என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
திருவாரூர்
- ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவன தலைவர் துரை ராயப்பன் தலைமை தாங்கினார்.
- செயல் அலுவலர் தேர்விற்கான பயிற்சி வகுப்பும் கோவிலில் பணிபுரிபவர்களுக்காக தொடங்கப்பட உள்ளது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவில் மண்டபத்தில் ஆன்மீக பயிற்சி வகுப்பு மற்றும் தமிழக அரசின் போட்டி தேர்வு பயிற்சி வகுப்பிற்கான தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவன தலைவர் துரை ராயப்பன் தலைமை தாங்கினார்.
கோவில் செயல் அலுவலர் முருகையன் முன்னிலை வகித்தார். முன்னதாக தொழில்நுட்ப கல்வித்துறையில் பணிபுரியும் அன்பு பாரதம் போட்டி தேர்வு பயிற்சி மைய நிறுவனர் குட்டியப்பன் அனைவரையும் வரவேற்றார்.
இதில் பயிற்சியாளர் வீர பைரவன் (ஆய்மூர் வி.ஏ. ஓ), பயிற்சியாளர் ஸ்ரீனிவாசன், வக்கீல் நாகராஜன், சர்வாலய அருட்பணி மற்றும் அறப்பணி குழுவை சேர்ந்த ஜெய்பிரகாஷ், முருகன், அரசு வக்கீல் பாஸ்கர் மற்றும் கோவிலில் பணிபுரியும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த பயிற்சியை ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் மற்றும் அன்பு பாரதம் போட்டி தேர்விற்கான பயிற்சி மையத்தின் ஒத்துழைப்போடு கோவில் நிர்வாகத்துடன் இணைந்து கோவிலில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தினமும் பயிற்சி நடத்த உள்ளது. இதன் மூலம் கோவிலில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பயன் அடைவர்.
இந்த பயிற்சியை போட்டி தேர்வு எழுத உள்ள மாணவர்களும், பொதுமக்களும் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கோவில் செயல் அலுவலர் முருகையன் கேட்டுக்கொண்டார். முடிவில் அரசு வக்கீல் பாஸ்கர் நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் செய்திருந்தது. தமிழக அரசு அறிவித்துள்ள கோவில் செயல் அலு வலர் தேர்வி ற்கான பயிற்சி வகுப்பும் கோவிலில் பணிபுரி பவர்களுக்காக தொடங்கப்பட உள்ளது என்பது குறிப்பி டத்தக்கது.
- முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு கேடயம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
- 45-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.
மன்னார்குடி:
மன்னார்குடி பான் செக்கர்ஸ் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் 5-வது கல்லூரி நிறுவன தினவிழா நடைபெற்றது. விழாவிற்கு மன்னார்குடி கீர்த்தி கிளினிக் டாக்டர். ரவீந்திரன் தலைமை தாங்கினார். முதல்வர் விக்டோரியா முன்னிலை வகித்தார்.
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கலை மற்றும் அறிவியல் (தன்னாட்சி) கல்லூரியின் விலங்கியல் துறை பேராசிரியரும், தமிழ்நாடு அறிவியல் கழக துணைத்தலைவருமான சுகுமாரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 45-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து மேல்நிலை படிக்கும் மாணவர்கள் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டிகளில் கலந்து கொண்டனர். மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வத் ஆண்டோ ஆரோ க்கிய ராஜ், மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியின் தலைமை டாக்டர். விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு கேடயம், சான்றிதழ்கள் வழங்கினர். விழாவில் பள்ளி ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- திருவாரூர் மக்கள் கல்வி நிறுவன இயக்குநர் பாலகணேஷ் அனைவரையும் வரவேற்றார்.
- இதில் பயிற்றுனர்கள் மற்றும் பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி:
இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனத்தில் திறன் பயிற்சி முடித்த பயனாளிகளுக்கு திறன் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
விழாவில் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவன தலைவர் கவுசல்யா அன்பரசு தலைமை தாங்கினார். ஸ்கார்டு செயலாளர் பாபுராஜன், ஜெகன், தொழி ற்பயிற்சி நிறுவன தலைவர் கருணாநிதி, ஒன்றியக்குழு உறுப்பினர் செந்தாமரை செல்வி அன்பழகன், ஊராட்சி தலைவர் எழிலரசி மணிச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக திருவாரூர் மக்கள் கல்வி நிறுவன இயக்குநர் பாலகணேஷ் அனை வரையும் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் கருடா சேவகர் இளவரசு கலந்து கொண்டு பயிற்சி பெற்ற பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். விழாவில் மன்னார்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ஹேமலதா, பாசறை ராஜேந்திரன், ராணி சேகர், கலையழகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில் மக்கள் கல்வி நிறுவன அலுவலர்கள் கனக துர்கா, மீனாட்சி, திலகவதி, சத்தியவாணி, பயிற்றுனர்கள் மற்றும் பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
- நீடாமங்கலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 1000 டன் நெல் அரவைக்காக நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.
- நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 21 பெட்டிகளில் ஏற்றினர்.
வலங்கைமான்:
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு ஆயிரம் டன் நெல் அரவைக்காக நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக நீடாமங்கலம், மன்னார்குடி ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரம் டன் எடை கொண்ட சன்னரக நெல் 78 லாரிகளில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 21 பெட்டிகளில் ஏற்றினர். இதனைத் தொடர்ந்து நெல் மூட்டைகளுடன் சரக்கு ரெயில் திருவண்ணாமலைக்கு புறப்பட்டு சென்றது.
- புதிதாக சேரும் மாணவர்களின் குடும்பங்களுக்கான வீட்டு வரியை அறக்கட்டளை நிர்வாகமே செலுத்தும்.
- விழாவில் மாணவ- மாணவிகளின் யோகா, நடன நிகழ்ச்சிகள் நடந்தது.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த விளத்தூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இங்கு படிக்கும் மாணவ- மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பெற்றோர் ஒத்துழைக்க வேண்டியும் தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை சார்பில் நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் விளத்தூர் அரசு பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்த்த பெற்றோர்களை கவுரவித்து நன்றி தெரிவிக்கும் வகையில் ரூ.1 லட்சம் மதிப்பில் வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்பட்டது.
பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி மாணவிகளில் ஒருவரை குடவோலை முறைப்படி தேர்ந்தெடுத்து அவருக்கு 1 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது. இந்த நாணயத்தை 2-ம் வகுப்பு படிக்கும் ஜெயஸ்ரீ என்ற மாணவி தட்டிச்சென்றார்.
மேலும், வருகிற (2024-25) கல்வியாண்டில் விளத்தூர் அரசு நடுநிலைப்பள்ளியில் புதிதாக சேரும் மாணவர்களின் குடும்பங்களுக்கான வீட்டு வரி மற்றும் குடிநீர் வரி கட்டணங்களை ஜோதி அறக்கட்டளை நிர்வாகமே உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்திவிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் வலங்கைமான் வட்டார கல்வி அலுவலர் அன்பழகன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன்,
விளத்தூர் நடுநிலைப்பள்ளி முதல்வர் தையல் நாயகி தலைமையிலான பள்ளி ஆசிரியர்கள், விளத்தூர் ஊராட்சி தலைவர் ஜனனி, களத்தூர் ஊராட்சி தலைவர் பிரபு, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் மாணவ- மாணவிகளின் யோகா, நடன நிகழ்ச்சிகள் நடந்தது.
இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார், மேலாளர் ஞானசுந்தரி, மேற்பார்வையாளர் கல்யாண சுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
- குறுவை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
- மன்னார்குடி தாசில்தார் அலுவலகம் முன்பு நாளை கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்துவது.
மன்னார்குடி:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் துரை. அருள்ரா ஜன் தலைமை தாங்கினார்.
ஒன்றிய செயலாளர் வீரமணி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் செல்வராஜ் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து பேசினார்.
இதில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் மகேந்தி ரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் சதாசிவம், இளைஞர் மன்ற ஒன்றிய செயலாளர் பாப்பையன், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் பூபதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் குறுவை பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும், வேலை இழந்துள்ள விவசாய தொழிலாளர் குடும்பங்க ளுக்கு ரூ.5 ஆயிரம் பண்டிகை கால உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கங்களின் சார்பில் நாளை (சனிக்கி ழமை) மன்னார்குடி தாசில்தார் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
- கோரையாற்றின் புதுப்பாலத்தின் அருகே சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
- சமுதாய கூடம் கட்டப்பட்டு வருகிறது.
திருவாரூர்:
நீடாமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நீடாமங்கலம் பேரூராட்சியில் ரூ.70.79 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கூடுதலாக 4 வகுப்பறைகள் கட்டப்பட்டு வருவதையும், பூவனூர் ஊராட்சியில் ரூ.5.80 லட்சம் மதிப்பில் நபார்டு வங்கி நிதிஉதவி திட்டத்தின் கீழ் பூவனூர் ஊராட்சி முதல் பெரம்பூர் ஊராட்சி வரை கோரையாற்றின் குறுக்கே புதுப்பாலத்தின் அருகே சாலை அமைக்கப்பட்டுவருவதையும்,
திருவாரூர் மாவட்ட கலெக்டா சாருஸ்ரீ ஆய்வு செய்தார்.பின்னர் பெரம்பூர் ஊராட்சியில் ரூ.68.30 லட்சத்தில் முல்லைவாசல் கிராமம் முதல் பெரம்பூர் வரை சாலை அமைக்கப்பட்டு வருவதையும், பிரதம மந்திரி குடியிருப்பு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், மேலாளவந்தசேரி ஊராட்சியில் ரூ.39 லட்சம் மதிப்பில் சமுதாய கூடம் கட்டப்பட்டுவருவதையும் கலெக்டர் சாருஸ்ரீ பார்வையிட்டார்.
