என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பருவ மழையால் பரவும் காய்ச்சல் - குடிநீரை காய்ச்சி குடிக்க டாக்டர்கள் வேண்டுகோள்
- நோயாளி தும்மினாலோ, இருமினாலோ, மூக்கைச் சிந்தும்போதோ கிருமி சளியோடு வெளியேறி அடுத்தவர்களுக்கும் பரவிவிடுகிறது.
- குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் அதிகமாக இருக்கும்போது, வலிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
திருப்பூர் :
மழைக்காலம் வந்துவிட்டாலே நோய்களும் பஞ்சம் இல்லாமல் தொற்றிக்கொள்ளும். இதில் முதன்மையாக திகழ்வது வைரஸ் காய்ச்சல். குறிப்பாக புளு காய்ச்சல் அதிக அளவில் ஏற்படுகிறது. நோயாளி தும்மினாலோ, இருமினாலோ, மூக்கைச் சிந்தும்போதோ கிருமி சளியோடு வெளியேறி அடுத்தவர்களுக்கும் பரவிவிடுகிறது.
தும்மல், மூக்கு ஒழுகுதல், இருமல், தொண்டை வலி, கடும் காய்ச்சல், தலைவலி, உடல்வலி, கைகால் வலி போன்றவை இதன் அறிகுறிகள்.
இது குறித்து திருப்பூர் மருத்துவர்கள் கூறுகையில், காய்ச்சலைக் குறைக்க பாராசிட்டமால் மாத்திரை உதவும். ஒரு வாரத்தில் இது தானாகவே சரியாகிவிடும். இருப்பினும் மருத்துவர்களைக் கலந்தாலோசித்து மருந்து உட்கொள்வதே சிறந்தது.குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் அதிகமாக இருக்கும்போது, வலிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. காய்ச்சலைத் தணிக்க நடவடிக்கை தேவை. வழக்கமாக காய்ச்சல் நோயாளிகள், திட உணவு உட்கொள்வதற்கு பதிலாக திரவ உணவுகளை உட்கொள்வது சிறந்தது. எளிதில் ஜீரணிக்க உதவும். தூய்மையான குடிநீரைக் காய்ச்சி பருகுவதும் அவசியம். கொரோனா தொற்று பரவல் பொதுமக்களுக்கு பல்வேறு சவால்களை ஏற்படுத்தியது. அதேசமயம் நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக சுகாதாரம் குறித்த அக்கறை மக்கள் மனதில் ஏற்பட்டிருக்கிறது. இது நோய்களில் இருந்து காக்கும் என்றனர்.
ஊட்டச்சத்து வல்லுனர்கள் கூறுகையில், நோய் எதிர்ப்பு ஆற்றல் இல்லாதவர்களுக்கு எளிதாக நோய் தொற்றிக்கொள்ளும். ஊட்டச்சத்து ஆகாரங்களை உட்கொள்வது முக்கியம். மழைக்காலத்தில் வைரஸ் காய்ச்சல் மட்டுமின்றி, வயிற்றுப்போக்கு, காலரா, சீதபேதி, டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்றவையும் பரவுகின்றன. கவனத்துடன் இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியமே பிரதானம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு உணவு வழங்குவதிலும் கவனம் தேவை. முடிந்தவரை, நோயில் இருந்து விடுபடும் வரை பள்ளி செல்வதை குழந்தைகள் தவிர்க்க வேண்டும் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்