என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
திருப்பத்தூர்
- பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறு
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் பாறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 39), பேக்கரி மாஸ்டர்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தமிழரசன் (38) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறு இருந்தது.
இந்த நிலையில் மீண்டும் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த தமிழரசன் அருகில் இருந்த கட்டையை எடுத்து, முருகனை சரமாரியாக தாக்கினார்.
இதில் படுகாயம் அடைந்த முருகன் தற்போது நாட்டறம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து, முருகனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- மர்ம கும்பல் கைவரிசை
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் கைலாசகிரி ஊராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டம் தயார் செய்யும் சமையல் அறை உள்ளது.
இங்கு இருந்து ஒரு கியாஸ் சிலிண்டர் 40 சாப்பாடு தட்டுகள் 50 டம்ளர்கள் மற்றும் அரிசி பருப்பு எண்ணெய் மற்றும் மளிகை பொருட்களை மர்ம கும்பல் திருடி சென்றனர்.
இது குறித்து புகாரின் பேரில் உமாராபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வருகிற 23-ந்தேதி நடக்கிறது
- கலெக்டர் தகவல்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
திருப்பத்தூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 2023-2024 நிதியாண்டில் பல்வேறு வகையான அரசு நலத்திட்டங்கள் எளிதில் எவ்வித சிக்கல்கள் இன்றி மாற்றுத்திறனாளிகளுக்கு சென்றடைய ஏதுவாக பல்வேறு அரசுத்துறைகள் மற்றும் இதர நிறுவனங்களின் பங்களிப்புடன் மாற்றுத்திறனாளி களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் வாணியம்பாடி வருவாய் உள் வட்டத்தில் இஸ்லாமியா கல்லூரி அருகில் அமைந்துள்ள அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் வருகிற 23-ந் தேதி காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 வரை நடைபெறவுள்ளது.
இம்முகாமில் அனைத்து நலத்திட்ட உதவிகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதாக சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு அனைத்துதுறை அலுவலர்களும் கலந்து கொள்ள இருப்பதால் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் மற்றும் புதியதாக தேசிய அடையாள அட்டை பெற விரும்பும் நபர்கள் அனைவரும் இச்சிறப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 5 தலைமுறை கண்ட வள்ளியம்மாளுக்கு பேரன், பேத்திகள், கொள்ளு பேரன், கொள்ளுபேத்திகள் என 65 பேரப்பிள்ளைகள் உள்ளனர்.
- ஒரே நாளில் அக்காள், தம்பி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் ஊராட்சி ஜனதாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னகண்ணு கவுண்டர். இவருடைய மனைவி வள்ளியம்மாள் (வயது 104).
இவருக்கு தனபால் (80), பழனி (78) ஆகிய 2 மகன்களும், யசோதம்மாள் (82), சரோஜம்மாள் (80), லட்சுமியம்மாள் (78), ஜெகதமம்மாள் (76), ஈஸ்வரியம்மாள் (74) ஆகிய 5 மகள்கள் உள்ளனர்.
வள்ளியம்மாளின் கணவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இதையடுத்து அவர் கூலிவேலை செய்து தனியாக வசித்து வந்தார். பின்னர் வயது முதிர்வு காரணமாக அவர் தனது மூத்த மகன் தனபால் வீட்டில் வசித்தார்.
5 தலைமுறை கண்ட வள்ளியம்மாளுக்கு பேரன், பேத்திகள், கொள்ளு பேரன், கொள்ளுபேத்திகள் என 65 பேரப்பிள்ளைகள் உள்ளனர்.
மூதாட்டி உடலில் எந்த பிரச்சினையும் இல்லாமல் தனது வேலைகளை தானே செய்து வந்தார். இதற்கிடையே நேற்று வள்ளியம்மாளுக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்திலேயே அவர் இறந்தார். அவரது இறுதி சடங்கு நிகழ்ச்சியில் குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்றனர்.
அப்போது வள்ளியம்மாளின் தம்பி துரைசாமி (102) அங்கு வந்தார். இறந்துபோன அக்காள் வள்ளியம்மாளின் உடலை பார்த்து கதறி அழுதார். சிறிது நேரத்திலேயே அக்காள் இறந்த அதிர்ச்சியில் இருந்த துரைசாமியும் திடீரென சரிந்து விழுந்து இறந்தார்.
