search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூா் மாவட்டத்தில் பொது விநியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நாளை மறுநாள் நடக்கிறது
    X

    கோப்புபடம்.

    திருப்பூா் மாவட்டத்தில் பொது விநியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நாளை மறுநாள் நடக்கிறது

    • 13-ந் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் நடைபெறுகிறது.
    • மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்படவுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் பொது விநியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நாளை மறுநாள் 13-ந்தேதி நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்டத்தில் பொது விநியோக திட்ட சிறப்பு குறைதீா் முகாம் நாைள மறுநாள் 13-ந்தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறுகிறது. இந்த முகாமில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிமைப்பொருள் தனி வட்டாட்சியா்கள், வட்ட வழங்கல் அலுவலா்கள் மற்றும் தனி வருவாய் ஆய்வாளா்கள் கலந்து கொண்டு முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்படவுள்ளது.

    ஆகவே, பொதுமக்கள் குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் போன்ற மின்னணு குடும்ப அட்டை தொடா்பான கோரிக்கைகளை நிவா்த்தி செய்து கொள்ள இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    முகாம் நடைபெறும் இடங்கள் வருமாறு:- அவிநாசி வட்டத்தில் தொரவலூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தாராபுரம் வட்டத்தில் குண்டடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், காங்கயம் வட்டத்தில் எல்லப்பாளையம் புதூரில் உள்ள நிழலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், மடத்துக்குளம் வட்டத்தில் நீலம்பூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், பல்லடம் வட்டத்தில் வே.கள்ளிப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், திருப்பூா் வடக்கு வட்டத்தில் வேலம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், திருப்பூா் தெற்கு வட்டத்தில் முதலிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், உடுமலை வட்டத்தில் தின்னப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், ஊத்துக்குளி வட்டத்தில் விருமாண்டம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய இடங்களில் நடக்கிறது.

    Next Story
    ×