search icon
என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • கடந்த 10-ந்தேதி வாய்க்கால் வெட்டும் பணி தொடங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சி, நாச்சிகுளம் வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக சேவகர் நாச்சிகுளம் தாஹிர் கோரிக்கை விடுத்தார்.

    அதனைத் தொடர்ந்து, கடந்த 10-ந் தேதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த வாய்க்கால் வெட்டும் பணி நீர்வளத்துறையால் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பணிகள் குறித்து திருத்துறைப்பூண்டி நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் சங்கர் நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது சமூக சேவகர் நாச்சிகுளம் தாஹிர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • மன்னார்குடி அருகே பாமணி நாகநாதசாமி கோவில் நிறுத்தத்தில் பஸ் நின்றது.
    • கல்லால் பஸ்சின் பின்புற கண்ணாடியை உடைத்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் இருந்து நேற்று முன்தினம் மாலை ரிஷியூர் நோக்கி அரசு நகர பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் முரளி (வயது 42) ஓட்டிச்சென்றார்.

    கண்டக்டராக திருமால் முருகன் (50) பணியில் இருந்தார். மன்னார்குடி அருகே பாமணி நாகநாதசாமி கோவில் நிறுத்தத்தில் பஸ் நின்றது.

    அப்போது பஸ்சில் ஏறிய 3 பேர், பஸ்சில் பயணம் செய்த பாமணி செருமங்கலம் பகுதியை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் ஹரிஷ்குமார் (18), முகேஷ் (18) ஆகியோரை தாக்கி விட்டு கீழே இறங்கி விட்டனர்.

    பின்னர் கல்லால் பஸ்சின் பின்புற கண்ணாடியை உடைத்தனர்.

    இதையடுத்து பஸ் டிரைவர் முரளி பஸ்சை மன்னார்குடி தாலுகா போலீஸ் நிலையத்துக்கு ஓட்டிச்சென்று அங்கு புகார் அளித்தார்.

    அதன்பேரில் மன்னார்குடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் வழக்கு தொடர்பாக பாமணி பகுதியை சேர்ந்த அஜய்குமார் (19), ஆதிநிதி (18), பிரகாஷ் (19) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    • மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் கலவரத்தை கட்டுப்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • கம்யூனிஸ்டு கட்சியின் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவாரூர்:

    மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் கலவரத்தை கட்டுப்படுத்தக்கோரி திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாரிமுத்து எம்.எல்.ஏ., விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் மாசிலாமணி, கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் கேசவராஜ், மாவட்ட பொருளாளர் தவபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 208 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர்.
    • வெற்றிபெற்ற மாணவர்கள் பரிசுத்தொகை மற்றும் கேடயங்களை பெற்றனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், பொது மக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 208 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அளித்தனர்.

    பொதுமக்களிடம் மனு க்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

    அதனைத்தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்தை சார்ந்த மாணவர்களை கூடைப்பந்து போட்டியில் மாநில அளவில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டில் வெற்றி பெற்று பரிசுத்தொகை மற்றும் கேடயத்தை பெற்றதையொட்டி மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ பாராட்டினார்.

    இக்கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.பி.சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அடையாளம் தெரியாத வாகனம் தொழிலாளி மீது மோதியது.
    • இதில் சம்பவ இடத்திலேயே சிவா பரிதாபமாக உயிரிழந்தார்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் சிவா (வயது 56). கூலி தொழிலாளி.

    இவர் தினமும் அதிகாலை எழுந்து வீட்டில் இருந்து கிளம்பி கிழக்கு கடற்கரை சாலை வழியாக செம்படவன்காடு ரவுண்டா அருகே உள்ள டீ கடைக்கு நடந்து சென்று டீ குடித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

