search icon
என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • மாணவிகள் முதலமைச்சருடன் கைகுலுக்கி போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.
    • தூய்மை பணியாளர்கள் முதலமைச்சருக்கு வணக்கம் தெரிவித்தனர். பதிலுக்கு அவரும் வணக்கம் தெரிவித்தார்.

    திருவாரூர்:

    மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 24-ந்தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். பின்னர் கார் மூலம் மயிலாடுதுறை சென்று அங்கு நடந்த தருமபுரம் ஆதீன கல்லூரி விழாவில் கலந்து கொண்டார்.

    பின்னர் நாகை மாவட்டம் திருக்குவளை அரசு பள்ளியில் விரிவாக்கம் செய்யப்பட்ட காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். நேற்று நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 4 மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுடன் களஆய்வு நடத்தினர்.

    பின்னர் திருவாரூரில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு சென்று தங்கினார். இன்று காலை நடை பயிற்சி மேற்கொள்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டார்.

    திருவாரூர் வடக்கு வீதி வழியாக சென்று தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான கமலாலயக் குளத்தை சுற்றி தெற்கு மட வளாகம் வழியாக மீண்டும் வீட்டிற்கு வந்தார்.

    முன்னதாக முதலமைச்சர் நடை பயிற்சி மேற்கொண்ட போது வழிநெடுகிலும் பொது மக்கள் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

    மாணவிகள் முதலமைச்சருடன் கைகுலுக்கி போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.

    தூய்மை பணியாளர்கள் முதலமைச்சருக்கு வணக்கம் தெரிவித்தனர். பதிலுக்கு அவரும் வணக்கம் தெரிவித்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகராட்சி அலுவலகம் அருகே நடந்து வந்து கொண்டிருந்த போது பொது மக்கள் அவருக்கு புத்தகங்களை பரிசளித்தனர்.

    இதையடுத்து திருவாரூரில் நடக்கும் செல்வராஜ் எம்.பி. இல்ல திருமணவிழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்ததும் கார் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு செல்கிறார்.

    • கார் மூலம் திருச்சி செல்லும் முதல்-அமைச்சர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
    • முதல்-அமைச்சரின் 4 நாள் பயணம் நாளையுடன் நிறைவடைகிறது.

    திருவாரூர்:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு 4 நாள் பயணமாக வந்துள்ளார்.

    நேற்று திருக்குவளையில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர், நேற்று மாலை நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து ஆய்வு செய்தார்.

    இன்று நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திருவாரூர், நாகை, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.

    ஆய்வு பணிகளை முடித்துக் கொண்டு திருவாரூர் வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சன்னதி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் தங்குகிறார்.

    மாலையில் சிறிது ஓய்வெடுக்கும் முதலமைச்சர் நாளை (27.8.23) திருவாரூர் அருகில் உள்ள பவத்தரமா ணிக்கத்தில் நடைபெறும் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்துகிறார்.

    அதனைத் தொடர்ந்து கார் மூலம் திருச்சி விமான நிலையம் செல்லும் முதலமைச்சர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெற்ற நான்கு நாள் பயணம் நாளையுடன் நிறை வடைகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் வருகை ஒட்டி திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு ள்ளது. மேலும் நாளை மாலை வரை திருவாரூர் பகுதியில் டிரோன்கள் பறக்க கூடாது என மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.

    • எந்த ஒரு பணி கொடுத்தாலும் அதனை முதலில் செய்வது இளைஞர் அணியாக தான் உள்ளது.
    • நுழைவு தேர்வை ரத்து செய்தவர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே உள்ள காட்டூர் கலைஞர் கோட்டத்தின் அருகில் தி.மு.க. மாவட்ட இளைஞரணி சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட அமைப்பாளர் பனங்குடி குமார் தலைமையில் நடைபெற்றது.

    இதில் தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும் அமைச்சரு மான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.

    இதில் தொழில்துறை அமைச்சர் டி. ஆர்.பி. ராஜா, திருவாருர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இளையராஜா உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

    இந்தக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    தி.மு.க.வில் 23 அணிகள் உள்ளன.

    இவற்றில் கட்சி எந்த ஒரு பணி கொடுத்தாலும் அதனை முதலில் செய்வது இளைஞர் அணியாக தான் உள்ளது.

    இதனை மேடையில் உள்ள தகவல் தொழில்நுட்ப அணி செயலாளரும் ஒத்துக் கொள்வார் என்று நினைக்கிறேன்.

    தமிழகத்தில் நுழைவுத் தேர்வை ரத்து செய்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி.

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வு வரவுமில்லை விடவும் இல்லை.

    அவருக்கு பின்னால் வந்த ஆட்சியில் தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது.

    நீட் தேர்வை ரத்து செய்யும் வரை ஒவ்வொருவரும் போராட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • காலை உணவு திட்டத்தை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார்.

