search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதை கலாச்சாரத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மாதர் சங்கத்தினர் மனு
    X

    மனு கொடுக்க வந்தவர்களை படத்தில் காணலாம். 

    போதை கலாச்சாரத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மாதர் சங்கத்தினர் மனு

    • இளம் பெண்களுக்கு பானம் இலவசமாக வழங்கப்படும் என்று தகவல் பரவியது.
    • பெண்களை குடிப்பழக்கத்திற்கு ஈடுபடுத்துகின்ற மோசமான ஒன்றாகும்.

    திருப்பூர் :

    அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் திருப்பூர் மாவட்ட குழு சார்பில் திருப்பூர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மங்கலம் ரோட்டில் இயங்கிவரும் தனியார் ஓட்டலில் இரவு பார்ட்டியில் கலந்து கொள்ளும் இளம் பெண்களுக்கு பானம் இலவசமாக வழங்கப்படும் என்று தகவல் பரவியது. டாஸ்மாக் மது போதையில் பல குடும்பங்கள் அழிந்து வரும் நிலையில் இது போன்ற செயல் பெண்களை குடிப்பழக்கத்திற்கு ஈடுபடுத்துகின்ற மோசமான ஒன்றாகும். பொருளாதார வசதி உள்ள பெண்களை குடிபழக்கத்திற்கு ஈடுபடுத்துகிற மோசமான நடவடிக்கையே இது. திருப்பூர் பணம் கொட்டும் நகரம் என்பதால் இங்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் பணியாற்றி வருகிறார்கள்.

    அவர்களை ஈர்த்து அவர்களை போதைக்குள் தள்ளும் முயற்சிக்கு இது போன்ற ஓட்டல் அழைப்பது கண்டிக்கதக்கது. திருப்பூரில் முளைவிடத் தொடங்கும் இந்த போதை கலாச்சாரத்தை வேரறுப்பது நமது கடமையாகும். எனவே இது போன்ற நிகழ்வுகளை எக்காலத்திலும் நடைபெறாமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×