துரைசாமிக்கு பழனி (68), பாலாஜி (59), அண்ணாமலை (57), சுந்தரேசன் (55) ஆகிய 4 மகன்களும், எல்லம்மாள் (70), சுமதி (68) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.
5 தலைமுறை கண்ட துரைசாமிக்கும் பேரன், பேத்திகள், கொள்ளு பேரன், கொள்ளுபேத்திகள் என 57 பேரப்பிள்ளைகள் உள்ளனர்.
வயது முதிர்வு காரணமாக துரைசாமி தனது மனைவி கண்ணம்மாள் (89) உடன் தனது மகன், செட்டியப்பனூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை வீட்டில் வசித்து வந்தார்.
வள்ளியம்மாள் மற்றும் துரைசாமி ஆகியோர் மகன்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர்.
100 ஆண்டுகளை கடந்து ஒரே கிராமத்தில் அக்காள் வள்ளியம்மாள், தம்பி துரைசாமி ஆகியோர் உடலில் எந்த நோய் பிரச்சினையும் இல்லாமல் இருந்ததை அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் நினைவு கூர்ந்தனர்.
உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு எம்.எல்.ஏ.க்கள் தேவராஜ், செந்தில்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார், ஆலங்காயம் ஒன்றிய குழு தலைவர் சங்கீதாபாரி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
ஒரே நாளில் அக்காள், தம்பி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- பரிசுகள், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது
- ஏராளமான வீரர்கள் பங்கேற்றனர்
ஆலங்காயம்:
வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் திருப்பத்தூர் மாவட்ட டெனிகாய்ட், ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் மற்றும் தமிழ்நாடு டெனிகாய்ட் சங்கம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான டெனிகாய்ட் விளையாட்டு போட்டி நடந்தது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான வீரர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
- பின்னால் வந்த கனரக வாகனம் மோதியது
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
கர்நாடக மாநிலம், பெங்களூர் பத்மநாபன் நகரை சேர்ந்தவர் ஷாட்நாயக் மகன் அனிகேஷ் (வயது 29), சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் தனது பைக்கில் வேலூரில் இருந்து திருப்பத்தூரை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்றார்.
அப்போது ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகே வந்தபோது, பின்னால் வந்த கனரக லாரி பைக் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அனிகேஷ் சம்பவ இடத்திலேயே பரதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வனத்துறையினர் பிடித்தனர்
- காப்பு காட்டில் விடப்பட்டது
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊராட்சி, பைரப்பள்ளி பகுதியில் உள்ள விவசாய நிலத்தில், 9 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஊர்ந்து சென்றது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் ஆம்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று மலை பம்பை பிடித்து, காப்பு காட்டில் விட்டனர்.
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
- திருமண தடை நீங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றது
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் கஸ்பா பகுதியில் உள்ள வீர விநாயகர் கோவிலில் முருகர், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. சாமிக்கு புத்தாடை அணிவித்து, வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. இதில் திருமண தடை நீங்க சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- ஜோலார்பேட்டையிலும் அதிகளவில் பயணிகள் ஏறியதால் கூட்ட நெரிசல் மேலும் அதிகரித்தது.
- எஸ்-1,எஸ்-2, எஸ்-3 ஆகிய 3 முன்பதிவு பெட்டிகளிலும் பதிவு செய்யாத பயணிகள் அதிக அளவில் இருப்பது தெரிய வந்தது.
ஜோலார்பேட்டை:
கொச்சிவேலியில் இருந்து கோரக்பூர் செல்லும் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று புறப்பட்டது.
இதில் பயணம் செய்த பயணிகள் கழிவறை கூட செல்ல முடியாமல் தவித்து வந்துள்ளனர். அந்த அளவிற்கு முன்பதிவு செய்யாத பயணிகள் ஏராளமானோர் பயணம் செய்தனர்.
நிற்பதற்கு கூட இடமில்லாததால், வாலிபர்கள் கழிவறையையும் ஆக்கிரமித்தனர். இதனால் கழிவறை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இன்று காலை ரெயில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை வந்தடைந்தது. ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் வந்து நின்றதும், உடனே 3 நிமிடத்தில் ரெயில் புறப்பட தயாரானது.
