search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அருகே செவ்வந்திப் பூ விலை குறைவால் விவசாயிகள் கவலை
    X

    பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் செவ்வந்திப் பூக்களை படத்தில் காணலாம்.

    பல்லடம் அருகே செவ்வந்திப் பூ விலை குறைவால் விவசாயிகள் கவலை

    • உரிய லாபம் இல்லாததால், சிலர் பூக்கள் விவசாயத்திற்கு மாறிவிட்டனர்.
    • றைவான நீரில் பூக்களை சாகுபடி செய்ய முடியும்.

    பல்லடம் :

    பல்லடம் பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. சின்ன வெங்காயம், கத்தரி,பீட்ருட் உள்ளிட்ட காய்கறிகள் பயிரிட்டு வந்த நிலையில், உரிய லாபம் இல்லாததால், சிலர் பூக்கள் விவசாயத்திற்கு மாறிவிட்டனர். பூ விவசாயத்திற்கு அதிக தண்ணீர் தேவையில்லை என்பதாலும்,குறைவான நீரில் பூக்களை சாகுபடி செய்ய முடியும்.அந்த வகையில், பல்லடம் அருகே மாதப்பூர் பகுதியில் செவ்வந்திப் பூ பயிரிட்ட விவசாயி பழனிச்சாமி கூறுகையில்,நான்1 ஏக்கர் பரப்பளவில் செவ்வந்தி பூ சாகுபடி செய்துள்ளேன்.

    இதற்கு சுமார் 40 ஆயிரம் வரை செலவாகி உள்ளது. தற்போது செவ்வந்திப் பூ கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை போதுமானதாக இல்லை ரூ.100 வரை விற்பனை செய்தால்தான் போட்ட முதலீடை திரும்ப எடுக்க முடியும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×