என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
திருவாரூர்
- மூலவர் குருபகவானுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டிருந்தது.
- நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் வியாழக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் சூழலியம்மன், மூலவர் குருபகவான்.
கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ் வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டடது.
மூலவர் குருபகவானுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டிருந்தது.
உற்சவர் குருபகவானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர் கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் நீடாமங்கலம் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் குரு தெட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக் கப்பட்டது.
இதேபோல் நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
இதில் திரளா பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
- புகையிலை விற்ற கடைக்கு சீல் வைத்தனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கடைவீதியில் உணவு பாதுகாப்பு அலுவலர் கர்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம், சப்-இன்ஸ் பெக்டர்கள் சந்தோஷ், ஹரி மற்றும் அலுவலர்கள் கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை நடத்தினர்.
அப்போது மேலராஜ வீதியில் சண்முகம் என்பவரின் பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.
அதைதொடர்ந்து புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்தனர்.
இதையடுத்து நீடாமங்கலம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ரிகள் எச்சரித்தனர் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
- மழைகாலங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
- குடிநீர் பிரச்சினையை தீர்க்க குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியை கட்ட வேண்டும்.
திருத்துறைப்பூண்டி:
உதயமார்தாண்டபுரம் ஊராட்சியில் நேற்று உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நாச்சிகுளம் கிளை செயலளார் அலாவுதீன் தலைமையிலான நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவரிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:-
உதயமார்தாண்டபுரம் ஊராட்சிக்கு துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அனுமதி கிடைத்து அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையை ஊராட்சி நிர்வாகம் விரைவாக எடுக்க வேண்டும்.
வரும் மழைகாலங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஊராட்சியில் உள்ள அனைத்து இணைப்பு சாலைகளை விரைந்து முடிக்க வேண்டும். குடிநீர் பிரச்சினையை முழுமையாக தீர்க்க குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியை கட்ட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
- கொள்முதல் நிலையம் ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- நெல் மூட்டைகள் தேக்கமடைவது முழுவதுமாக தவிர்க்கப்படும்
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து 13 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முதல் சரக்கு ரெயில் போக்குவரத்து தொடங்கியது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப க்கழகம் மூலமாக 21 வேகன்களில் 1000 டன் நெல் மூட்டைகள் ஈரோடு க்கு அனுப்பி வைக்க ப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று செய்தியாளரிடம் ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்கத்தின் பொது ச்செயலாளர் இளவரி தெரிவித்ததாவது:-
சரக்கு கொட்டகை பயன்பாட்டிற்கு வருவதற்கு பெரிதும் துணை நின்ற ரெயில்வே அதிகாரி ஹரிக்குமார், அவர்களுக்கும் திருச்சி கோட்ட மேலாளருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
மேலும் திருத்துறைப்பூண்டியில் ரயில் தலைப்பு (வேகன்) கொண்டு வர பெரு முயற்சி எடுத்த சட்டமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
வேகன் இயக்கம் மூலம் திருத்துறைப்பூண்டி தாலுகாவில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கமடைவது முழுவதுமாக தவிர்க்கப்படும், கொள்முதல் நிலையம் ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் லாரி உரிமை யாளர்கள் சங்கத்தின் சார்பில் சில நியாயமான கோரிக்கைகள் வைக்கப்படுகிறது. அவர்களின் நியாயமான கோரிக்கை அரசின் கவனத்திற்கு சார்பில் கொண்டு செல்லப்படும் என்றார்.
- புதிதாக பஸ் நிலையம் அமைப்பதற்கு விரைவில் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை கண்காணிக்க கமிட்டி அமைக்கப்படும்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி நகராட்சி கூட்டம் நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் பிரதான் பாபு, துணை தலைவர் ஜெயபிரகாஷ், நகராட்சி நியமன குழு உறுப்பினர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர்மன்ற தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் உறுதிமொழி தீர்மானங்களை வாசித்தார்.
கூட்டத்தில் மேலாளர் சீதாலட்சுமி, சுகாதாரத்துறை ஆய்வாளர் கருப்புசாமி, வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
நகர்மன்ற உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளில் செயல்படுத்த வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து பேசினர்.
அதனைத் தொடர்ந்து, நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் பேசுகையில்:-
திருத்துறைப்பூண்டி நகரில் நடைபெற்று வரும் 128 சாலைகள் பணிகள், 110 சாலை சேவை பணிகள் முடிந்துள்ளது. மேலும், ரூ.7 கோடியில் பஸ் நிலையம் புதிதாக அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
விரைவில் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்ச ரிக்கை ஏற்பாடுகளை கண்காணிக்க விரைவில் கமிட்டி அமைக்கப்படும் என்றார்.
