என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காங்கயத்தில் இலவச மருத்துவ முகாம் முன்னேற்பாடு பணிகள் - கலெக்டர் ஆய்வு
- கலெக்டர் கிறிஸ்துராஜ் காங்கேயம் கார்மல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் யோகா பயிற்சியில் கலந்து கொண்டு யோகா பயிற்சியை தொடங்கி வைத்தார்.
- காவல்துறை சார்பில் முகாமிற்கு வரும் வாகனம் நிறுத்துவதை ஒழுங்குபடுத்தவும்,கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குண்டடம்:
திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஊராட்சி ஒன்றியம், காரப்பாளையம் மற்றும் பொன்னங்காளிவலசு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினை ஆய்வு மேற்கொண்டு, காங்கேயம் கார்மல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 24.6.2023 (சனிக்கிழமை) அன்று இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் வருகிற 24.6.2023 (சனிக்கிழமை) அன்று இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் காங்கயம் கார்மல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் நகராட்சி நிர்வாக துறையின் சார்பில் தேவையான குடிநீர் வசதி, சுகாதாரவசதி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும், மருத்துவ துறையின் சார்பில் இம்முகாமில் கலந்து கொள்ளும் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள பதிவு செய்யும் இடத்திலேயே தேவையான உதவிகள் செய்யவும், எந்தெந்த மருத்துவ பரிசோதனை எந்த அறையில் மேற்கொள்ளப்படும் என்பது குறித்த பெயர் பலகை பள்ளியின் முன்புறமாக பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வைக்கவும், மாற்றுத்தி றனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க தனிஅறை, மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்க தனி அறை ஏற்பாடு செய்யவும், காவல்துறை சார்பில் முகாமிற்கு வரும் வாகனம் நிறுத்துவதை ஒழுங்குபடுத்தவும்,கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் சிறப்பாக நடத்திட அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட கேட்டுக்கொள்ள ப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
முன்னதாக சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு கலெக்டர் கிறிஸ்துராஜ் காங்கேயம் கார்மல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் யோகா பயிற்சியில் கலந்து கொண்டு யோகா பயிற்சியை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசு, துணைஇயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ஜெகதீஸ்குமார் மற்றும் மருத்துவர் அருண் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்