search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிட்ஸ் கிளப் முதுநிலைப் பள்ளியில் நவராத்திரி விழா
    X

    நவராத்திரி விழா கொண்டாட்டத்தில் மாணவர்களின் காட்சி.

    https://www.maalaimalar.com/preview/story-233022

    கிட்ஸ் கிளப் முதுநிலைப் பள்ளியில் நவராத்திரி விழா

    • இந்தியா ஜி-20 நாடுகளின் தலைமையை ஏற்றதை நினைவு கூறும் ஜி-20 கொலு அமைக்கப்பட்டிருந்தது.
    • பக்தி பாடல்களைப் பாடியும் கடவுள் ஸ்லோகங்களை இசைத்தும் மாணவர்கள் வழிபாடு நடத்தினர்.

    திருப்பூர்:

    பெண் தெய்வங்களைக் கொண்டாடும் விழாவான நவராத்திரி பண்டிகை திருப்பூர் கிட்ஸ் கிளப் முதுநிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது. பாரம்பரிய முறையில் கொலுப் படிக்கட்டுகளை அமைத்து அவற்றில் பல்வேறு கடவுள் மற்றும் அவதார புருஷர்களின் பொம்மைகளை வைத்து, பக்தி பாடல்களைப் பாடியும் கடவுள் ஸ்லோகங்களை இசைத்தும் மாணவர்கள் வழிபாடு நடத்தினர். மேலும் ஒவ்வொரு வகுப்பும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு கொலுப்படிக்கட்டுகளை அமைத்திருந்தனர்.

    குறிப்பாக இந்த ஆண்டு இந்தியா ஜி-20 நாடுகளின் தலைமையை ஏற்றதை நினைவு கூறும் ஜி-20 கொலு, ஷேக்ஸ்பியரின் கவிதையை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட வாழ்வின் ஏழு படிநிலைகள், இந்தியப் பேரரசர்களின் சாம்ராஜ்யம், விளையாட்டுத் துறையில் இந்தியாவின் பெருமைகள் தொடர்பான கொலு ஆகியவை காண்போரை வெகுவாக கவர்ந்தன.

    விழாவில் கிட்ஸ் கிளப் முதுநிலைப் பள்ளியின் தலைவர் மோகன் கே. கார்த்திக், பள்ளியின் இயக்குநர் ரமேஷ், நிர்வாக இயக்குநர் ஐஸ்வர்யா நிக்கில், செயலாளர் நிவேதிகா மற்றும் பள்ளியின் முதல்வர் தீபாவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×