search icon
என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • மக்கள் பிரதிநிதிகள் கொண்ட குழு அமைத்து பனை நடுவதை மக்கள் இயக்கமாக செய்யப்படும்.
    • ஒரு லட்சம் பனை விதைகள் சேகரிக்கப்பட்டு நடப்படும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி தாலுகாவில் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் திட்டத்தின் படி, பனை விதைகள் சேகரிப்பு பணியை நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தொடங்கி வைத்தார்.

    இதுகுறித்து பாலம் செந்தில்குமார், முசிறி விதையோகநாதன் ஆகியோர் கூறுகையில்:-

    அனைத்து அரசுத்துறைகள், சேவை அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள் கொண்ட குழு அமைத்து பனை நடுவதை மக்கள் இயக்கமாக செய்யப்படும். இன்னும் ஒரு வாரத்தில் ஒரு லட்சம் பனை விதைகள் சேகரிக்கப்பட்டு அங்கேயே நடப்படும் என்றார்.

    • திருமக்கோட்டை நாளை மின்பாராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.
    • வல்லூர் மற்றும் பரசபுரம் ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மின் வினியோகம் இருக்காது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை 15-ந் தேதி( வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.

    எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திருமக்கோட்டை, மேலநத்தம், பாளையக்கோட்டை, தென்பரை, ராதாநரசிம்மபுரம், ராஜகோபாலபுரம், கோவிந்தநத்தம், பெருமாள் கோவில் நத்தம், மான் கோட்டை நத்தம்,

    வல்லூர் மற்றும் பரசபுரம் ஆகிய பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

    • நெல் அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி அரிசி மூட்டைகளாக தயாரானது.
    • லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன.

    திருவாரூர்;

    திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளிடம் இருந்து அறுவடை செய்த நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி அரிசி மூட்டைகளாக தயாரானது.

    இந்த அரிசி மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு, பொதுவினியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது.நேற்று திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன.

    அங்கு லாரிகளில் இருந்து அரிசி மூட்டைகளை தொழிலாளர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சரக்கு ரெயில் பெட்டிகளில் ஏற்றினர். இதைத்ெதாடர்ந்து சேலத்துக்கு 1,250 டன் புழுங்கல் அரிசி பொதுவினியோக திட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • 1 கோடி பனை விதைகள் நடும் திட்டம் 14 மாவட்டங்களில் நடைபெற உள்ளது.
    • 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகள் சேகரிக்கப்பட்டது.

    மன்னார்குடி:

    மன்னார்குடி பான்செக்க ர்ஸ் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் கடற்கரையோர பகுதிகளில் 1 கோடி பனை விதைக்கும் திட்டத்திற்காக பனை விதைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழ்நாடு நாட்டு நலப்பணி திட்ட குழுமம், தமிழ்நாடு பனை நல வாரியம் மற்றும் கிரீன் நீடா சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் ஆகியவை இணைந்து கடலோர பகுதிகளில் 1 கோடி பனை விதைகள் நடும் திட்டம் வருகிற 24-ந் தேதி 14 மாவட்டங்களில் நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு மன்னார்குடி பான்செக்க ர்ஸ் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அன்பரசி தலைமையில்,

    மூவாநல்லூர், கண்டி தம்பேட்டை, விக்ரபாண்டி யம், மதுக்கூர், மேலவந்தா ன்சேரி, வடபாதி, சேரன்கு ளம், களப்பாள், கோட்டூர், ஆலங்கோட்டை, உள்ளி க்கோட்டை, ஆலத்தூர் ஆகிய கிராமங்களில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகளை சேகரித்து மனோராவை சுற்றியுள்ள கடலோர பகுதிகளில் நடவுள்ளனர்.

    • கூரை வீட்டின் மேற்கூரையை பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
    • வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து தனமணி மீது விழுந்தது.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் அருகே பூந்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் தனமணி (வயது 55).

    கூலி தொழிலாளி சம்பவத்தன்று இவர், அதே கிராமத்தை சேர்ந்த அன்பரசி என்பவரின் கூரை வீட்டின் மேற்கூரையை பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது திடீரென்று அந்த வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து தனமணி மீது விழுந்தது.

