search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னேரிபாளையம் ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் கூடுதலாக குடிநீர் வழங்க கோரி தீர்மானம்
    X

    கோப்புபடம்

    சின்னேரிபாளையம் ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் கூடுதலாக குடிநீர் வழங்க கோரி தீர்மானம்

    • குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தினமும் வரவேண்டிய 1,10,000 லிட்டர் குடிநீருக்கு பதிலாக தினமும் சராசரியாக 25,000 லிட்டர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.
    • துணைத் தலைவர் சம்பத்குமார் மற்றும் உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் என பலரும் திரளாக கலந்து கொண்டனர்.

    அவினாசி:

    அவிநாசி ஊராட்சி ஒன்றியம் சின்னேரிபாளையம் ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் கணேசபுரம் ஏ.டி. காலனியில் தலைவர் சரவணன் தண்டபாணி தலைமையில் நடைபெற்றது. இதில் குப்பையை தரம் பிரித்து தூய்மை காவலர்களிடம் கொடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    கணேசபுரம் முதல் அவிநாசி பேரூராட்சி மடத்துப்பாளையம் வரை உள்ள மண் சாலையை தார் சாலையாக மாற்றித்தரவும், சின்னேரிபாளையம் ஊராட்சிக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தினமும் வரவேண்டிய 1,10,000 லிட்டர் குடிநீருக்கு பதிலாக தினமும் சராசரியாக 25,000 லிட்டர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.

    எனவே முழு கொள்ளளவும் வரவேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் துணைத் தலைவர் சம்பத்குமார் மற்றும் உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் என பலரும் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×