search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    குடிநீர் நீர்தேக்க தொட்டியில் பல ஆயிரம் லிட்டர் ஒகேனக்கல் குடிநீர் வீணாகும் அவலம்
    X

    தொட்டாரதனஹள்ளி கிராமத்தில் போதிய பராமரிப்பின்றி காணப்படும் குடிநீர் நீர்தேக்க தொட்டியை படத்தில் காணலாம்.

    குடிநீர் நீர்தேக்க தொட்டியில் பல ஆயிரம் லிட்டர் ஒகேனக்கல் குடிநீர் வீணாகும் அவலம்

    • 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
    • மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட தண்டுக்காரன அள்ளி ஊராட்சி, தொட்டா ரதனஹள்ளி கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராம பொதுமக்க ளுக்காக சுத்திகரிக்கப்பட்ட ஒகேனக்கல் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தினந்தோறும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் நீர் ஏற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தினம் தோறும் நிரம்பி வழிவதால் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரியப்ப டுத்தியும் ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ள வில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு ஒகேனக்கல் குடிநீரை சீராக அனைத்து பகுதிகளுக்கும் வழங்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×