    இதில் இடிபாடுகளில் சிக்கி அவர் படுகாயம் அடைந்தார்.

    அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆலங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்கைகாக அனுமதித்தனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • ரூ.14 கோடி மதிப்புள்ள நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.
    • எல்லை கற்கள் நடப்பட்டு தகவல் பதாகை வைக்கப்பட்டது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கோட்டூரில் கொழுந்தீஸ்வரசுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது.

    ரூ.14 கோடி மதிப்புள்ள இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் நாகப்பட்டினம் இணை ஆணையர் குமரேசன் தலைமையில், திருவாருர் உதவி ஆணையர் ராணி, திருவாரூர் ஆலய நிலங்கள் தனி தாசில்தார் லெட்சுமி பிரபா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு திருக்கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்து, எல்லை கற்கள் நடப்பட்டு தகவல் பதாகை வைக்கப்பட்டது.

    இப்பணியில் இத்திருக்கோவில் செயல் அலுவலர் சிவகுமார், கோட்டூர் சரக ஆய்வாளர் புவனேஸ்வரன், நில அளவையர்கள் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் ஈடுப்பட்டனர்.

    • தொடர் சிகிச்சை பெறுவது குறித்து ஆலோசனை பெற முடியாமல் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
    • மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு டாக்டர் ஒருவரை விரைவாக பணி நியமனம் செய்ய வேண்டும்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி அனைத்து சேவை சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகளின் சார்பில் முன்னாள் நகர மன்ற தலைவர் ராஜேந்திரன், வர்த்தக பிரமுகர் கருணாநிதி, சதுரங்க கழக மாநில இணைச்செயலாளர் பாலகுணசேகரன், ரோட்டரி சங்க பிரமுகர்கள் சாந்தகுமார் கருணாகரன், நேசக்கரம் தன்னார்வலர் குழு நிர்வாகிகள் எழிலரசன், பெலிக்ஸ் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீயிடம் அளித்த மனுவில் கூறியிப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் செயல்படும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பொது மருத்துவர் (எம். டி) பணியிடம் காலியாக உள்ளது.

    இதற்காக நீடாமங்கலத்தில் இருந்து மாற்றுப் பணியாக வாரத்தில் 3 நாட்கள் மட்டும் பொது மருத்துவர் ஒருவர் மன்னார்குடிக்கு வந்து செல்கிறார்.

    வந்து செல்வதில் ஏற்படும் சிரமங்கள், நடைமுறை சிக்கல் காரணமாக அந்த 3 நாட்களிலும் பல நேரங்களில் பொது மருத்துவர் இல்லாத நிலையே நீடிக்கிறது.

    இதனால், மாரடைப்பு ஏற்பட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையை நாடிவரும் நோயாளிகளுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை செய்து, அடுத்த கட்டமாக உரிய மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    குறைந்தபட்சம் இசிஜி எடுத்து, அது தொடர்பான வழிகாட்டல் செய்வதற்கூட முடியாத நிலை உள்ளது.

    இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி உள்ளிட்ட தொடர் சிகிச்சை பெறுவது குறித்து ஆலோசனை பெறவும் முடியாமல் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    மேலும், இம்ம மருத்துவமனையில் மாதத்துக்கு சராசரியாக 300 மகப்பேறு மற்றும் பொது அறுவை சிகிச்சை, மற்றும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன.

    அதுபோல் , மருத்துவமனைக்கு அன்றாடம் 1000 க்கும் மேற்பட்ட புறநோயாளிகள், 350 உள்நோயாளிகள் அன்றாடம் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

    இவர்களில் பலர் பொது மருத்துவர் இல்லாமல், குறித்த நேரத்துக்கு உரிய சிகிச்சை பெற முடியாமல் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

    எனவே, நோயாளிகளின் நலன் கருதி, நிரந்தரமாக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பொது மருத்துவர் ஒருவரை விரைவாக பணி நியமனம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னைக்கு அகல ரெயில் பாதை அமைத்தும் போக்குவரத்து இயக்கப்படவில்லை.
    • இதனால் அவர்களுக்கு நேரமும், பணமும் அதிகமாக விரயமாகிறது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி ரெயில் நிலையத்தை தென்னக ரெயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் நேரில் பாார் ஆய்வு செய்தார். அவரிடம் திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜன், மாவட்ட செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிரு ப்பதாவது:-

    திருத்துறைப்பூண்டி, வேதாரண்யத்தில் இருந்து வர்த்தகர்களும், வியாபாரிகளும் தொழில் நிமித்தமாகவும் மற்றும் பல்வேறு காரணங்களுக்காகவும் சென்னைக்கு அதிகமாக செல்ல வேண்டியுள்ளது.

