search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலை முன்னாள் படை வீரர்கள் மனு
    X

    கோப்புபடம்

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலை முன்னாள் படை வீரர்கள் மனு

    • மாணவ மாணவிகள் வசதிக்காக பேருந்து நிறுத்தம் இல்லாததால் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவு நடந்து வர வேண்டி உள்ளது.
    • உடுமலையை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர் கலந்து கொண்டனர்.

    உடுமலை

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் சிறப்பு தொழில் முனைவோர் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட முன்னோடி கடன் வங்கி தலைமை அலுவலர், தாட்கோ பிரிவு அலுவலர், மாவட்ட தொழிற்பயிற்சி அலுவலர்கள் கலந்துகொண்டு சுயதொழில் வேலைவாய்ப்பு பற்றி விரிவாக எடுத்துரைத்தனர்.

    இதில் உடுமலையை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர் கலந்து கொண்டனர். திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடந்த கூட்டத்தில் உடுமலை முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்கம் சார்பில் தலைவர் ராமலிங்கம், செயலாளர் சக்தி, பொருளாளர் சிவகுமார் ஆகியோர் மனு அளித்தனர்.

    இதில் சங்க மூத்த நிர்வாகிகள் நாயப் சுபேதார் நடராஜ், மோகன், கண்ணன், மோகன்ராஜ், கர்ணன், முத்துக்காளை, லியாகத் அலிகான், கிருஷ்ணசாமி, அழகிரிசாமி, சுரேஷ் மற்றும் வீர மங்கையர் ஜெயந்தி பூபதி, ராதா முருகேசன், அங்கம்மாள் கிருஷ்ணன்ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மேலும் முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்கம் சார்பில் மருத்துவ வசதி, சிஎஸ்டி., கேண்டின் உடுமலை சைனிக் பள்ளியில் ஏற்படுத்துதல், சுயதொழில் வேலைவாய்ப்பு, இளைய தலைமுறைக்கான போலீஸ் ,ராணுவத்திற்கான உடல் தகுதித்திறன் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், சாலையோர கடைகள் மற்றும் ஆவின் ஸ்டால்கள் அமைப்பது தொடர்பாக, சிஎஸ்டி., கேண்டினில் பணிபுரிய மற்றும் மாவட்ட படை வீரர் நல அலுவலகத்தில் பணிபுரிய முன்னாள் ராணுவத்தினருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

    மேலும் பொள்ளாச்சி ரோட்டில் அமைந்துள்ள சங்க அலுவலகம் மற்றும் லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை சார்பில் யூனிபார்ம் சர்வீசில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகள் வசதிக்காக பேருந்து நிறுத்தம் இல்லாததால் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவு நடந்து வர வேண்டி உள்ளது. மேலும் முன்னாள் ராணுவ வீரர் நல சங்க அலுவலகம் இங்கு செயல்படுவதால் வயது முதிர்ந்த முன்னாள் படை வீரர்கள் மற்றும் வீரமங்கைகள் வந்து செல்வதற்கு பேருந்து நிறுத்தம் வசதி செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.

    Next Story
    ×