என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்
- பொருளாதார மற்றும் கல்வி நிலையை உயர்த்துவதற்காக முக்கிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
- மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பணிகள் மேற்கொண்டிருக்க வேண்டும்.
திருப்பூர் :
தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக பலர் சேவையாற்றி வருகிறார்கள். ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்துக்காக தங்களை இணைத்தும், அவர்கள் ஆற்றி வரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டும், தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் அண்ணல் அம்பேத்கர் விருதை முதல்-அமைச்சர் தலைமையிலான உயர்மட்ட குழு தேர்வு செய்து வழங்கி வருகிறது.
ஆதிதிராவிட சமுதாயத்தை சேர்ந்த மக்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலையை உயர்த்துவதற்காக முக்கிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பணிகள் மேற்கொண்டிருக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், சாதனைகளை குறிப்பிட வேண்டும். இந்த விருது பெற தகுதியானவர்கள் உரிய விண்ணப்ப படிவத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இந்த மாத இறுதிக்குள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.