என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கபடி போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு வழியனுப்பு விழா
- 24 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு 4 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.
திருப்பூர் :
பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் மாநிலம் தழுவிய கபடி போட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 29-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்க உள்ளது. இந்த போட்டிக்கு திருப்பூர் மாவட்ட கபடி கழகத்தின் சார்பாக திருப்பூர் வடக்கு, தெற்கு அணிகள் கலந்து கொள்கிறது. திருப்பூர் வடக்கு, தெற்கு அணிகளுக்கு வீரர்கள் தேர்வு செய்ய தேர்வு குழுவினரால் போட்டி நடத்தி, 24 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு 4 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சி முகாம் நிறைவு மற்றும் மாநில போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களை வழியனுப்பும் விழா நடந்தது. விழவுக்கு திருப்பூர் மாவட்ட கபடி கழக செயலாளரும், மாநில பொருளாளருமான ஜெய்சித்ரா ஏ.சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் கன்னிமார் ஆறுச்சாமி முன்னிலை வகித்தார். நடுவர் குழு தலைவர் முத்துசாமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பா.ஜனதா விளையாட்டுத்துறை செயலாளர் கே.பி.மகேஷ் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட இணை செயலாளர் சின்னு, செல்வராஜ், பயிற்சியாளர் ராஜூ, தம்பி வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.