search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இடுவாய் ஊராட்சியில் கிராமசபை கூட்டம்
    X

    இடுவாய் ஊராட்சி மன்றத்தலைவர் கே.கணேசன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்ற காட்சி. 

    இடுவாய் ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

    • டாஸ்மாக் கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    • அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என ஊராட்சி மன்றத்தலைவரிடம் கேள்வி எழுப்பினர்.

    மங்கலம் :

    திருப்பூர் ஒன்றியம் ,இடுவாய் ஊராட்சி கிராமசபை கூட்டம் பாரதிபுரம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. இடுவாய் ஊராட்சி மன்றத்தலைவர் கே.கணேசன் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு இடுவாய் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் எஸ்.பரமசிவம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ,திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் பிரபு பாலசுப்பிரமணியம்,இடுவாய் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் "இடுவாய் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்"என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் ,மற்றும் இடுவாய் பகுதி பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவர்களும் "இடுவாய் பகுதியில் குப்பைகள் முறையாக அப்புறப்படுத்துவதில்லை எனவும்,அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என ஊராட்சி மன்றத்தலைவரிடம் கேள்வி எழுப்பினர்.அவர்களிடம் இடுவாய் ஊராட்சி மன்றத்தலைவர் கே.கணேசன் கூறுகையில், மின்கல வாகனம் மூலம் இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் வீடுவீடாக சென்று முறையாக குப்பைகள் வாங்கப்படுகிறது எனவும், சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைகளும் முறையாக அப்புறப்படுத்தப்படுகிறது.

    மேலும் மக்களின் கோரிக்கையை ஏற்று அடிப்படை வசதிகள் உடனடியாக செய்துதரப்படுகிறது என இடுவாய் ஊராட்சி மன்றத்தலைவர் கே.கணேசன் தெரிவித்தார்.

    Next Story
    ×