search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பு - ஆதி திராவிடர் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
    X

    கோப்புபடம்

    ஓட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பு - ஆதி திராவிடர் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

    • படிப்பு முடிந்தவுடன் வேலைவாய்ப்பிற்கு வழி வகை செய்யப்படவுள்ளது.
    • பிரான்ஸ் நாட்டில் உள்ள லிசி நிக்கோலஸ் அப்பர்ட் கேட்டரிங் நிறுவனத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

    திருப்பூர்:

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) வழியே 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு முடித்தஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த மாணவர்களுக்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டில் பி.எஸ்.சி. மருத்துவமனை மற்றும் ஓட்டல் நிர்வாகம் 3 வருட முழுநேர பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புகள் சேர்ந்து படித்திடவும் படிப்பு முடிந்தவுடன் வேலைவாய்ப்பிற்கு வழி வகை செய்யப்படவுள்ளது.

    சென்னை, தரமணியிலுள்ள இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மெண்ட் கேட்டரிங் டெக்னாலஜி மற்றும் அப்ளைடு நியூட்ரிசன் நிறுவனமானது ஐ.எஸ்.ஓ. 9001-2015 தரச்சான்று பெற்ற நிறுவனமாகும். இந்நிறுவனமானது ஒன்றிய அரசின் சுற்றுலா துறையின் கீழ் அமைய பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம். மேலும் இந்நிறுவனம் சர்வதேச அங்கீகாரம் பெற்றது. அமெரிக்கன் கவுன்சில் ஆப் பிசினஸ்சில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள லிசி நிக்கோலஸ் அப்பர்ட் கேட்டரிங் நிறுவனத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

    உலகளவில் மனிதவள மேம்பாட்டு மையத்தில் 2-வது இடம் பெற்றுள்ளது. சிறந்த விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை பள்ளிகளில் உலக தர வரிசையில் 13-வது இடத்தில் இந்நிறுவனம் இடம் பெற்றுள்ளது.இப்புகழ் பெற்ற நிறுவனத்தில் 12-ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மாணவர்கள் படிக்க விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, அறை எண்: 501 (ம) 503,5 வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூர்-641604. என்ற முகவரிக்கும் 94450 29552, 0421-2971112 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) வழியே 12-ம் வகுப்பு மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த மாணவர்களுக்கு டிசிஎஸ்.ஐஆன் நிறுவனத்துடன் இணைந்து தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பயிற்சிகள் இணையதளம் வழியாக பயிற்றுவித்து முன்னனி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்படவுள்ளது.

    தகவல் தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட பயிற்சியினை பெற ஏதேனும் ஓரு பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் அல்லது கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வரும் 18 முதல் 28 வயது நிரம்பிய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் ெதரிவித்துள்ளார்.

    Next Story
    ×