    அதேபோல், இன்றும் அதிகாலை எழுந்து வீட்டில் இருந்து புறப்பட்டு கடையில் டீ குடித்துள்ளார். பின்னர், கடையில் இருந்து திரும்பி வரும் வழியில் செம்படவன்காடு கோவில் ஆர்ச் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து வரும்போது அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே சிவா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனை கண்ட அருகில் உள்ளவர்கள் முத்துப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், தொழிலாளி மீது மோதிச்சென்ற வாகனம் குறித்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கனமழையால் அறுந்து தொங்கிய மின்கம்பி மாணவன் மீது உரசியது.
    • பொதுமக்கள் தகவல் தெரிவித்ததையடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் ஜலாலியல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுல்தான் சலா வுதீன். இவர் சவுதி அரேபியாவில் பணியாற்றி வருகிறார். இவ ருடைய மனைவி நஜிபு நிஷா. இவருடைய மகன் முகமது முஜமில் (வயது 11). 6-ம் வகுப்பு மாணவன்.

    சுல்தானா சலாவுதீன் சவூதி அரேபியாவில் வேலை பார்த்து வந்த நிலையில் முகமது முஜமில் தாயுடன் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை முதல் கரு மேகங்கள் சூழ்ந்து காணப்பட்ட நிலையில் இரவு 7 மணி அளவில் காற்றுடன் கூடிய கனமழை பெய்த நிலையில் பட்டக்கால் தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த முகமது முஜமில் ஜலாலி யல் தெருவில் உள்ள தனது வீட்டிற்கு தனது மிதிவண்டியில் வந்துள்ளார். அப்போது கனமழையால் அறுந்து தொங்கிய மின் கம்பி அவர் மீது உரசியதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.

    இதனை தொடர்ந்து அக்கம்ப க்கத்தி னர் உடனடி யாக ஓடி வந்து சிறுவனை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வம னைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மின் கம்பி அறுந்தது குறித்து மின்சார வாரியத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்த தையடுத்து மின்சாரம் துண்டிக்கப்ப ட்டது. மருத்துவமனையில் முகமது முஜமிலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இச்சம்பவம் அப்பகு தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • காமராஜ் மீது லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
    • 6 பேர் மீது 810 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை திருவாரூர் மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. ஆட்சியில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ்.

    தற்போது நன்னிலம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் இவர் 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் அமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அவரது பெயரிலும், அவரது மகன்கள் இனியன், இன்பன் மற்றும் அவரது நண்பர்களான சந்திரகாசன், கிருஷ்ணமூர்த்தி, உதயகுமார் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து மொத்தம் ரூ.58 கோடியே 44 லட்சத்து 38 ஆயிரத்து 252 அளவிற்கு வருமானத்திற்கு அதிகமாக முறைகேடாக சொத்து சேர்த்ததாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருவாரூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இது தொடர்பாக 51 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

    காமராஜர் அமைச்சராக இருந்த கால கட்டத்தில் சந்திரகாசன், கிருஷ்ண மூர்த்தி, உதயகுமார் ஆகியோரின் உடந்தையுடன் தஞ்சாவூரில் என்.ஏ.ஆர்ச் ஓட்டல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் பெயரில் சொத்துக்களை வாங்கி அந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் அவரது மகன்களான இனியன், இன்பன் ஆகியோரின் பெயர்களில் தஞ்சாவூரில் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் (ஸ்ரீவாசுதேவ பெருமாள் ஹெல்த் கேர் லிமிடெட்) என்ற பெயரில் நவீன பன்னோக்கு மருத்துவமனையை கட்டியதும் தெரிய வந்தது.

    இந்த வகைகளில் ரூ.127 கோடியே 49 லட்சத்து 9 ஆயிரத்து 85 அளவிற்கு தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளார்.

    இந்த வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு கோர்ட்டில் வழக்கு தொடர சபாநாயகரிடம் அனுமதி பெற்று இன்று திருவாரூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சிறப்பு கோர்ட்டில் முன்னாள் அமைச்சர் காமராஜ், அவரது மகன்கள் இனியன், இன்பன் மற்றும் சந்திரகாசன், கிருஷ்ண மூர்த்தி, உதயகுமார் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறும் போது, இது போன்று ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் அனைவர் மீதும் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

    • சுய உதவி குழுவில் கடன் வாங்கி அதனை வீட்டில் வைத்துள்ளார்.
    • இளம்பெண் தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருவாரூர்:

    திருவாரூர் மணிகண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயமோகன். இவரது மனைவி சூர்யா (வயது 28).

