search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அனுமதியின்றி  மது, லாட்டரி விற்ற பெண் உட்பட 3 பேர் சிறையில் அடைப்பு
    X

    அனுமதியின்றி மது, லாட்டரி விற்ற பெண் உட்பட 3 பேர் சிறையில் அடைப்பு

    • தருமபுரி அருகே மது, லாட்டரி விற்ற பெண் உட்பட 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • சீட்டு கட்டுகள் 12 மற்றும் ரூ. 15,430 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    தருமபுரி மாவட்டம், அரூர் போலீஸ் சரக எல்லைக்கு உட்பட்ட பகுதி களில் அரூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது போலீசாருக்கு மது பாட்டில்கள் விற்கப்படு வதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்படி மேலபாஷா பேட்டை பகுதியில் உள்ள பிரியாணி கடை பின்புறம் சென்று சோதனை செய்த போது அங்கு இருந்த வெள்ளை நிற உர சாக்கில் 27 மது பாட்டில்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டி ருந்தன. அந்த மது பாட்டில்களில் சில மூடி திறந்து இருந்தன. அதனை எடுத்து ஆய்வு செய்தபோது அதிக போதைக்காக அதில் ஊமத்தங்காய் சாறு கலக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து மது விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த அமித் மகன் காதர்பாஷா(45) சேரியம்பட்டி கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மகன் சுகதேவன்(44) ஆகிய 2 பேரையும் கைது செய்து் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். அதே போன்று பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது பாப்பி ரெட்டிப்பட்டி பஸ் நிலையம் அருகே பெண் ஒருவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்று கொண்டிருந்தார். அவரை பிடித்து அவரிடமிருந்து கேரளா லாட்டரி சீட்டு கட்டுகள் 12 மற்றும் ரூ. 15,430 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். போலீசார் விசாரணை யில் லாட்டரி சீட்டு விற்றவர் தென்கரைகோட்டை கிராமத்தை சேர்ந்த பழனிசாமி மகள் பழனி யம்மாள் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.

    Next Story
    ×