இதைப்போல அரிச்சபுரம் ஊராட்சியில் ரூ.42.50 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு வருவதையும், ரூ.3.88 லட்சம் மதிப்பில் அரிச்சபுரம் நடுநிலைப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுவரும் பழுதுநீக்க பணிகளையும் கலெக்டர் சாருஸ்ரீ பார்வையிட்டார்.
பின்னர் ரிஷியூர் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக கழக திருவாரூர் மண்டல நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
ஆய்வின் போது நீடாமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் சோ.செந்தமிழ்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்ரமணியன், நமச்சிவாயம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், ஊராட்சி தலைவர்கள் இருந்தனர்.
- ஒருவர் வீட்டில் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்தார்.
- அப்போது எதிர்பாரத விதமாக தவறி விழுந்தார்.
திருவாரூர்:
திருவாரூர் அருகே பெருங்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் பக்கிரிசாமி (வயது54). விவசாய கூலித்தொழிலாளியான இவர் நேற்று திருவாரூர் சாமி மடத்தெருவில் உள்ள ஒருவர் வீட்டில் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்தார்.
பின்னர் மரத்தை விட்டு இறங்கிய போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
உடனே அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து பக்கிரிசாமியை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் பக்கிரிசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இவர் வீட்டின் 2-வது மாடியில் பூ பறிக்க சென்றுள்ளார்.
- மன்னார்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அன்னவாசல் சேவியதெருவை சேர்ந்தவர் செல்வமுத்து.
இவரது மகள் ஹரிணி (வயது 21).
இவர் இளநிலை பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை இவர் வீட்டின் 2-வது மாடியில் பூ பறிக்க சென்றுள்ளார்.
அப்போது ஹரிணி எதிர்பாரதவிதமாக கால் தடுமாறி மாடியில் இருந்து கீழே விழந்தார்.
இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஹரிணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மன்னார்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- மாநில அளவிலான போட்டியில் விளையாடி முதலிடமும் பிடித்துள்ளார்.
- ஏழ்மை குடும்பம் என்பதால் வில்-அம்பு வாங்க முடியாத நிலைக்கு மாணவி தள்ளப்பட்டுள்ளார்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அடுத்த மணலி ஊராட்சி சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பக்கிரிச்சாமி. கூலி தொழிலாளி.
இவரது மனைவி செம்மலர்.
இந்த தம்பதிக்கு அஜிஷா என்ற மகள் உள்ளார்.
இவர் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசினர் கலை கல்லூரியில் 3-ம் ஆண்டு தமிழ் இளங்கலை படித்து வருகிறார்.
அஜிஷா சிறு வயது முதலே வில்வித்தை மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பமாக இருந்தாலும் தன் மகள் ஆசைபட்டால் என்பதற்காக பக்கிரிச்சாமி அஜிதாவை திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் கராத்தே ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சியில் சேர்த்துள்ளார்.
மாணவியும் சிறப்பாக பயிற்சி பெற்று ஒன்றிய, மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு விளையாடி பதக்கம் வென்றுளார்.
மேலும், இவர் மாநில அளவிலான வில்வித்தை போட்டிக்கு தேர்வாகி சிறப்பாக விளையாடி முதலிடமும் பிடித்துள்ளார்.
தொடர்ந்து, இவர் சர்வதேச விளையாட்டு போட்டிக்கு தயாராகி உள்ளார்.
இந்நிலையில், போட்டியில் விளையாடு வதற்கு வில்-அம்பு கருவி வாங்க வேண்டிய நிலை உள்ளது.
ஆனால் இதன் மதிப்பு ரூ. 3 லட்சத்திற்கு மேல் உள்ளது. ஏழ்மை குடும்பம் என்பதால் வில்-அம்பு வாங்க முடியாத நிலைக்கு மாணவி தள்ளப்பட்டுள்ளார்.
எனவே, தமிழக அரசு வில்-அம்பு வாங்குவதற்கு நிதி உதவி அளித்தால் சர்வதேச போட்டியில் கலந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.
தனது கனவு நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், விளையாட்டுத்துைற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் மாணவி கோரிக்கை விடுத்துள்ளார்.
- ராஜாவை காணவில்லை என அவரின் உறவினர்கள் தேடி வந்தனர்.
- திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
திருவாரூர்:
திருவாரூர் அருகே கொரடாச்சேரி எருக்காட்டூரை அடுத்த நத்தம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராஜா (வயது 50).
இவர் திருவாரூரில் இளநீர வியாபாரம் செய்து வந்தார்.
இவரது மனைவி விசாலாட்சி.
இவர்களுக்கு விஜய், விமல் என்ற இரண்டு மகன்களும், வினிதா என்ற மகளும் உள்ளனர்.
அதே ஊரைச் சேர்ந்த வீரமணி, தனது மனைவியுடன் ராஜாவுக்கு தகாத உறவு இருந்ததாக சந்தேகம் அடைந்துள்ளார்.
இதனால் ராஜா மீது வீரமணி கோபத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி இரவு ராஜா மது அருந்திவிட்டு எருக்காட்டூர் வாய்க்கால் மதகு அருகில் நின்றுகொண்டு இருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த வீரமணி மற்றும் அவரது உறவினர் சரவணன் ஆகிய இருவரும் தகாத உறவு குறித்து ராஜாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை ராஜா மறுத்தாலும் சந்தேகம் தீராத நிலையில், இருவரும் சேர்ந்து ராஜாவை அருகில் இருந்த வாய்க்கால் தண்ணீரில் அமுக்கி கொலை செய்து, வாய்க்கால் மதகின் உள்ளே வைத்து மறைத்துள்ளனர்.
ராஜாவை காணவில்லை என அவரின் உறவினர்கள் தேடி வந்தனர்.
இந்நிலையில் எருக்காட்டூர் வாய்க்கால் மதகு உட்புறம் ராஜாவின் உடல் அழுகிய நிலையில் இருந்ததை சிலர் பார்த்துள்ளனர்.
இது தொடர்பாக கொரடாச்சேரி காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலை தொடர்பாக வீரமணி மற்றும் சரவணன் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தன் மனைவியுடன் தகாத உறவு இருப்பதாக கருதி கொலை செய்ததாக வீரமணியும், அவரது மைத்துனர் சரவணனும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
அதன் அடிப்படையில் கொரடாச்சேரி போலீசார் வீரமணி (வயது 40), சரவணன் (வயது 30) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.
உடனடியாக குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினரை பாராட்டினார்.
கள்ளக்காதல் காரணமாக இளநீர் வியாபாரி தண்ணீரில் அமிக்கி கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- குழந்தைகளின் நாக்கில் 3 முறை தேனை தொட்டு வைத்தனர்.
- பிள்ளையார் சுழி எழுதி அதற்கு பின்பு தமிழ் உயிர் எழுத்துக்கள் எழுதப்பட்டன.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில்பி ரசித்தி பெற்ற சரஸ்வதி அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவில் ஒட்டக்கூத்தரால் பாடல் பெற்ற ஆலயமாகும். ஒட்டக்கூத்தர் வாழ்ந்த ஊர் என்பதாலும் அவர் வழிபட்ட தலம் என்பதாலும் இந்த ஊருக்கு கூத்தனூர் என்று பெயர் பெற்றது.
இந்தக் கோவிலில் சரஸ்வதி பூஜை விழா நேற்று கொண்டாடப்பட்டது.
அதையொட்டி வெண்பட்டு ஆடை அணிந்து பக்தர்களுக்கு சரஸ்வதி அம்மன் அருள் பாலித்தார்.
தொடர்ந்து பாத தரிசன நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இன்று விஜயதமி யையொட்டி கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் சரஸ்வதி அம்மனுக்கு இன்று சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக அலங்காரங்கள் செய்யப்ப ட்டன.
அதனைத் தொடர்ந்து தங்களது குழந்தைகளுடன் வந்த ஏராளமான பெற்றோர்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்திய பின்னர், நெல்மணிகளை பரப்பி அதில் தங்களது குழந்தைகளை தமிழ் உயிர் எழுத்தின் முதல் எழுத்தான அவை எழுதவைத்து வித்யாரம்பம் செய்து வைத்தனர்.
முன்னதாக குழந்தைகளின் நாக்கில் மூன்று முறை தேனை தொட்டு வைத்த பின்பு அவர்கள் காதுகளில் மந்திரங்களை சொல்லி அதன் பின்னர் நெல்மணி களில் பிள்ளையார் சுழி எழுதி அதற்கு பின்பு தமிழ் உயிர் எழுத்துக்கள் எழுதப்பட்டன.
இன்று பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்த்தால் கல்வியறிவு மேன்மையையும் என்பது ஐதீகம் அதன் அடிப்படையில் குழந்தைகள் உடன் பெற்றோர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.
விஜயதசமி விழாவை ஒட்டி தமிழக முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து அம்மனை வழிபட்டனர்.
கூட்ட நெரிசலை தவிர்க்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்