ஜோலார்பேட்டையிலும் அதிகளவில் பயணிகள் ஏறியதால் கூட்ட நெரிசல் மேலும் அதிகரித்தது. பரிதவித்த பயணிகள், உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்.
இதனை அறிந்த ரெயில்வே போலீசார் உடனடியாக விரைந்து சென்று எஸ்-3 பெட்டியில் கழிவறையில் இருந்த பயணிகளை அப்புறப்படுத்தினர். மேலும் யாரும் கழிவறையில் பயணம் செய்யக்கூடாது என எச்சரித்தனர்.
அப்போது பயணிகள் ரெயில் நிலைய அதிகாரிகளுடன் கடும் வாக்குவத்தில் ஈடுபட்டனர். இதேபோல் பல பெட்டிகளில் பயணம் செய்வதாகவும், இதனால் நெடுந்தூரம் பயணம் செய்யும் பயணிகள் பரிதவிப்பதாக புகார் தெரிவித்தனர். ரெயில் நிலைய அதிகாரிகள், உடனடியாக சோதனை செய்தனர்.
அப்போது எஸ்-1,எஸ்-2, எஸ்-3 ஆகிய 3 முன்பதிவு பெட்டிகளிலும் பதிவு செய்யாத பயணிகள் அதிக அளவில் இருப்பது தெரிய வந்தது.
அவர்களையும் போலீசார் ஜோலார்பேட்டையில் இறக்கி விட்டனர். இதனை தொடர்ந்து 15 நிமிடம் கால தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- முன்விரோத தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டார்
- போலீசார் விசாரணை
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தும்பேரி ஜமான்கொல்லை பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 22). இவர் சென்னையில் உள்ள பேக்கரி கடையில் வேலை செய்து வந்தார்.
இவர் தும்பேரி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இது தொடர்பான முன்விரோத தகராறில் முரளி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார்.
அம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் கொலையாளி களை பிடிக்க வாணி யம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் முரளி கொலை செய்த வழக்கில், பெண்ணின் அண்ணன் சந்தோஷ் (25) மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அதே பகுதியை சேர்ந்த சூர்யா (24), அஜித் (24) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். வாலிபர் கொலை செய்த வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் முரளி கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்த காடீஸ் என்கிற காட்வின் மோசஸ்(32), முரளி காதலித்த பெண்ணின் தம்பி ஏழுமலை (24) மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறப்பு அபிஷேகம் நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பழனி ஆண்டவர் முருகர் கோவிலில் நேற்று சூரசம்ஹாரம் நடந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று முருகர்- வள்ளி திருக்கல்யாணம் நடந்தது. இதனையொட்டி அதிகாலை மூலவருக்கு பால், தயிர், சந்தனம், ஜவ்வாது, இளநீர் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
இதனைத் தொடர்ந்து முருகருக்கு பட்டு வேட்டி அம்பாளுக்கு பட்டுப்புடவை மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திருமண கோலத்தில் மூலவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதனைத் தொடர்ந்து தேன், தினைமாவு மற்றும் சீர்வரிசை பொருட்களுடன் வள்ளி திருமண மேடைக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். அங்கு கோவில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க வள்ளி- முருகன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பக்தர்கள் மொய் எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பணம் மற்றும் நகைகளை மொய் எழுதினர். மேலும் திருகல்யாணத்தில் பக்தர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
- காப்பகத்தில் ஒப்படைத்தனர்
- தேசிய ெநடுஞ்சாலையில் போலீசார் ரோந்து
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா போலீசார், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜமீன் பகுதியில் கடந்த 16-ந் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணைகள் அவர் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த விஷால் வயது (18) என்பதும், இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து காட்பாடியில் இருந்து 2 பைக்களை திருடி வந்ததும் தெரியும் வந்தது. இதனைத் தொடர்ந்து விஷாலை கைது செய்த போலீசார் பைக்கை பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய வாணியம்பாடி அடுத்த கோணாமேடு பகுதியைச் சேர்ந்த 2 சிறுவர்களை போலீசார் நேற்று கைது செய்து, வேலூர் சிறுவர்கள் சீர்திருத்தம் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்