என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அரிசி கடையின் பூட்டை உடைத்து ரூ. 60ஆயிரம் பணம் திருட்டு - டீ மாஸ்டர் கைது
- இரவு வியாபாரத்தை முடித்து கொண்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் நல்லூர் அடுத்த அமராவதிபாளையம் கருமாங்காடு தோட்டத்தை சேர்ந்தவர் முத்துக்குமார்(வயது 39). இவர் அப்பகுதியில் அரிசி கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வியாபாரத்தை முடித்து கொண்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.மறுநாள் காலை கடையை திறப்பதற்காக வந்த போது கடையின் பூட்டு உடைந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் .பின்னர் உள்ளே சென்று பார்த்த போது அங்கு கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 60 ஆயிரம் பணம், மற்றும் செல்போன் திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துக்குமார் நல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை செய்து வரும் திண்டுக்கல், வேடச்சந்தூரை சேர்ந்த குமார் (20) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.