    மன்னார்குடி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருக்குவளையில் உள்ள அரசு பள்ளியில் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்தியதை தொடர்ந்து, மன்னார்குடி அடுத்த உள்ளிக்கோட்டை அருகே சம்மட்டிக்குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுக்கு உணவு பரிமாறி அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார்.

    இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையா மங்கலம் பாலு, ஒன்றிய செயலாளர்கள் முத்துவேல், சித்தேரி சிவா, இளைஞர் மாவட்ட துணை செயலாளர் முருகானந்தம், இளைஞர் அணி ஜெயகாந்தன், சிலம்பரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • சிவாலயங்களில் வியாழக்கிழமையையொட்டி குருதட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடை பெற்றது.

    திருவாரூர்:

    நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞாகணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டது.

    உற்சவர் குருபகவானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நீடாமங்கலம் பகுதியில் உள்ள சிவாலயங்களில் வியாழக்கிழமையையொட்டி குருதட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதேபோல் நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

    • கர்த்தனாதபுரம் ெரயில் பாதையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார்.
    • மன்னை எக்ஸ்பிரஸ் ெரயிலில் அடிபட்டு உயிரிழந்ததும் தெரியவந்தது.

    திருவாரூர்:

    மன்னார்குடி அருகே உள்ள கர்த்தனாதபுரம் ெரயில் பாதையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் தஞ்சை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே சோழங்கநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் என்பதும், அவர் கடந்த இரண்டு நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளதும், நேற்று முன்தினம் இரவு மன்னார்குடியில் இருந்து சென்னை சென்ற மன்னை எக்ஸ்பிரஸ் ெரயிலில் அடிபட்டு உயிரிழந்ததும் ெதரியவந்தது. இதையடுத்து தஞ்சை ெரயில்வே போலீசார், ஆனந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடியில் உள்ள அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முனீஸ்வரர் கோவிலில் இரவு வழக்கம்போல் பூஜைகள் முடிந்தது பூட்டி சென்றனர்.
    • காலை திறக்க வந்தபோது கோவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    திருவாரூர்:

    முத்துப்பேட்டை வெள்ளகுளம் அருகே உள்ள முனீஸ்வரர் கோவிலில் நேற்றுமுன்தினம் இரவு வழக்கம்போல் பூஜைகள் முடிந்தது.

    பின்னர் கோவிலை பூட்டி விட்டு நேற்று காலை திறக்க வந்தபோது கோவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் கோவில் உள்ளே சென்று பார்த்த போது மர்ம நபர்கள் அங்கிருந்த கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.5 ஆயிரத்தை திருடி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    அதேபோல் முத்துப்பேட்டையை அடுத்த தில்லைவிளாகம் துரைதோப்பு கிராமத்தில் அய்யனார் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு கோவில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்ைத திருட முயன்றனர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    முத்துப்பேட்டையை அடுத்த பின்னத்தூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து நேற்று இரவு மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.3 ஆயிரத்தை திருடி சென்றனர்.

    இதுகுறித்து கோவில் நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில் எடையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தகவல் அறிந்ததும் முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், முத்துப்பேட்டை தாசில்தார் மகேஷ் குமார் ஆகியோர் சம்பவ நடந்த 3 கோவில்களையும் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சதுர்த்தி விழாவிற்காக ஒரு அடி முதல் 10 அடி உயரம் வரை சிலைகள் தயாரிக்கப்படுகிறது.
    • ரசாயன பொருட்கள் எதுவும் கலங்காமல் கிழங்கு மாவு கொண்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றது.

    திருவாரூர்:

    சதுர்த்தி விழாவையொட்டி திருவாரூரில், விற்பனைக்கு விநாயகர் சிலைகள் தயார் நிலையில் உள்ளது.

    விநாயகர் சதுர்த்தி விழா விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாப்படும் பண்டிகையாக இருந்து வருகிறது.

    விழாவையொட்டி இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகளை பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி, பின்னர் வாகனங்களில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.

    இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 18-ந் தேதி நடக்கிறது.

    சதுர்த்தி விழாவிற்காக திருவாரூர் சேந்தமங்கலத்தில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பொம்மை தயாரிக்கும் தொழிலாளர்கள் விநாயகர் சிலைகளை வடிவமைத்து வர்ணம் தீட்டி வருகின்றனர்.

    இதற்கான பணிகள் விறு, விறுப்பாக நடந்து வருகிறது.

    பல்வேறு வண்ணங்களில் அனைவரும் கவர்ந்து இழுக்கும் வகையில் கிழங்கு மாவினை கொண்டு 10 அடி உயரம் வரையில் விநாயகர் சிலைகள் தயரித்து விற்பனைக்கு தயார் நிலையில் வைத்துள்ளனர்.

    இதுகுறித்து ராஜஸ்தான் மாநில தொழிலாளி புறான் கூறுகையில், நான் திருவாரூருக்கு வந்து 18 ஆண்டுகள் ஆகின்றது. சுவாமிகள் உள்பட அனைத்து விதமான பொம்மைகள் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.

