search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் மழை பெய்தும் குறையாத வெப்பத்தின் தாக்கம்
    X

    கோப்புபடம்

    திருப்பூரில் மழை பெய்தும் குறையாத வெப்பத்தின் தாக்கம்

    • அதிவேக காற்றும் மழையும் பெய்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
    • திருப்பூர் ரெயில் நிலையம்அருகே வைக்கப்பட்டிருந்த டிராபிக் சிக்னல் கம்பம், ஓங்கியடித்த காற்றுக்கு, உடைந்துவிழுந்தது.

    திருப்பூர்:

    திருப்பூரில் காலை நேரங்களில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. இருசக்கர வாகன ஓட்டிகள், வியர்க்க விறுவிறுக்க பயணிக்கின்றனர். இந்நிலையில், திருப்பூர் நகர பகுதியில், கடந்த இரண்டு நாட்களாக மாலையில் மழை பெய்து வருகிறது.

    நேற்றுமுன்தினம் மாலை திடீரென சூறைக்காற்று வீசியது. சுழன்றடித்த காற்று, ரோட்டோரம் கிடத்த குப்பை,பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் பாட்டில்கள், சருகுகள், மண்ணை வாரி, இறைத்தது. இதனால் சாலை தெளிவாக தெரியாமல் வாகன ஓட்டிகள் தடுமாறினர்.இருசக்கர வாகன ஓட்டிகள், மேற்கொண்டு பயணிக்க முடியாமல், அருகிலிருந்த கடைகளில் தஞ்சமடைந்தனர். தொடர்ந்து அரைமணி நேரம் பலத்தமழை பெய்தது. நேற்றும் மாலை பலத்த காற்று வீசியது. காற்றுக்கு முறிந்து விழுந்து விடுவதுபோல், மரக்கிளைகள் அசைந்தாடின.சில நிமிடங்களிலேயே, மழை பெய்யத்துவங்கியது. அதிவேக காற்றும் மழையும் பெய்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

    திருப்பூர் ரெயில் நிலையம்அருகே வைக்கப்பட்டிருந்த டிராபிக் சிக்னல் கம்பம், ஓங்கியடித்த காற்றுக்கு, உடைந்துவிழுந்தது. அதனை சீரமைக்கும் பணியில், பணியாளர்கள் ஈடுபட்டனர். மழை பெய்தும் திருப்பூர் மாநகரில் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. இதனால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.

    Next Story
    ×