search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் விவசாயிகள் பயன் பெற வேண்டுகோள்
    X

    கோப்புபடம்.

    ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் விவசாயிகள் பயன் பெற வேண்டுகோள்

    • தென்னையில் ஊடுபயிராக வாழை சாகுபடி செய்யும் விவசாயிக்கு ரூ.10,500 வழங்கப்படுகிறது.
    • பொது விவசாயிகளுக்கு 80 சதவீதமும், ஆதிதிராவிட மக்களுக்கு 20 சதவீதமும் பெற்று பயன்பெறலாம்.

    தாராபுரம் :

    தாராபுரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் (பொறுப்பு) செ. மிதுலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் 2022-23கீழ் தளவாய்பட்டினம், ஊத்துப்பாளையம், அலங்கியம், நாதம்பாளையம், வீராட்சிமங்கலம் ஆகிய கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த கிராமங்களுக்கு மட்டும் தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை சார்பில் பொது விவசாயிகளுக்கு 80 சதவீதமும், ஆதிதிராவிட மக்களுக்கு 20 சதவீதமும் பெற்று பயன்பெறலாம்.

    அதில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் துல்லிய பண்ணையம் அமைக்க 5 ஏக்கருக்கு ரூ.6 ஆயிரமும், உழவர் சந்தை அட்டை கொண்டு காய்கறி பயிர்களை சாகுபடி செய்து விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வீதம் வரை 8 ஏக்கர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தென்னையில் ஊடுபயிராக வாழை சாகுபடி செய்யும் விவசாயிக்கு ரூ.10,500 வழங்கப்படுகிறது. அதுபோன்று விவசாயிகள் தக்காளி, கத்தரி, மிளகாய் போன்ற நாற்றுகள் மடத்துக்குளம், சங்கராமநல்லூரில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் இருந்து மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

    மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தளவாய்பட்டினம், ஊத்துப்பாளையம் - 7338726839: அலங்கியம்- 8220709645: வீராட்சிமங்கலம், நாதம்பாளையம் -9976267323 மற்றும் 6381395756 என்ற அந்தந்த கிராம உதவி தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என்று கூறினார்.

    Next Story
    ×