search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீரன் சின்னமலை நினைவுநாளை முன்னிட்டு  நாளை உள்ளூர் விடுமுறை என அறிவிப்பு
    X

    கோப்பு படம்.

    தீரன் சின்னமலை நினைவுநாளை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை என அறிவிப்பு

    • “சுதந்திர போராட்ட வீரரான தீரன் சின்னமலையின் நினைவு தினம் ஆண்டுதோறும் ஆடி 18-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
    • ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட தீரன் சின்னமலையின் நினைவிடம், ஓடாநிலையில் உள்ளது

    திருப்பூர்:

    தீரன் சின்னமலை நினைவு தினத்தினை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விட வேண்டும் என, திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத் தலைவருமான இல.பத்மநாபன் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

    திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மாநகராட்சி 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் நிருபர்க ளுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது, "சுதந்திர போராட்ட வீரரான தீரன் சின்னமலையின் நினைவு தினம் ஆண்டுதோறும் ஆடி 18-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட தீரன் சின்னமலையின் நினைவிடம், ஓடாநிலையில் உள்ளது. இந்நிலையில் திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெகுவிமரிசையாக அவரது பிறந்தநாள் மற்றும் நினைவுதினம் கொண்டாட ப்படும். ஆங்கிலேயர்களை நெஞ்சுரத்துடன் எதிர்த்து நின்று, தூக்கிலிடப்பட்ட வீரன் தீரன் சின்னமலையை அனைத்து தரப்பு மக்களும் இதனை கொண்டாடக் கூடிய வகையில், திருப்பூர் மாவட்டத்திற்கு நாளை (வியாழக்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்.

    என்பதை வலியுறுத்தி மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அளித்தோம். அவர் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து, எனது கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆடி 18-ம் நாள் தீரன் சின்ன மலை நினைவு தினத்தை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இந்த உத்தரவை அறிவித்த தமிழக முதல்வருக்கும், பரிந்துரைத்த தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×