என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குண்டடத்தில் நடந்த விழாவில் ரூ.1¼ கோடியில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர்கள் வழங்கினர்
- தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் முதல்-அமைச்சர்.
- காலை உணவு திட்டம் மூலம் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.
குண்டடம் :
குண்டடத்தில் மாவட்ட பிற்படுத்தபட்டோர் நலத்துறையின் சார்பில் 142 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாக்களும், 5 பயனாளிகளுக்கு விலையில்லா இஸ்திரி பெட்டிகளும், 5 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் எந்திரம் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 33 பயனாளிகளுக்கு இ-பட்டாக்கள் என மொத்தம் 175 பட்டாக்கள் என மொத்தம் ரூ.1 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமை தாங்கினார். விழாவில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினர். விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:- தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். தி.மு.க.அரசு பொறுப்பேற்று இரண்டு வருடத்தை நிறைவு செய்திருக்கிறது. இதில் தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகள் குறிப்பாக தாய்மார்களுக்கு அரசு பஸ் கட்டணம் இல்லாத பயணம் என்கிற திட்டம், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கொடுமுடி முதல் ருத்ராவதி பேரூராட்சி வரை செயல்பட்டு வருகிறது.காலை உணவு திட்டம் மூலம் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார். இதில் குண்டடம் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன், ருத்ராவதி பேரூர் செயலாளர் அன்பரசு, மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் மயில்சாமி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.