search icon
என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி அருகே உள்ள திருநாட்டியத்தான்குடியில் கோட்டை காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டிருந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நீடாமங்கலம்:

    நீடாமங்கலம் அருகே நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாக போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் வியாழக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞா கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டிருந்தது. உற்சவர் குருபகவானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் நீடாமங்கலம் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் வியாழக்கிழமையை முன்னிட்டு குருதெட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

    இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

    • திடீரென மதியம் 3 மணி அளவில் இடைவிடாது மழை கொட்டி தீர்த்தது.
    • திடீரென பெய்த மழையால் குளிர்ந்த காற்று வீசியது.

    மன்னார்குடி:

    மன்னார்குடி அடுத்த திருமக்கோட்டை அருகே உள்ள வல்லூர், கோவிந்தநத்தம், தச்சன் வயல், ராதாநரசிம்ம புரம், ராஜகோபால புரம், தென்பரை, பாளையக்கோட்டை, மேலநத்தம், கன்னியாகுறிச்சி, எளவனூர் ஆகிய கிராமங்களில் காலையில் இருந்து வெயில் சுட்டெரித்தது.

    திடீரென மதியம் 3 மணி அளவில் இடைவிடாது மழை கொட்டி தீர்த்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த இந்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று பெய்த மழையால் குளிர்ந்த காற்று வீசியது.

    • லட்சுமணன் வலங்கைமான் நீதிமன்றத்தில் பணி புரிந்து வருகிறார்.
    • வீட்டின் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் அருகே உள்ள மணக்கோடு நல்லூர் என்ற பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன்.

    இவர் வலங்கைமான் நீதிமன்றத்தில் பணி புரிந்து வருகிறார்.

    இவரது மனைவி பாபநாசத்தில் இயங்கி வரும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் இருவரும் காலையில் வேலைக்குச் சென்று விட்டு மாலை 7 மணி அளவில் வீடு திரும்பினர்.

    அப்போது வீட்டின் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு, வீட்டிலிருந்த 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் பீரோவில் இருந்த ஐந்து பவுன் நகை மற்றும் 48,000 பணம் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது, தெரிய வந்துள்ளது.

    இது குறித்து வலங்கை மான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின் பேரில் சம்பவ இடத்தை வலங்கைமான் போலீசார் பார்வையிட்டனர்.

    பின்னர் திருவாரூர் மாவட்ட கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரே கைகள் பதிவு செய்யப்பட்டது.

    இது குறித்து வலங்கை மான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மன்னார்குடியில் தாசில்தார் அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆய்வு கூட்டம் நடந்தது.
    • உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இப்பகு தியில் சோதனை செய்ய வேண்டும்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தாசில்தார் அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆய்வு கூட்டம் நடந்தது கூட்டத்திற்கு உதவி கலெக்டர் நேர்முக உதவியாளர் ஜீவானந்தம் வட்ட வழங்க அலுவலர் மகேஷ் கூட்டுரவு சார் பதிவாளர் பிரபா ஆகியோர் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் மன்னார்குடி பகுதியில் முக்கிய ரேஷன் கடைகளில் மண்ணெ ண்ணெய் தட்டுப்பாடு, கோதுமை தட்டுப்பாடு கடை தெருவில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பது, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகங்களில் சோதனையை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து மன்னார்குடி நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத் தலைவர் பத்மநாபன்.

    நிர்வாகி வேல்முருகன் ஆகியோர் பேசினர்.

    உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இப்பகு தியில் சோதனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர் கடந்த மாதம் கூறப்பட்ட புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடி க்கை குறித்தும் விவாதிக்க ப்பட்டது.

    • தமிழ்நாட்டில் 3.50லட்சம் ஏக்கரில் குறுவை கதிர் வரும் நிலையில் கருகத் தொடங்கியுள்ளது.
    • மேகதாது அணை கட்டுமான பணியை தடுத்து நிறுத்த வேண்டும்.

