என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பல்லடம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் விவசாயி பலி
- மோட்டார் சைக்கிளை திருப்ப முயன்ற போது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் விழுந்து விபத்து ஏற்பட்டது.
- சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டியைச் சேர்ந்தவர் ரத்தினசாமி(வயது 53) விவசாயி.இவர் , இவரது நண்பர் மயில்சாமி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பல்லடம் அருகே உள்ள கரடிவாவிக்கு ஒரு வேலையாக சென்று விட்டு மீண்டும் வீடு திரும்புவதற்காக அனுப்பட்டியை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
ரத்தினசாமி மோட்டார் சைக்கிளை ஓட்ட மயில்சாமி பின்புறம் அமர்ந்து வந்தார். கரடிவாவி - அனுப்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது, அனுப்பட்டிக்கு அருகே உள்ள ரோடு திருப்பத்தில் மோட்டார் சைக்கிளை திருப்ப முயன்ற போது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் ரத்தினசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியே சென்றவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ரத்தினசாமியை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். காயமடைந்த மயில்சாமிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.