என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
திருப்பத்தூர்
- 20 பாக்கெட்டுகள் பறிமுதல்
- போலீசார் சோதனையில் சிக்கியது
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
அப்போது புது ஓட்டல் தெரு அருகே கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் மறைத்து வைத்து விற்பனை செய்வதாக ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது புது ஓட்டல் தெரு சமத் சாய்பு தெருவைச் சேர்ந்தவர் சமியுல்லா (வயது 44) என்பவர் கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை விற்பனை செய்தபோது அவரை பிடித்து கைது செய்து அவரிடமிருந்து 20 மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- பலாத்கார வழக்கில் நடவடிக்கை எடுக்க தவறியதால் நடவடிக்கை
- டி.ஐ.ஜி. உத்தரவு
ஆலங்காயம்:
வாணியம்பாடி அடுத்த ஈச்சங்கால் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 52). விவசாயி. இவரது மனைவி சிவகாமி. தம்பதியினருக்கு 2 மகள் மற்றும் 1 மகன் உள்ளனர்.
மாணிக்கம் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலை மாணிக்கம் புத்துகோவில் அருகே உள்ள பெத்த கல்லுப்பள்ளி ரெயில்வே தண்டவாளத்தில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணிக்கத்தின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மாணிக்கம் மற்றும் அவரது நண்பர் கோவிந்தன்(85) ஆகியோர் சேர்ந்து, அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து கடந்த 4-ந் தேதி வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண்ணின் தந்தை புகார் அளித்துள்ளார்.
போலீஸ் விசாரணைக்கு பயந்து அவர் ரெயில் முன்பு பாய்ந்தது தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து தகவல் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது. இதை தொடர்ந்து வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் ஆகியோர் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தினர்.
அப்போது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான புகாரின் மீது நடவடிக்கை எடுக்க தவறிய அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தியை காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிட்டனர்.
மேலும் இந்த வழக்கை விசாரிக்க நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் வழக்கில் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் (85) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- போலீஸ் விசாரணைக்கு பயந்து மாணிக்கம் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
- வழக்கை விசாரிக்க நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆலங்காயம்:
வாணியம்பாடி அடுத்த ஈச்சங்கால் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 52). விவசாயி. இவரது மனைவி சிவகாமி. தம்பதியினருக்கு 2 மகள் மற்றும் 1 மகன் உள்ளனர்.
மாணிக்கம் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலை மாணிக்கம் புத்துகோவில் அருகே உள்ள பெத்த கல்லுப்பள்ளி ரெயில்வே தண்டவாளத்தில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மாணிக்கம் மற்றும் அவரது நண்பர் கோவிந்தன்(85) ஆகியோர் சேர்ந்து, அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து கடந்த 4-ந்தேதி வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண்ணின் தந்தை புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து போலீஸ் விசாரணைக்கு பயந்து மாணிக்கம் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
இதுகுறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதை தொடர்ந்து வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் ஆகியோர் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தினர்.
அப்போது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான புகாரின் மீது நடவடிக்கை எடுக்க தவறிய அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தியை காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிட்டனர்.
மேலும் இந்த வழக்கை விசாரிக்க நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் வழக்கில் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன்(85) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மருத்துவ சிகிச்சை அளித்தனர்
- பயனாளிகளுக்கு ஊனம் தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் சிறப்பு ஊனம் தடுப்பு முகாம் ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையில் நடைபெற்றது.
இதில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தொழுநோய் மருத்துவ துணை இயக்குநர் பிரீத்தா தலைமையிலான மருத்துவ குழுவினர் தொழுநோய் பாதிப்புக்குள்ளான வர்களை பரிசோதனை செய்து மருத்துவ சிகிச்சை அளித்தனர்.
பயனாளிகளுக்கு ஊனம் ஏற்படாமல் இருக்க எம். சி.ஆர் காலணிகள், ஊன்றுகோல் உள்ளிட்ட ஊனம் தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இந்த முகாமின் போது தொழுநோய் மருத்துவ அலுவலர் வெற்றிச் செல்வி வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் உடனிருந்தனர்.