    இருவரும் விவசாய தொழிலாளிகள்.

    சூர்யா மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கி அதனை வீட்டில் வைத்துள்ளார். இந்த பணத்தை மனைவி சூர்யாவுக்கு தெரியாமல் கணவர் ஜெயமோகன் எடுத்துச் சென்று செலவு செய்ததாக கூறப்படுகிறது.

    இதனால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    மகளிர் சுய உதவிக் கடன் தொகையினை கணவர் செலவு செய்து விட்டதால் எப்படி திரும்ப செலுத்துவது என்ற கவலையில் இருந்த சூர்யா கடந்த சிலதினங்களுக்கு முன்பு வீட்டில் யாருக்கும் தெரியாமல் மண்ணெண்ணெய் உடலில் ஊற்றிக் கொண்டு தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார்.

    தீயின் வெப்பத்தால் வலி தாங்க முடியாமல் சூர்யா அலறிக் கொண்டே கீழே விழுந்தார்.

    இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சூர்யா சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது தொடர்பாக திருவாரூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகளிர் சுய உதவிக் குழு கடன் பணத்தை கணவர் செலவு செய்து விட்டதால் எப்படி திரும்ப செலுத்துவது என்ற விரக்தியில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நேற்று முன்தினம் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றுள்ளார்.
    • கொள்ளை நடந்த வீட்டில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே ஆண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன்.

    இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்.

    இவரது மனைவி ராஜலெட்சுமி.

    இவர்களுக்கு முருகபாண்டியன் என்ற மகனும், கீர்த்திகா என்ற மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் நவநீதகிருஷ்ணன் தற்பொழுது திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பாதுகாப்பு ஊழியராக தற்காலிகமாக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் மாலை ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுள்ளார்.

    கோவில் தரிசனத்தை முடித்துக் கொண்டு நேற்று மாலை குடும்பத்தினருடன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டின் பீரோவில் இருந்த 40 சவரன் தங்க நகைகள், 70 ஆயிரம் ரொக்கம், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

    அதனையடுத்து திருவாரூர் தாலுகா காவல்துறை யினருக்கு நவநீதகிருஷ்ணன் தகவல் கொடுத்துள்ளார்.

    தகவலின் அடிப்படையில் திருவாரூர் தாலுகா காவல்துறையினர் திருட்டு நடந்த வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் ஆண்டிபாளையம் பகுதி முழுவதுமாக காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    வீட்டின் பின்பக்க கதவு மற்றும் பீரோ கடப்பாரையால் நெம்பப்பட்டு உடைத்து இந்த திருட்டு சம்பவம் நடைபெற்று இருப்பதாகவும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் நள்ளிரவு நேரத்தில் யார் வந்திருக்கிறார்கள் என்ற கோணத்திலும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தன்னுடைய மகளின் திருமணத்திற்காக தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் சேர்த்து வைத்தி ருந்ததாகவும், தற்பொழுது இவை அனைத்தும் திருட்டுப் போய் இருப்பது நவநீதகிருஷ்ணன் குடும்பத்தினர் இடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

    • அடியக்கமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பருத்தியை எடுத்து வந்து காத்திருக்கின்றனர்.
    • பொருளாதார நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் கோடை சாகுபடியாக இந்த ஆண்டு 47 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆரம்பம் முதலே மழை காற்று உள்ளிட்ட இயற்கை சீற்றத்தின் காரணமாக பருத்தி சாகுபடி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்பொழுது மீதமுள்ள பருத்தி எடுக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதனையடுத்து கொள்முதல் செய்யப்பட்ட பருத்தியை எடுத்துக்கொண்டு திருவாரூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலத்திற்கு செல்கின்றனர். அங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகா கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகை தந்து விவசாயிகளிடமிருந்து பருத்தியை கொள்முதல் செய்கின்றனர்.

