search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவினாசியில் உடைமைகளை தரமறுப்பதாக குடியிருந்த வீட்டின் முன் தொழிலாளி  தர்ணா
    X
    வீட்டின் முன் தர்ணா செய்த தொழிலாளி.

    அவினாசியில் உடைமைகளை தரமறுப்பதாக குடியிருந்த வீட்டின் முன் தொழிலாளி தர்ணா

    • கொரோனா சமயத்தில் பிரச்சனை ஏற்பட்டு நாககுமார் வீட்டை காலி செய்து வேறு வீட்டிற்கு சென்றுவிட்டார்.
    • தான் குடியிருந்த வீட்டில் வைத்திருந்த தனது பொருட்கள் உள்ளிட்ட உடைமைகளை வீட்டு உரிமையாளர் தரமறுக்கிறார்.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி ரங்கா நகர் பகுதியை சேர்ந்த வேலுசாமி என்பவரது வீடு கமிட்டியார் காலனி பகுதியில் உள்ளது. இந்த வீட்டில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் நாககுமார் (வயது 50) என்பவர் குடும்பத்துடன் வாடகைக்கு குடியிருந்ததாக கூறப்படுகிறது. கொரோனா சமயத்தில் பிரச்சனை ஏற்பட்டு நாககுமார் வீட்டை காலி செய்து வேறு வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    இந்த நிலையில் நேற்று தான் குடியிருந்த வீட்டில் வைத்திருந்த தனது பொருட்கள் உள்ளிட்ட உடைமைகளை வீட்டு உரிமையாளர் தரமறுக்கிறார் என்று நாககுமார் மற்றும் அவரது உறவினர்கள் குடியிருந்தவீட்டின் முன் தரையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து அவினாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜவேல், சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.இதையடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உங்கள் பிரச்சனை குறித்து கோர்ட்டில் வழக்கு தொடுத்து தீர்வுகாணுங்கள் என்று கூறியதையடுத்து தர்ணா போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×