என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சூரியநல்லூரில் தோட்டக்கலை சார்பில் கள ஆய்வு
- அனைவருக்கும் திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகளையும் வழங்கினார்.
- சூரியநல்லூர் கிராமத்தில் தரிசு நிலத்தொகுப்பில் தேர்வு செய்யப்பட்ட புளியங்கன்று நடவு செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.
குண்டடம்:
குண்டடம் வட்டாரத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் டாக்டர் ஆர்.பிருந்தா தேவி, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட தரிசு நிலத் தொகுப்புகளில் கள ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது தரிசு நிலத் தொகுப்பு விவசாயிகளிடம் திட்ட செயல்பாடுகள் குறித்து விரிவாக கலந்துரையாடல் மேற்கொண்டார். மேலும் தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள் அனைவருக்கும் திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகளையும் வழங்கினார்.
இது குறித்து குண்டடம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ச. சசிகலா தெரிவித்துள்ளதாவது:-
குண்டடம் வட்டாரத்தில் வேளாண்மை துறை அலுவலர்களால் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2021-22 நிதியாண்டில் சூரியநல்லூர், சங்கரண்டாம் பாளையம் மற்றும் பெருமாள் பாளையம் ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் தரிசு நிலத் தொகுப்புகள் உருவாக்கப்பட்டது. மேலும், தொடர்புடைய தரிசு நிலத் தொகுப்பு விவசாயிகள் பயன்படுத்துவதற்காக, மானிய முறையில் ஆழ்துளைக்கிணறு அமைக்கப்பட்டு, மின்மோட்டார் மற்றும் மின் இணைப்பு முழு மானியத்தில் பெறப்பட்டு மற்றும் தரிசு நிலங்களில் சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது.
தரிசு நிலத்தொகுப்பு விவசாயிகளின் விருப்பத்திற்கிணங்க பல்லாண்டு காய்கறிப் பயிர்கள் மற்றும் பழமரச் செடிகள் தோட்டக்கலைத் துறையினால் முழு மானியத்தில் வழங்கப்பட்டு நடவு செய்யும் பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் இந்த திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றம் குறித்த கள ஆய்வினை சூரியநல்லூர், சங்கரண்டாம் பாளையம் மற்றும் பெருமாள் பாளையம் ஆகிய தரிசு நிலத்தொகுப்புகளில் மேற்கொண்டார். இதில் வேளாண்மை இணை இயக்குனர், தோட்டக்கலை துணை இயக்குனர் (பொறுப்பு) மற்றும் வட்டார தோட்டக்கலை, வேளாண்மை, வேளாண் பொறியியல் துறை பிற அரசு துறை அலுவலர்கள் மற்றும் நுண்ணீர் பாசன நிறுவனத்தினர் கலந்துகொண்டனர். சூரியநல்லூர் கிராமத்தில் தரிசு நிலத்தொகுப்பில் தேர்வு செய்யப்பட்ட புளியங்கன்று நடவு செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.
இதில் விவசாயிகள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்