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர பகுதிக்குட்பட்ட நியூடவுன், அம்பூர்பேட்டை, பெருமாள்பேட்டை, ஆசிரியர் நகர், கொல்லதெரு உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நகர செயலாளர் சதாசிவம் தலைமையில் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் எம்.எல்.ஏ. செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.எல். ஏ .கோவி.சம்பத்குமார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஆர்.வி குமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் மஞ்சுளா கந்தன், நகர துணை செயலாளர கோவிந்தன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணைத் தலைவர் பி.கே.எம் சந்தோஷ், சங்கர், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- 8 பேர் படுகாயம்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த பெண்கள், ஆம்பூரில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர்.
அதன்படி இன்று காலை 10-க்கும் மேற்பட்ட பெண்கள் ஷேர் ஆட்டோவில் ஆம்பூர் நோக்கி வந்தனர். அப்போது கடாம்பூர் அருகே வந்தபோது, நாய் ஒன்று குறுக்க ஓடியது.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர், ஆட்டோவை நிறுத்த முயற்சித்தார்.
அப்போது தரிக்கட்டு ஓடிய ஆட்டோ நிலை தடுமாறி சாலை ஓரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பேரணாம்பட்டு கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த ஸ்டாலின் மனைவி ஹேமாவதி (வயது 35) என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
- வேண்டுதலை நிறைவேற்ற அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை தானமாக வழங்கி வருகின்றனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகர் வி.எம்.வட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சாமி கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. எக்ஸெல் ஜி. குமரேசன் தலைமை தாங்கினார்.
கோயம்புத்தூர் சென்னை ஆம்பூர் மற்றும் ஜோலார்பேட்டை, மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மேலும் இதனை தொடர்ந்து கோவை தொழிலதிபர் ஏ.அன்பு அமுதா குடும்பத்தினர் தனது சொந்த செலவில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினர்.
இன்று காலை 7 மணி முதல் அன்னதானம் தொடங்கியது. கோவை தொழில் அதிபர் கோவை அன்பு அமுதா குடும்பத்தினர் அன்னதானத்தை வழங்கி விழாவை துவக்கி வைத்தார்.
ரைஸ் மில் ராஜா, மின்வாரிய அலுவலர் சுரேஷ், சென்னை மகேந்திரன், கவுன்சிலர் இனியன், வாழைப்பழம் மண்டி சதீஷ், ஹார்டுவேர்ஸ் ராஜேந்திரன், ரெயில்வே ஊழியர் தமிழ்வேந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 5 சனிக்கி ழமைகளில் அன்னதானம் வழங்கப்படும் மேலும் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை தானமாக வழங்கி வருகின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைப்பு
- மனைவி ஆள் வைத்து கொலை செய்ய திட்டமிட்டாரா? என விசாரணை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரிய கோமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 42), கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி ரூபா(38) மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில் ராஜேஷ்குமார் நேற்று இரவு வீட்டின் வாசலில் படுத்து தூங்கினார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர்.
இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் ராஜேஷ்குமாரை சரமாரியாக தாக்கியதோடு, அவரை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
வலி தாங்க முடியாமல் கூச்சுலிட்டபடி ராஜேஷ்குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார்.
அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள், படுகாயம் அடைந்த ராஜேஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் மர்ம நபர்களை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து உமாரபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:-
ராஜேஷ்குமார் முன்னதாக ஒரு கம்பெனியில் காவலாளியாக பணிபுரிந்துள்ளார். தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்யும் அவரது மனைவி ரூபாவுக்கும், வேறொரு நபருக்கும் தொடர்பு இருந்துள்ளது.
இது தொடர்பாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. விசாரணையின் போது அவரது மனைவி ரூபா மீது எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ரூபா தனது கணவனை ஆள் வைத்து கொலை செய்ய திட்டமிட்டாரா?, அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா? என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம்.
குற்றவாளிகள் கைது செய்த பின்னரே, ராஜேஷ் குமாரை வெட்டியதற்கான காரணம் தெரிய வரும் என்றனர்.
