search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை நாராயணகவி மணிமண்டபத்தில் குடிநீர் குழாய் அமைக்க வேண்டும் -  சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
    X

    உடுமலை நாராயணகவி மணிமண்டபம்.

    உடுமலை நாராயணகவி மணிமண்டபத்தில் குடிநீர் குழாய் அமைக்க வேண்டும் - சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

    • குட்டைத்திடலில் நாராயணகவிமணிமண்டபம் உள்ளது
    • மாணவர்கள் இங்கு வந்து புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்களில் குறிப்புகள் எடுத்து பயன் அடைந்து வருகின்றனர்

    உடுமலை :

    உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட குட்டைத்திடலில் நாராயணகவி மணிமண்டபம் உள்ளது.கடந்த 2001-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்ட இந்த மணிமண்டபம் தற்போது வரையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இங்கு வந்து புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்களில் குறிப்புகள் எடுத்து பயன் அடைந்து வருகின்றனர். அதன் பயனாக ஒரு சிலர் அரசு பதவிகளையும் அலங்கரித்து வருவதாக தெரிகிறது. ஆனால் அடிப்படை வசதியில் ஒன்றான குடிநீர் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல்கள் நிலவி வருகிறது.அதைத் தொடர்ந்து மணிமண்டபத்தை நிர்வகித்து வரும் மாற்றுத்திறனாளி பணியாளர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்க்கு சென்று குடிநீர் பிடித்து வந்து தேர்வர்களுக்கு அளித்து வருகிறார். இதற்காக இவர் நாள்தோறும் உடுமலை- திருமூர்த்திமலை பிரதான சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த சாலையை திடகாத்திரமான உடல் நிலையில் உள்ளவரே கடப்பதற்கு சிரமப்பட வேண்டிய நிலையில், மாற்றுத்திறனாளி ஒருவர் கடந்து செல்வது இயலாத காரியமாகும். மணிமண்டபத்தில் குடிநீர் குழாய் அமைத்து தரக்கோரி கோரிக்கை வைத்தும் நகராட்சி நிர்வாகம் செவி சாய்க்கவில்லை. இதனால் தேர்வர்களும், பணியாளரும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாராயணகவி மணிமண்டபத்தில் குடிநீர் குழாய் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Next Story
    ×