search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி தொன் போஸ்கோ கல்லூரியில் மகளிர் தின பேரணி
    X

    தருமபுரி தொன் போஸ்கோ கல்லூரியில் மகளிர் தின பேரணி

    • தொன் போஸ்கோ கல்லூரியில் மகளிர் தின விழா இன்று நடைபெற்றது.
    • உதவிப்பேராசிரியர் ஆண்டனி கிஷோர், உதவிப் பேராசிரியைகள், மாணவிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் தொன் போஸ்கோ கல்லூரியில் மகளிர் தின விழா இன்று நடைபெற்றது.

    நிகழ்விற்குக் கல்லூரிச் செயலர் எட்வின் ஜார்ஜ் தலைமையுரையாற்றினார்.

    முதல்வர் ஆஞ்சலோ ஜோசப், வாழ்த்துரை வழங்கினார். துணை முதல்வர் பாரதி பெர்னாட்ஷா, முன்னிலை வகித்தார் . நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தருமபுரி மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞர்கள் சண்முகப்பிரியா மற்றும் சாந்தி ஆகியோர் கலந்து கொண்டு இன்றைய சூழலில் பெண் அனைத்துத் துறைகளிலும் கல்வியின் அவசியத்தையும், பெண்கள் பெற்றிருக்கின்ற வளர்ச்சி குறித்தும், எதிர்காலச் சமூகத்தில் பெண்கள் அடைய வேண்டிய முன்னேற்றம் குறித்தும் சிறப்புரையாற்றினர்.

    இந்நிகழ்வில் பொருளாளர் அருட்தந்தை ஜான், சமூகப் பணித்துறை உதவிப்பேராசிரியர் ஆண்டனி கிஷோர், உதவிப் பேராசிரியைகள், மாணவிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். மகளிர் தினத்தையொட்டி பேச்சு, கவிதை, ஓவியம், கட்டுரை ஆகிய போட்டிகள் கல்லூரி வளாகத்திலும், மனிதச்சங்கிலி பேரணி சோகத்தூர் கூட்டுச்சாலை முதல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை நடைபெற்றது. இப்பேரணியில் கல்லூரி மாணவிகளும், அக்சிலியம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளும் மனித சங்கிலியாக நின்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    தொடர்ந்து சமூகப்பணித்துறை மாணவ, மாணவியரின் பெண் வாழ்வியல் குறித்த விழிப்புணர்வு வீதி நாடகம் நடைபெற்றது. நிகழ்விற்கான ஏற்பாடுகளைப் புல முதன்மையர் பிரவீனா மற்றும் கல்லூரியின் மகளிர் நலக்குழு ஒருங்கிணைப்பாளர் லிலிதா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    Next Story
    ×