    இதற்காக பருத்தியை விற்பனை செய்வதற்காக விவசாயிகள் நேற்று இரவு முதல் மாங்குடி, மாவூர், கொரடாச்சேரி, கமலாபுரம், அத்திப்புலியூர், அடியக்கமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனத்தின் மூலமாக பருத்தியை எடுத்து வந்து காத்திருக்கின்றனர்.

    திருவாரூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கதவை திறக்காததன் காரணமாக விவசாயிகள் திருவாரூர் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூரிலிருந்து புலிவலம் வாளவாக்கால் ரவுண்டானா வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு தங்களது வாகனங்களில் பருத்தியை வைத்து கொண்டு இரவிலிருந்து காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.

    இதன் காரணமாக வாகனத்திற்கு இரட்டை வாடகை கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு மீண்டும் பொருளாதார நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    ஆகவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு விவசாயிகளை காக்க வைக்காமல் முன்கூட்டியே ஒழுங்கு முறை விற்பனை கூடத்தை திறந்து வைத்து பருத்தியை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் எழுத்தராக பணிபுரிந்துள்ளார்.

    திருவாரூர்:

    திருவாரூர் நகரத்தி ற்குட்பட்ட காகிதக்காரத் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகரன் , இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    சந்திரசேகரன் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணி ப்பாளர் அலுவ லகத்தில் உள்ள மாவட்ட குற்றப் பதிவேடுகள் கூடத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியில் இருந்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி திருவாரூர் நகர காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் மாவட்ட காவல் கண்காணி ப்பாளர் அலுவலகத்திற்கு பணிக்குச் சென்ற சந்திரசேகரன் மதிய உணவு அருந்திவிட்டு தனது பணிகளை கவனித்துக் கொண்டிருந்த போது திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்து ள்ளார்.

    இதனை யடுத்து சக பணியாளர்கள் அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளர். அங்கு அவரை பரிசோ தித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரி ழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    பணியின் போது மாரடைப்பில் உயிரிழந்த 58 வயதான சந்திரசேகரன் இதற்கு முன்பு கூத்தாநல்லூர் காவல் நிலையம் திருவாரூர் தாலுகா காவல் நிலையம் நிலைய எழுத்தராக பணிபுரிந்து ள்ளார். கடந்த 4 வருடங்களாக திருவாரூர் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் அலுவலகத்தி ல் உள்ள மாவட்ட குற்ற பதிவேடுகள் கூடத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பா ளராக ஒரு வருடம் பணியில் இருந்த கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரிந்த சிறப்பு உதவி ஆய்வாளர் மாரடைப்பில் உயிரிழந்த நிகழ்வு மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ஆம் நாளினையே “தமிழ்நாடு நாளாக” இனி கொண்டாடப்படும்.
    • முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000-, மூன்றாம் பரிசு ரூ.5,000-வீதம் வழங்கப்பெறும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தாய்த்தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ஆம் நாளினையே "தமிழ்நாடு நாளாக" இனி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வறிவிப்பின் படி தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தி பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெற உள்ளன.

    இதன்படி, வருகிற 18-ந் தேதி தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் வருகிற 13-ந் தேதி (வியாழக்கிழமை ) அன்று திருவாரூர் மாவட்ட த்திலுள்ள 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளி, மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு காலை 9.30 மணிக்கு திருவாரூர் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளியில் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெறவுள்ளன.

    போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களை திருவாரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தேர்வு செய்து அனுப்புவார். கட்டுரை போட்டிக்கு, தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்தமிழறிஞர் கலைஞரின் சுவடுகள், பேச்சு போட்டிக்கு தமிழ்த் திரை உலகத்தை புரட்டிப்போட்ட முத்தமி ழறிஞர் கலைஞரின் எழுதுகோல் தலைப்பு ஆகும்.

    போட்டியில் வெற்றி பெறும் பள்ளி மாணவர்க ளுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000-, மூன்றாம் பரிசு ரூ.5,000-வீதம் வழங்கப்பெறும்.

    பள்ளிகளில் பயிலும் மாணவ ,மாணவிகள் இப்போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×