search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையம் முன்பு ஆசிரியர்கள் போராட்டம்
    X

    திருப்பத்தூரில் 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையம் முன்பு ஆசிரியர்கள் போராட்டம் செய்த காட்சி.

    10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையம் முன்பு ஆசிரியர்கள் போராட்டம்

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
    • 500 உயர்நிலை, மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு உயர்நிலை- மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் திருப்பத்தூரில் 10 வகுப்பு விடைத்தாள் திருத்தம் மையமான மேரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பத்தூர் வட்ட தலைவர் கே‌ அண்ணாமலை, தலைமை வகித்தார் அனைவரையும் ஆம்பூர் வட்டத் தலைவர் எஸ்.அறிவழகன் வரவேற்றார், கண்டன ஆர்ப்பாட்டத்தை மாநில பொருளாளர் சி. ஜெயக்குமார், தொடங்கிவைத்து பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் 2004-2006, வரை பணியில் அமர்த்தப்பட்ட அனைத்து ஆசிரியர்களையும் பணி நியமன நாளிலிருந்து பணிவரன்முறை செய்ய வேண்டும், 2022 முதல் வழங்கப்பட வேண்டிய அனைத்து அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் எம். தேசிங்கு ராஜன்‌, மாவட்டச் செயலாளர் வி. மூர்த்தி, மாவட்ட பொருளாளர் ஆர். துக்கன், மாவட்ட தலைமை நிலைய செயலாளர் எம். சுரேஷ், மாவட்ட இணைச்செயலாளர் மோதிலால், சுப்பிரமணி, உட்பட 500 உயர்நிலை மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர் இறுதியில் வட்டத் தலைவர் டி.கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

    Next Story
    ×