search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிர் திட்டம் சார்பில் ஒருங்கிணைந்த கடன் உதவி வழங்கும் திட்டம் அறிமுகம்
    X

    கோப்புபடம்.

    மகளிர் திட்டம் சார்பில் ஒருங்கிணைந்த கடன் உதவி வழங்கும் திட்டம் அறிமுகம்

    • பெண் விவசாயிகள் குழுவாக இணைந்து, வேளாண் உற்பத்தியாளர் குழு அமைக்கலாம்.
    • குழுவுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, வேளாண் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

    திருப்பூர் :

    நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு திட்டம், ஊரக வாழ்வாதார மேம்பாட்டு திட்டம் மூலம் நகரம் மற்றும் கிராமப்புற பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.இதன்மூலம் சிறு, குறு பெண் விவசாயிகள் 20 பேர் குழுவாக இணைந்து, வேளாண் உற்பத்தியாளர் குழு அமைக்கலாம். குழுவுக்கு தலாஇரண்டு லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, வேளாண் மேம்பாட்டு பணிகளை செய்ய வழிகாட்டுதல், பயிற்சி அளிக்கப்படும்.

    இது குறித்து திருப்பூர் மகளிர் திட்ட அலுவலர்கள் கூறியதாவது:- மகளிர் குழுவாக செயல்படும் பெண் விவசாயிகள் இணைந்து வேளாண் உற்பத்தியாளர் குழுவாக பதிவு செய்யலாம். வேளாண் பணிகளை மேம்படுத்த தலா, 2 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும். இத்தொகையை திருப்பி செலுத்தியதும் அதனை முதலீடாக கொண்டு உற்பத்தியாளர் குழு இயங்கலாம்.பெண் விவசாயிகள் மட்டுமல்ல விவசாய பெண் தொழிலாளர்களும் குழுவாக இணைந்து வட்டியில்லா கடன் பெற்று ஆடு, மாடு வளர்ப்பை மேம்படுத்தலாம். இதேபோல் பண்ணை சாரா உற்பத்தி குழுக்களை அமைத்து வட்டியில்லாத 2.50 லட்சம் ரூபாய் கடன் பெற்று சார்ந்துள்ள தொழில்களை மேம்படுத்தலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×