என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சிவன்மலை கோவிலில் கந்தசஷ்டி விழா நிறைவு - சுவாமி மலைக்கோவிலுக்கு திரும்பினாா்
- மலைக் கோயிலில் இருந்து அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேசுவரா் கோயிலில் சுவாமி எழுந்தருளினாா்.
- காலை 10 மணி மற்றும் மாலை 4 மணி ஆகிய நேரங்களில் அபிஷேக ஆராதனையும், திருவீதி உலா நடைபெற்றது.
காங்கயம் :
காங்கயம் சிவன்மலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த அக்டோபா் 26 ந் தேதி தொடங்கியது. இதையொட்டி, மலைக் கோயிலில் இருந்து அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேசுவரா் கோயிலில் சுவாமி எழுந்தருளினாா். அங்கு தினமும் காலை 10 மணி மற்றும் மாலை 4 மணி ஆகிய நேரங்களில் அபிஷேக ஆராதனையும், திருவீதி உலா காட்சியும் நடைபெற்றது.
கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா கடந்த திங்கட்கிழமை இரவு நடைபெற்றது. பக்தா்கள் அதிக அளவில் சூர சம்ஹார நிகழ்வில் கலந்து கொண்டனா். பின்னா் முருகப் பெருமான், தெய்வானை திருக்கல்யாண உற்சவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
விழா நிறைவு நாளான நேற்று மஞ்சள் நீராட்டு உற்சவம் நடைபெற்று, மாலை சுப்பிரமணியா் அடிவாரத்தில் இருந்து சப்பரத்தில் படிக்கட்டுகள் வழியாக எடுத்துச் செல்லப்பட்டு, மலைக் கோயிலுக்கு திரும்பினாா். விழாவில் அனைவருக்கும் பிரசாரம் வழங்கப்பட்டது. கந்த சஷ்டி விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.