    திருவாரூர்:

    கர்நாடகத்திலிருந்து காவிரியில் தண்ணீர் கிடைக்காததால் தமிழ்நாட்டில் 3.50லட்சம் ஏக்கரில் குறுவை கதிர் வரும் நிலையில் கருகத் தொடங்கியுள்ளது.

    சுமார் 15 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி துவங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் மத்திய அரசு நேரில் தலையிட்டு கர்நாடகாவில் உரிய தண்ணீரை பெற்று தமிழக விவசாயத்தை பாதுகாக்க வேண்டும்.

    மேகதாது அணை கட்டுமான பணியை தடுத்து நிறுத்த வேண்டும்.

    காவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்க நினைக்கும் மத்திய அரசு அதனை கைவிட வேண்டும்.

    தன்னாட்சி அதிகாரத்தோடு காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட அனுமதிக்க வேண்டும்.

    தமிழகத்தில் காவிரி நீர் கிடைக்காததால் பாதிக்கப்பட்ட குறுவை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ 35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி படுகை பாதுகாப்பு கூட்டி யக்கம் சார்பில் திருவாரூரில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் மாசிலாமணி தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் பழனிச்சாமி ஆர்ப்பா ட்டத்தினை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன், விவசாய சங்க மாவட்டச் செயலாளர் சேகர், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர்கள் பாஸ்கர், கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • புஷ்பாம்பாளுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
    • சிவஞானம் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த கீழநாகை பகுதியை சேர்ந்தவர் சிவஞானம் (வயது 73). இவரது மனைவி புஷ்பாம்பாள் (70). இவர்களுக்கு திருமணம் ஆகி 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் மற்றும் மருமகள், பேரக்குழந்தையுடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 18-ந் தேதி மாலை புஷ்பாம்பாளுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

    உடனடியாக அவரை மன்னார்குடி ஆஸ்ப த்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    புஷ்பாம்பாள் இறந்த துக்கத்தில் அவரது கணவர் சிவஞானம் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை சிவஞானம் திடீ ரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். உடனடியாக உறவினர்கள் அவரை மன்னார்குடி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இறப்பிலும் இணைபிரியாத இந்த தம்பதியின் பாசம் அப்பகுதி மக்களையும், குடும்பத்தின் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
    • கொரடாச்சேரி இன்ஸ்பெக்டர் சசிகலா வழக்குபதிவு செய்து அசன்அலியை கைது செய்தார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அத்திக்கடை அண்ணா தெருவை சேர்ந்தவர் அல்லா பிச்சை (வயது 60). இவரது மகன் அசன்அலி (வயது 37). இந்நிலையில் அல்லா பிச்சை குடிபோதையில் அருகில் குடியிரு ப்பவர்களி டம் தகராறு செய்தார். இதனை அசன்அலி தட்டி கேட்டுள்ளார்.

    அப்போது தந்தை மகன் இடையே தகராறு ஏற்பட்டது. சண்டையில் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டனர்.

    அப்போது அல்லாபிச்சை சுவரில் மோதியுள்ளார். இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கிய அல்லாபிச்சையை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அல்லாபிச்சை சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது தொடர்பாக அல்லா பிச்சையின் மனைவி ஹபிப்நிஷா கொடுத்த புகாரி பேரில், கொரடாச்சே ரி இன்ஸ்பெ க்டர் சசிகலா வழக்கு பதிவு செய்து மகன் அசன்அலியை கைது செய்தார்.

    • பிளாஸ்டிக் அல்லாத பொருட்களை கொண்டு விநாயகர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
    • விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, திருவாரூர் மாவட்ட தேசிய பசுமை படை, பாலம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து மாசில்லா இயற்கை வழி விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கான வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் நடனம் தலைமையில் நடைபெற்றது.

    பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் பிரச்சாரத்தின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார்.

    விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் வெளியிட்டார்.

    நிகழ்ச்சியில் எளிதில் மக்கக்கூடிய பிளாஸ்டிக் அல்லாத பொருட்களை கொண்டு விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டு சுற்றுச்சூழலையும், நீர் நிலைகளைகளையும் பாதுகாப்போம் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் ரவி, வசந்த், முன்னாள் கவுன்சிலர் மெய்கண்ட வேல், ஆசிரியர் மனோன்மணி, ராஜ்குமார், சண்முகம், தொழிற்சங்க பொறுப்பாளர்கள் காளிதாஸ், ராஜப்பன், விஜயராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • செல்லம்மாள் தனது மகன் ஜெயராமனுடன் அதே பகுதியில் வசித்து வந்தார்.
    • சாலையோரத்தில் இருந்த குட்டையில் தவறி விழுந்துள்ளார்.

    திருவாரூர்:

    திருமக்கோட்டை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி செல்லம்மாள் (வயது 75).

    மணி இறந்து விட்ட நிலையில் செல்லம்மாள் தனது மகன் ஜெயராமனுடன் அதே பகுதியில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் செல்லம்மாள் நேற்று இரவு அப்பகுதியில் சாலையில் நடந்து சென்றபோது, சாலையோரத்தில் இருந்த குட்டையில் தவறி விழுந்து மூழ்கி இறந்துள்ளார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆன்ரோஅஸ்வந்த் ஆரோக்கியராஜ் மற்றும் திருமக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெள்ளி அன்ன வாகனத்தில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபடுவர்.

    நீடாமங்கலம்:

    வலங்கைமானில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் ஆவணி மாத கடை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது.

    விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், வெள்ளி அன்ன வாகனத்தில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து, கோவிலின் அருகே உள்ள குளத்தில் தெப்ப திருவிழா நடைபெற்றது.

    விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

    இதேபோல், இக்கோ விலில் பங்குனி மாதம் நடைபெறும் பாடைக்காவடி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். விழாவின் போது விரதமிருந்த பக்தா்கள் பாடைக்காவடி எடுத்து தங்களது நோ்த்திக்கடனை நிறைவேற்றுவர்.

    நோயிலிருந்து குணமடைந்தவா்களை நெற்றியில் திருநீறு பூசி பச்சை பாடையில் படுக்க வைத்து உறவினா்கள் 4 போ் சுமந்து வந்து கோவிலை சுற்றி 3 முறை வலம் வந்து கொடிமரத்தின் முன்பாக பாடைக்காவடி இறக்கி வைப்பர்.

    பின்னர், பூசாரி பாடையில் படுத்திருப்ப வருக்கு திருநீறு பூசி அவரை எழச்செய்வாா். இதைத்தொடா்ந்து, அம்மனுக்கு அா்ச்சனை செய்து நோ்த்திக்கடனை நிறைவேற்றுவர்.

    மேலும், ரதக்காவடிகள், அலகுக்காவடிகள், பக்கஅலகுக் காவடிகள் உள்ளிட்ட பல்வேறு அலகுக்காவடிகள் எடுத்து வந்து பக்தர்கள் வழிபடுவர். அன்று நடைபெறும் செடில் சுற்றும் நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபடுவர்.

    • திருத்துறைப்பூண்டி உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் திருத்துறைப்பூண்டி நகரம், வேலூர், பாண்டி, குன்னலூர், இடையூர், சங்கேந்தி, உதயமார்த்தாண்டபுரம், கோட்டூர், விளக்குடி, பள்ளங்கோவில், ஆழிவலம், ஆண்டாங்கரை, குன்னூர், பாமணி, கொறுக்கை, கொக்கலாடி, பெருகவாழ்ந்தான், பாலையூர், சித்தமல்லி, பெருவிடைமருதூர், நாணலூர், தேவதானம், சிறுகளத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் பிரபு தெரிவித்தார்.

    ×