- ஒற்றுமை தின ஓட்டம் நடைபெற்றது.
- முடிவில் பயிற்றுனர் ஜெயக்கொடி நன்றி கூறினார்.
திருத்துறைப்பூண்டி:
இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் தேசிய ஒற்றுமை தினம் மற்றும் தூய்மையே சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மக்கள் கல்வி நிறுவன இயக்குனர் பாலகணேஷ் தலைமை தாங்கினார்.
ஸ்கார்டு செயலாளர் பாபுராஜன் முன்னிலை வகித்தார்.
தேசிய ஒற்றுமை தினத்தில் நாம் அனைவரும் விருப்பு வெறுப்புகளை கடந்து முன்னேற்ற பாதையில் செல்லவும், தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பை காக்க வேண்டும் என உறுதிமொழி எடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பின்னர், ஒற்றுமை தின ஓட்டம் நடைபெற்றது.
முன்னதாக மக்கள் கல்வி நிறுவன பயிற்றுநர் சத்தியகலா அனைவரையும் வரவேற்றார்.
முடிவில் பயிற்றுனர் ஜெயக்கொடி நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் கனகதுர்கா, பயிற்றுனர்கள், பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
- பூங்காக்கள், ஆற்றங்கரைகள், குடியிருப்பு பகுதிகள் என இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது
- நகராட்சி மூலம் தயார் செய்யப்பட்ட நுண்ணுரங்களை பயன்படுத்துவதால் விரைவில் மரம் வளரும்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் நடப்பாண்டு 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது.
இந்த பணியை நகராட்சி நிர்வாகம், பாலம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து செயல்படுத்த உள்ளது.
கடந்த வாரம் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ மரக்கன்று வழங்கி பணியை தொடங்கி வைத்தார்.
பின்னர், மரக்கன்று நடும் இடங்களை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில்:-
நகரை பசுமையாக்கவும், ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கவும், காற்று மாசுவை குறைக்கவும் இந்த ஆண்டு 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது.
இதற்காக பூங்காக்கள், ஆற்றங்கரைகள், குடியிருப்பு பகுதிகள் என இடங்கள் தேர்வு செய்ய ப்பட்டு வருகிறது என்றார்.
இதுகுறித்து பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் கூறுகையில்:-
பலன் தரும் மகாகனி, வேங்கை, மருது, நிழல் தரும் வேம்பு, புங்கன், முள்ளில்லா மூங்கில் கன்றுகள் நடப்பட உள்ளது.
நகராட்சி மூலம் தயார் செய்யப்பட்ட நுண்ணுரங்களை பயன்படு த்துவதால் விரைவில் மரம் வளரும்.
இப்பணியை சேவை அமைப்புகள், தன்னார்வ ளர்கள் மூலம் செய்யப்பட உள்ளது.
இதனால் நகரம் விரைவில் பசுமையாகும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்றார்.
நிகழ்வின்போது நகர்மன்ற உறுப்பினர் வசந்த், முன்னாள் கவுன்சிலர் ராமு, சமூக ஆர்வலர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- புதுக்கோட்டையில் நடைபெறும் மண்டல அறிவியல் மாநாட்டிற்கு தேர்வாகி உள்ளது.
- மாணவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
மன்னார்குடி:
மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை இணைந்து 31-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு பூந்தோட்டம் தனியார் பள்ளியில் நடைபெற்றது.
இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 285 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டது.
இதில் மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் உலகராஜ், சிவராஜ் ஆகியோர் முது கலை இயற்பியல் ஆசிரியர் அன்பரசு வழிகாட்டுதலில், சமூக வலைதளங்களில் ஏற்படுகிற கற்றல் குறைபாடு எனும் தலைப்பில் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தனர்.
இந்த கட்டுரை புதுக்கோட்டையில் நடைபெறும் மண்டல அறிவியல் மாநாட்டிற்கு தேர்வாகி உள்ளது.
மன்னார்குடி பகுதியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
அந்த ஆய்வில் 80 சதவீதத்திற்கு அதிகமான மாணவர்கள் சமூக வலைதளங்களில் செயல்பாட்டாளர்களாக இருப்பதும், அதற்காக தினமும் 5 மணி நேரம் வரை செலவிடுவதும் கண்டறியப்பட்டது.
சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவிடுவதால் ஏற்படுகிற உளவியல் பிரச்சனைகள் குறித்தும், கற்றல் குறைபாடு குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
மேலும்,ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் செல்போன்களை மாணவர்கள் பயன்படுத்தினால் அவை சுவிட்ச் ஆப் ஆகிவிடுவது போலவும், அதிக நேரம் செல்போன்களை பயன்படுத்துவதால் அதன் உயரும் வெப்ப நிலைக்கு தகுந்தவாறு அவை குறிப்பிட்ட சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறி விடுவது போன்ற தீர்வுகள் ஆய்வில் முன்வைக்கப்பட்டது.
முடிவில் வெற்றிபெற்ற மாணவர்களையும், வழிகாட்டி ஆசிரியரையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் திலகர் பாராட்டினார்.
- மூட்டைக்குள் 13 கிலோ போதை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
- போதை பொருட்கள் கடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மன்னார்குடி:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, மன்னார்குடி அடுத்த காசாங்குளம் மேம்பாலம் அருகே கோட்டூர் சப்-இன்ஸ்பெக்டர் கல்விக்கரசன் தலைமையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன், தலைமை காவலர்கள் கண்ணன், செந்தில்குமார் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த மோட்டார் சைக்கிளின் பின்புறம் மூட்டை ஒன்று இருந்தது. அந்த மூட்டையில் சோதனை செய்ததில் அதில் 13 கிலோ போதை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.15 ஆயிரம் ஆகும்.
மேலும், மோட்டார் சைக்கிளில் போதை பொருட்கள் கடத்திய திருநெல்லிக்காவல் அடுத்த மேலமாறங்குடியை சேர்ந்த அஜித் (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை மன்னார்குடி சிறையில் அடைத்தனர். மோட்டார் சைக்கிளில் போதை பொருட்கள் கடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- திருத்துறைப்பூண்டி சாலையில் மணலி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.
- பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே குரும்பல் காளிய ம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 62). ஓய்வுபெற்ற அரசு ஊழியர். சம்பவத்தன்று இவர் திருத்துறைப்பூண்டி சாலையில் மணலி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஆலத்தம்பாடி பகுதியில் இருந்து பருத்திச்சேரி நோக்கி ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று வந்தது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக லோடு ஏற்றி வந்த டிராக்டர் நந்தகுமார் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த திருத்துறைப்பூண்டி போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு சிறப்பு ரெயில் இயக்க வேண்டும்.
- சிறப்பு ரெயில்களை முன்கூட்டியே அறிவித்தால் டிக்கெட் முன்பதிவு செய்ய வசதியாக இருக்கும்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோ கிப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜன், மாவட்ட செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் தென்னக ரெயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
அடுத்த மாதம் (நவம்பர்) 12-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னை உள்ளிட்ட வெளியூரில் வேலை பார்க்கும் பணியாளர்கள், வெளியூரில் தங்கி படிக்கும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் சொந்த ஊரான பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் ஆகிய ஊர்களுக்கு வருவது வழக்கம்.
எனவே, பயணிகள் வந்து செல்ல ஏதுவாக சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து ராமநாதபுரம் வரை திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி வழித்தடத்தில் சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும். இந்த சிறப்பு ரெயில்களை முன்கூட்டியே அறிவித்தால் டிக்கெட் முன்பதிவு செய்ய வசதியாக இருக்கும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
- குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது.
- தற்போது ஹெக்டருக்கு ரூ.13 ஆயிரத்து 500 மட்டுமே நிவாரணமாக அரசு வழங்குகிறது.
திருத்துறைப்பூண்டி:
அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த பாமணி கடைதெருவில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் சிங்காரவேலு தலைமை தாங்கினார். நகர செயலாளர் டி.ஜி. சண்முகசுந்தர், முன்னாள் ஒன்றிய செயலாளர் வெற்றிவேல், முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசுகையில்:-
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. ஆனால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லாததால் 3 லட்சம் ஏக்கர் குறுவை பயிர்கள் கருகி நாசமாகின. முந்தைய எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணங்களும், பயிர் காப்பீடும் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது ஹெக்டருக்கு ரூ.13 ஆயிரத்து 500 மட்டுமே நிவாரணமாக அரசு வழங்குகிறது.
நாங்கள் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் ஒரு பிரச்சினை என்றால் கண்டிப்பாக கேட்போம். கேட்பது மட்டுமல்லாமல் அதை நிறைவேற்றும் அதிகாரத்திற்கும் கூடிய விரைவில் வருவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி தலைவர் தமிழ்மணி நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்