என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கொலை முயற்சி வழக்கில் கைதான 2 போ் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு
Byமாலை மலர்5 Sept 2023 1:11 PM IST
- குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் 1 ஆண்டு சிறையில் அடைக்க மாநகரக் காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு உத்தரவிட்டாா்.
- இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.
திருப்பூர்:
திருப்பூா் மாநகரம் மத்திய காவல் நிலையத்துக்குட்பட்ட சுபாஷ் பள்ளி சாலை பகுதியில் சிபிகாா்த்திக் என்பவரை 2 மா்ம நபா்கள் கடந்த ஜூலை 31 ந் தேதி அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றனா்.
இது தொடா்பாக இடுவம்பாளையத்தைச் சோ்ந்த என்.அசோக்குமாா் (19), பெரியாண்டிபாளையத்தைச் சோ்ந்த எஸ்.மோகன்குமாா் (21) ஆகியோரை காவல் துறையினா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.
இந்த இருவரும் தொடா்ந்து பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், அவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் 1 ஆண்டு சிறையில் அடைக்க மாநகரக் காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு உத்தரவிட்டாா்.
இதற்கான உத்தரவு நகலை சிறையில் உள்ள இருவரிடமும் காவல் துறையினா் வழங்கினா் .
Next Story
×