரேம் (வயது 23) என்ற இளைஞரை வாணியம்பாடி தாலுகா போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து குதிரை வண்டியை பறிமுதல் செய்தனர்.
மேலும் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக தேசிய நெடுஞ்சாலைகளில் குதிரை பந்தயம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- அரசு பள்ளியில் கட்டப்பட்டுள்ளது
- பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம், கொரட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 750 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த தலைமை ஆசிரியர் உள்பட 30 பேர் பணிபுரிகின்றனர்.
இங்குள்ள மாணவர்களின் அவசர தேவைக்காக கட்டப்பட்ட கழிவறை கட்டிடங்கள், கட்டி முடித்து பல வருடங்கள் ஆனதால் பழுதடைந்து காணப்பட்டது.
எனவே புதிய கழிவறை கட்டித்தர வேண்டுமென மாணவர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில் தனியார் சாப்ட்வேர் நிறுவனம் சார்பில் மாணவிகளுக்கு நவீன வசதிகள் கொண்ட பிரத்தியேகமான கழிவறை கட்ட முன் வந்தது. அதன்படி ரூ.23 லட்சம் மதிப்பில் கப்பல் வடிவில் புதிய கழிப்பறை கட்டப்பட்டது.
மேலும் கழிவறை கதவுகளில் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியமூட்டும் வகையில் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இதில் நாப்கின், டிஸ்பென்சர்கள் மற்றும் எரிப்பான்கள் உள்ளடக்கிய 8 கழிவறை என தனித்தனியாக கட்டப்பட்டுள்ளது. இந்த கப்பல் வடிவிலான கழிவறை நேற்று முதல் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
அரசு பள்ளியில் நவீன வசதிகளுடன் கப்பல் வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ள கழிவறை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
- ஆந்திராவை சேர்ந்தவர் கைது
- ஆட்டோ பறிமுதல் செய்து விசாரணை
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் ரேசன் அரிசி சேகரிக்கப்பட்டு கர்நாடகம் மற்றும் ஆந்திராவிற்கு விற்கப்படுகிறது. இதனால் குடிமை பொருள் குற்ற புலனாய்வு பிரிவு கண்காணிப்பாளர் ஸ்டாலின் திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்ட பகுதி தமிழக ஆந்திர எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் சோதனை பணிகளை தீவிர படுத்த குடிமை பொருள் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
உத்தரவின் பேரில் தமிழக ஆந்திர எல்லை சோதனை சாவடியில் குடிமை பொருள் குற்றபுலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் முத்தீஸ்வரன் தலைமையிலான போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக செல்லும் வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது அவ்வழியாக வந்த 1 ஆட்டோவில் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்பட்டது கண்டறியப்பட்டது இதனை தொடர்ந்து ஆட்டோவில் கடத்தப்பட்ட சுமார் 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ஆந்திர மாநிலம் ராமகுப்பம் பகுதியை சேர்ந்த வாசு (47) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு பஸ் சிறைப்பிடிப்பு- பரபரப்பு
- ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த வெங்க ளாபுரம் ஊராட்சியில் சுமார் 300-க்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் சீரான குடிநீர் வழங்கவில்லை. திருவிழாக்கள் மற்றும் பண்டிகை நாட்களில் குடிநீர் வழங்காததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வெங்களாபுரம் அருகே திருப்பத்தூர்- திருவண்ணா மலை சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். மேலும் அந்த வழியாக வந்த அரசு பஸ்சையும் சிறை பிடித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளுக்கும், பொதும க்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து போலீசார் உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
- போலீசார் வாகன சோதனையில் சிக்கினார்
- வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் டிஎஸ்பி தனிப்படை குற்ற பிரிவு போலீசார் நேற்று இரவு ஆம்பூர் பைபாஸ் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக பைக்கில் வந்த வாணியம்பாடி டவுன் வி.எஸ்.கே. நகர் சேர்ந்த மாதவன் வயது (20) என்வரை பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது ஆம்பூர் சுற்று புற பகுதியில் கடந்த சில நாட்களாக மாதவன் 7 பைக்குகளை திருடியது தெரியவந்தது. அவரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
- திருப்பத்தூர் கலெக்டர் தகவல்
- 22 விருதுகள் வழங்கப் பட உள்ளது
திருப்பத்தூர்:
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்க ளுக்கு மாநில விருதுகள் முதல்-அமைச்சரால் டிசம்பர் மாதம் 3-ந் தேதி வழங்கப்பட உள் ளது.
இதில் சிறந்த பணியாளர், சுயதொழில் புரிபவர், சிறந்த ஆசிரியர், சிறந்த சமூக பணி யாளர், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறவனம், மாற்றுத் திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த் திய சிறந்த நிறுவனம், ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பணியாற்றும் சிறந்த ஆசிரி யர், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட் டுனர் மற்றும் நடத்துனர், பொதுக்கட்டிடங்களில் மாற் றுத்திறனாளிகளுக்கான தடையற்ற கட்டமைப்புகளை ஏற்படுத்தியுள்ள சிறந்த அரசு, தனியார் நிறுவனங்கள் உள் ளிட்ட 22 விருதுகள் வழங்கப் பட உள்ளது.
இதற்கு இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக் கம் செய்து வருகிற 25-ந்தேதிக் குள் மாவட்ட மாற்றுத்திறனா ளிகள் நல அலுவலரிடம் நேரிலோ அல்லது தபால் மூலமோ வழங்க வேண்டும்.
மேற்கண்ட தகவலை திருப் பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரி வித்துள்ளார்.
- இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம்
- பொதுமக்கள் கலெக்டரிடம் புகார்
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உதயேந்திரம் பேரூராட்சியில் 14-வது வார்டு மும்தாஜ் கார்டன் பகுதியில் சாலைகள் மிகவும் சேதம் அடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் பேரூராட்சி தலைவர் பூசாராணியிடம் மனு அளித்தனர்.
அதன்பேரில் மூலதன மானியத்திட்டத்தின் கீழ் சுமார் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்க முடிவு செய்யப் பட்டது. அதன் பின்னர் ஒப்பந்ததாரர் மூலம் தார் சாலை அமைக்கும் பணியை தொடங்கப்பட்டது. அப்போது சாலை யின் நடுவே இருந்த மின்கம்பத்தை அகற்றாமல் மின்கம்பத்து டன் சேர்த்து தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு இடை யூறாக உள்ளதாகவும் விபத்து ஏற்படுவதாகவும், ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர்.
- 7 வாகனங்கள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் பைக் திருட்டு சம்பந்தமாக போலீசருக்கு புகார்கள் வந்தன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் ஆந்திர மாநிலம் அர்மணிபெண்டா பகுதியை சேர்ந்த திருமலை (வயது 26) என்பவர் ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பைக் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 7 பைக்கை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் நடவடிக்கை
- கலெக்டர் தகவல்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட உள்ளது.
இதற்கு பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தேயிலை, முன்னாள் தேயிலை தோட்ட பழங்குடியினர், வனவாசிகள், தீவுகள், நதி தீவுகளில் வசிக்கும் மக்கள், பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா (கிராமின்), அந்தியோதயா அன்ன யோஜனா ஆகிய திட்டபயனாளிகள், எஸ்.இ.சி.சி. (சமூக பொருளாதார சாதி வாரிகணக் கெடுப்பு -2011) குடும்பத்தினர்கள், 14 அம்ச திட்டத்தின் படி பட்டியலிடப்பட்ட ஏழை குடும்பத்தினர் ஆகியவற்றில் எல். பி.ஜி. இணைப்பு இல்லாத ஏழை குடும்பத்தை சேர்ந்தபெண் கள் https://www.pmuy.gov.in என்ற இணையதளத்திலோ, எரிவாயு முகவர்களை அணுகியோ உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
மேற்கண்ட தகவலை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
- வசந்தாவும், சாவித்திரியும் ரெயில் நிலையத்தில் உள்ள 1-வது பிளாட்பாரத்தில் இருந்து 2-வது பிளாட்பாரத்திற்கு செல்வதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.
- விபத்து குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வலையாம்பட்டு ராஜிவ் காந்தி நகரை சேர்ந்தவர் வசந்தா (வயது 67). இவரது மகன் பிரகாஷ். வசந்தாவின் சகோதரி ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பழைய காலணி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாவித்திரி (வயது 66).
இவர்கள் 3 பேரும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆம்பூர் ரெயில் நிலையத்திற்கு இன்று அதிகாலை வந்தனர்.
ரெயில் நிலையத்தில் டிக்கெட் வாங்க பிரகாஷ் கவுண்ட்டருக்கு சென்றார்.
அப்போது வசந்தாவும், சாவித்திரியும் ரெயில் நிலையத்தில் உள்ள 1-வது பிளாட்பாரத்தில் இருந்து 2-வது பிளாட்பாரத்திற்கு செல்வதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.
அப்போது அந்த வழியாக வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் அக்காள், தங்கை மீது மோதியது. இதில் இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வசந்தா, சாவித்திரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாய் மற்றும் சித்தி ரெயிலில் அடிப்பட்டு இறந்ததை பார்த்து பிரகாஷ் கதறி அழுதார். இந்த சம்பவம் அங்கிருந்த பயணிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- ஆலங்காயத்தில் 3 நாட்கள் நடக்கிறது
- போலீஸ் நிலையங்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவிப்பு
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் சுற்றுவட்ட பகுதிகளில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான சாலை ஆக்கிரமிப்புகள் வரும் நவம்பர் மாதம் 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை அகற்ற படுவதாக நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கே.கே.ஞானசேகரன் அந்தந்த போலீஸ் நிலையங்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில் வாணியம்பாடி நெடுஞ்சாலை உட்கோட்டம் அப்துல்லாபுரம் முதல் ஆசனாம்பட்டு, ஆலங்காயம் திருப்பத்தூர் சாலை, ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முதல் ராஜபாளையம் கூட்ரோடு வரை, ஜமுனாமரத்தூர் ஆலங்காயம், வாணியம்பாடி சாலை, ஆலங்காயம் காலணி முதல் மார்கெட் சந்திப்பு சாலை வரை உள்ள ஜமுனாமரத்தூர் சாலை, பஸ் நிலையம் முதல் பைக் ேஷாரூம் வரை நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது.
அவ்வாறு ஆக்கிரமிப்பு களை அகற்றும் போது ஆக்கிரமிப்புகளை அகற்ற முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
- பெண்கள் உட்பட 6 பேர் படுகாயம்
- அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பத்தை சேர்ந்தவர் பூபாலன் (வயது 45). தனியார் ஷூ கம்பெனி பஸ் டிரைவர். இவர் இன்று அதிகாலை வேலைக்கு ஆட்களை ஏற்றுவதற்காக ஆம்பூர் டவுன் சான்றோர் குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் பஸ்சை நிறுத்தி வைத்திருந்தார்.
பெண்கள் உட்பட ஷூ கம்பெனி தொழிலாளர்கள் சிலர் பஸ்சில் ஏறிக்கொண்டிருந்தனர்.
பெங்களூரில் இருந்து சென்னைக்கு கூரியர் ஏற்றி செல்லும் பார்சல் கன்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென தொழிலாளர்களை ஏற்றி கொண்டிருந்த பஸ் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பெண்கள் உட்பட 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்