இந்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தனிபிரிவு போலீசார் நடவடிக்கை
- தமிழக- ஆந்திர எல்லை மலைப்பகுதியில் சோதனை
ஆலங்காயம்:-
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் வாணியம்பாடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் மஞ்சுநாதன், ரேணுகா தேவி, விஜய் மற்றும் போலீசார் தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள மாதகடப்பா மலைப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கள்ள சாராயம் தயாரிக்க மறைத்து வைத்திருந்த 105 லிட்டர் கள்ளச்சாராய ஊறல், 105 லிட்டர் சாராயம் ஆகியவற்றை அழித்தனர்.
மேலும் தப்பி ஓடிய கள்ள சாராயம் காய்ச்சும் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
- பொதுமக்கள் குற்றச்சாட்டு
- 50 கிலோமீட்டர் பயணம் செய்து பாலாற்றில் கலக்கிறது
ஜோலார்பேட்டை:-
திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நாட்றம்பள்ளி தாலுக்கா, காவேரிப்பட்டு கிராமத்தில் உள்ள கொட்டாறில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு தரமற்ற கம்பிகளையே பயன்படுத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த கொட்டாறு சுமார் 50 கிலோமீட்டர் பயணம் செய்து பாலாற்றில் கலக்கிறது. ஆற்றில் மழை வெள்ளம் அதிகளவில் வரும்போது பாலம் அடித்து செல்லும் அபாயம் உள்ளது. எனவே இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்படும் பாலம் அனைத்தும் தரமாக கட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- மாலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது
- விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி
ஜோலார்பேட்டை:-
திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை கடுமையான வெயில் வாட்டி வதைத்தது.
மாலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து இரவில் கரு மேகங்கள் சூழ திடீரென மழை பெய்யத் தொடங்கி சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.
அதேபோல் ராமகிருஷ்ணாபுரம், மல்லகுண்டா, வேட்டப்பட்டு, பச்சூர், புதுப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாட்டறம்பள்ளி பகுதியில் அதிகபட்சமாக 21 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல் திருப்பத்தூரில் 3.20 சென்டிமீட்டர், ஆலங்காயத்தில் 2 சென்டிமீட்டர் மழை பதிவானது.
- பொதுமக்கள் தர்ணா போராட்டம்
- தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஆலங்காயம்:-
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.
இந்த பள்ளி வளாகத்தில் சுமார் 50 ஆண்டுகள் பழமையான 30- க்கும் மேற்பட்ட தேக்கு மரங்கள் இருந்தன. தற்போது அந்த பள்ளியில் காலாண்டுதேர்வுகள் முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று பள்ளியில் இருந்த தேக்கு மரங்களை வெட்டி எடுத்துக்கொண்டு, லோடு ஆட்டோ ஒன்று வெளிய வந்தது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனே உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பள்ளி வளாகத்தில் இருந்த 14 தேக்கு மரங்கள் வெட்டப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அப்போது இது குறித்து பொதுமக்கள் பள்ளி தலைமை ஆசிரியர் துரையிடம் கேட்டனர்.
பழைய மரங்கள் என்பதாலும், இதை வெட்டி அதில் வரும் பணத்தை வைத்து மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்ற எண்ணத்தில் கல்விகுழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் மரங்கள் வெட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மரங்களை வெட்டியதாக தலைமை ஆசிரியர் கூறினார்.
அப்போது பொதுமக்கள், மரங்களை வெட்ட உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தார்கள்? என்று கூறி தலைமை ஆசிரியருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தலைமை ஆசிரியரை பள்ளியில் இருந்து வெளியே செல்ல விடாமல் பள்ளி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த வட்டார கல்வி அலுவலர் சித்ரா மற்றும் ஆலங்காயம் போலீசார் பொதுமக்களிடம் சமரசம் பேசினர். மேலும் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கபட்டு விசாரணை நடத்தி துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். அப்போது பொதுமக்கள், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வட்டார கல்வி அலுவலர் சித்ராவிடம் மனு அளித்தனர்.
இதை தொடர்ந்து வட்டார கல்வி அலுவலர் சித்ரா, ஆலங்காயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாந்தி ஆகியோர் தலைமை ஆசிரியர் துரையிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்