    இந்நிலையில், வேதாரண்யம் மற்றும் திருத்து றைப்பூண்டி- அகஸ்தி யம்பள்ளியில் இருந்து சென்னைக்கு அகல ரெயில் பாதை அமைத்தும் ரெயில் போக்குவரத்து இயக்கப்படவில்லை.

    எனவே, அப்பகுதி மக்களும், வணிகர்களும் சென்னை செல்ல வேண்டும் என்றால் அதிக கட்டணம் கொடுத்து பஸ்களில் தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இதனால் அவர்களுக்கு நேரமும், பணமும் அதிகமாக விரயமாகிறது.

    அகல ரெயில் பாதை அமைக்கப்பட்ட பின்பும் சென்னைக்கு ரெயில் போக்குவரத்து தொடங்கவில்லை என்பது பொதுமக்களுக்கு மிகுந்த ஏமாற்றமாக உள்ளது.

    எனவே, பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக வேதாரண்யம் - சென்னைக்கு திருத்து றைப்பூண்டி வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கணபதி ஹோமம், லெட்சுமி ஹோமம், நவக்கிர ஹோமங்களுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
    • ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி- வேதை சாலை தச்சன்கு ளத்தில் உள்ள சுவேதவிநா யகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கடந்த 8-ந் தேதி கணபதி ஹோமம், லெட்சுமி ஹோமம், நவக்கிர ஹோமங்களுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

    தொடர்ந்து, நேற்று காலை 6-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து, மேளதாளங்கள் முழங்க புனிதநீர் அடங்கிய கடங்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சிவாச்சாரியார்கள் கோபுரகலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    விழாவில் பாரதிதாசன் பாரதியார் தெருமக்கள், மகேஸ்வரன், ராமு ஐயப்பன் செந்தில், கோவில் நிர்வாகிகள், கருணாநிதி ஓம் சக்தி கண்ணன், செயல் அலுவலர் முருகையன் உள்ளிட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • வெங்கட்ரமணசாமி கோவிலில் திருமஞ்சனம் வழிபாடு நடந்தது.
    • பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் கூத்தாநல்லூர் அருகே உள்ள சாத்தனூரில் வெங்கட்ரமணசாமி கோவில் உள்ளது.

    இக்கோவிலில் நேற்று சனிக்கிழமையையொட்டி திருமஞ்சனம் வழிபாடு நடைபெற்றது.

    அப்போது சாமிக்கு பால், தயிர், சந்தனம், தேன், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் வழங்கப்படும் தண்ணீர் சரியாக கிடைக்கவில்லை.
    • இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் எடையூர் ஊராட்சிக்குட்பட்ட மருத்துவமனை தெரு, புது தெரு, பொன்னாரத்தம்மன் கோவில் தெரு ஆகிய குடியிருப்பு பகுதிகளுக்கு கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    சில மாதங்களாக கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் வழங்கப்படும் தண்ணீர் சரியாக கிடைக்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்றுமுன்தினம் குடிநீர் வழங்கக்கோரி முத்துப்பேட்டை ஈ.சி.ஆர். சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தம், எடையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த பத்மநாபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அதில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர்.

    இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர்.

    இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • நீடாமங்கலம் துணைமின் நிலையத்தில் வருகிற 12-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    திருவாரூர்:

    நீடாமங்கலம் துணைமின் நிலையத்தில் வருகிற 12-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் நீடாமங்கலம், சித்தமல்லி, ரிஷியூர், ஒளிமதி, பச்சகுளம், பெரம்பூர், கானூர், பருத்திக்கோட்டை, சர்வமான்யம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் 12-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலநேத்திரம் தெரிவித்துள்ளார்.

    ×