என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காங்கயத்தில் 325 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியில் திருமண நிதி உதவி-தாலிக்கு தங்கம் அமைச்சர்கள் வழங்கினர்
ங்கயம்:
காங்கயம், சென்னிமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில், மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமையில், பயனாளிகளுக்கு திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு 325 பயனாளிகளுக்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் திருமண நிதிஉதவி மற்றும் தாலிக்கு தங்கத்தை வழங்கினார்கள்.
அப்போது அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் ஏழைப் பெண்களின் திருமணத்திற்காக தாலிக்கு தங்கம் மற்றும் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி, கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை நகை கடன் தள்ளுபடி, அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு மாதம் ரூ.1000 அவர்களது வங்கிக் கணக்கிற்கு வழங்கப்பட்டு வருகிறது. தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி மகளிர் உரிமைத்தொகை வருகிற செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும்.
10 மற்றும் 12-ம் வகுப்பு படித்த பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்கமும், பட்டம் மற்றும் பட்டயம் படித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது.
2022-23-ம் நிதியாண்டிற்கு திருப்பூர் மாவட்டத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு படித்த 16 பயனாளிகளுக்கு ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.4 லட்சமும் மற்றும் பட்டம் மற்றும் பட்டயம் படித்த 309 பயனாளிகளுக்கு ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.1 கோடியே 54 லட்சத்து 50 ஆயிரம் என மொத்தம் ரூ.1 கோடியே 58 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் நிதி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. தகுதியான 325 பயனாளிகளுக்கு 2 கிலோ 600 கிராம் தங்கம் ரூ.1 கோடியே 45 லட்சத்து 31 ஆயிரத்து 872 மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் குமரேசன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், மாவட்ட சமூக நல அலுவலர் நா.ரஞ்சிதாதேவி மற்றும் தொடர்புடைய துறை சார்ந்த அலுவலர் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்