    இதில் விநாயகர் சதுர்த்தி என்பது மிக சிறப்புக்குரியது.

    சதுர்த்தி விழாவிற்காக ஒரு அடி முதல் 10 அடி உயரம் வரை சிலைகள் தயாரிக்கப்படுகிறது. எளிதில் கரைய கூடிய வகையில் ரசாயன பொருட்கள் எதுவும் கலங்காமல் கிழங்கு மாவு கொண்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றது.

    கடந்த 3 மாதங்களாக இந்த பணி மேற்கொண்டு வருகிறோம். கை, கால், உடல், தலை என தனித்தனியாக தயாரித்து, அதனை இணைத்து விநாயகர் சிலை உருவாக்கப்படுகிறது.

    ஒவ்வொரு சிலைகளும் ஒவ்வொரு வடிமைப்பில் உருவாக்கியுள்ளோம். நம்பிக்கை திருவாரூர் மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சிலைகளை வாங்கி செல்கின்றனர். கடவுள் சிலைகள் எங்கள் குடும்பத்தினை பாதுகாத்து வருகிறது. இந்த ஆண்டு நிச்சயம் சிறப்பான விற்பனை நடைபெறும் என்ற நம்பிக்கையில் உள்ளேன்.

    • நீடாமங்கலம் முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
    • பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது

    திருவாரூர்:

    நீடாமங்கலம் கீழத்தெரு முருகன் கோவிலில் சஷ்டியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு சஷ்டி யாகம் நடந்தது.அதனைத்தொடர்ந்து விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், பாலதண்டாயுதம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • வீட்டில் மின்மோட்டாரை தங்கராசு இயக்கினார்.
    • அப்போது எதிர்பாராவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பிச்சன் கோட்டகம் வடபாதி முதலியார் தெருவை சேர்ந்தவர் தங்கராசு (வயது50).

    இவர் திருத்துறைப்பூண்டியில் பழைய இரும்பு கடை நடத்தி வந்தார். நேற்று காலை தனது வீட்டில் மின்மோட்டாரை தங்கராசு இயக்கினார்.

    அப்போது எதிர்பாராவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தங்கராசு மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே தங்கராசு இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தங்கராசு குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த தங்கராசுவுக்கு சித்ரா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    • ஜெய் பஞ்சமுக விநாயகருக்கு திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • சிறப்பு அலங்காரத்தில் ஜெய் வராகிஅம்மன் காட்சியளித்தார்.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் அருகே உள்ள கீழ அமராவதி கிராமத்தில் அக்ரஹாரத்தில் புதிதாக ஜெய் வராகிஅம்மன் கோவில் கட்டப்பட்டது.

    நேற்று கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஜெய் பஞ்சமுக விநாயகருக்கு திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் ஜெய் வராகிஅம்மன் காட்சியளித்தார்.

    இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • ஏலத்தின் போது வாகனங்களின் உரிமையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
    • முன்பணம் ஏலம் முடிந்த பின்னர் திரும்ப வழங்கப்படும்.

    திருவாரூர்:

    குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 103 வாகனங்கள் ஏலம் என உதவி ஆணையர் (கலால்) அழகர்சாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1979 மற்றும் மதுவிலக்கு-ஆயத்தீர்வை விதிகளின்படி பல்வேறு குற்ற வழக்குகளில் பயன்படுத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட 103 வாகனங்களை பொது ஏலம் மூலம் விற்பனை செய்து அரசுக்கு ஆதாயம் செய்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி பொது ஏலமானது திருவாரூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டு, திருவாரூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (மதுவிலக்கு அமல்பிரிவு), தஞ்சாவூர் அரசு தானியங்கி பணிமனையின் பொறியாளர் ஆகியோர் முன்னிலையில் திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வருகிற 30-ந்தேதி காலை 10 மணியளவில் பொது ஏலம் நடைபெறவுள்ளது.

    பொது ஏலத்தின் போது வாகனங்களின் உரிமையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வாகன உரிமையாளர்கள் ஏலம் கோராதபட்சத்தில் பொது ஏலம் விடப்படும்.

    ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் அவர்களது ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஓட்டுனர் உரிமத்துடன் முன்பணத்தொகையாக ரூ.1000 வருகிற 30-ந்தேதி அன்று காலை 10 மணியளவில் நேரில் செலுத்த வேண்டும்.

    வாகனங்களை பொது ஏல அடிப்படையில் ஏலம் எடுத்து கொள்ளலாம்.

    அவ்வாறு ஏலம் எடுக்காத நிலையில் ஏலத்தில் கலந்து கொள்ள செலுத்தப்பட்ட முன்பணம் ஏலம் முடிந்த பின்னர் திரும்ப வழங்கப்படும்.

    அதிக விலை கோருபவர்களுக்கு வாகனங்கள் ஏலம் விடப்படும் என்பதால் விருப்பமுடைய பொதுமக்கள் அனைவரும் ஏலத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×