search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீணாகும் துணிகளில் வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பு
    X

    வீணாகும் துணிகளில் வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பு

    • கைகாட்டிபுதூர் சமுதாயக்கூடத்தில் நடந்த பயிற்சி வகுப்பை பேரூராட்சி தலைவர் தனலட்சுமி துவக்கி வைத்தார்.
    • மக்களை தினமும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு பெற்றிருப் பதால் சந்தை வாய்ப்பை உருவாக்கி கொள்ள முடியும்.

    அவிநாசி :

    அவிநாசி பேரூராட்சி சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் துணிக்கழிவுகளில் இருந்து வீட்டு உபயோகப் பொருட்களை மறு உற்பத்தி செய்வதற்கான பயிற்சி முகாம் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. கைகாட்டிபுதூர் சமுதாயக்கூடத்தில் நடந்த பயிற்சி வகுப்பை பேரூராட்சி தலைவர் தனலட்சுமி துவக்கி வைத்தார்.

    திருச்சியை சேர்ந்த கிருஷ்ணவேணி பயிற்சி வழங்கி, கூறியதாவது:- திருப்பூர் போன்ற பனியன் தொழில் சார்ந்த நகரங்களில் வீணாகி வீசியெறியப்படும் பனியன் துணிகளை சேகரித்து அதில் வீடுகளின் அத்தியாவசிய தேவையான மிதியடி, பெண்கள் பயன்படுத்தும் மணி பர்ஸ், மாணவர்களுக்கான பென்சில் பவுச் மற்றும் கலைநயமிக்க அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றை தயாரிக்க பயிற்சி வழங்கி வருகிறோம்.

    வீடு, வீடாக சென்று குப்பைகளை சேகரிப்பது கொசு ஒழிப்புப்பணியில் ஈடுபடுவது போன்ற பணிகளில் தூய்மை பணியாளர்கள் ஈடுபடுவதால் அவர்களால் மிக எளிதாக தங்கள் தயாரிக்கும் பொருட்களை விற்க முடியும். மக்களை தினமும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு பெற்றிருப் பதால் சந்தை வாய்ப்பை உருவாக்கி கொள்ள முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×