search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் தெற்கு ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தொடக்கம்
    X

    நிகழச்சியின்போது மரக்கன்றுகள் நட்டக் காட்சி.

    திருப்பூர் தெற்கு ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தொடக்கம்

    • புதிய பாரத எழுத்தறிவு திட்டமானது 2022 முதல் 2027 வரை செயல்படுத்தப்பட உள்ளது.
    • புதிய பாரத எழுத்தறிவு திடடம் திருப்பூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட 83 மையங்களில் தொடங்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழிகாட்டுதலின்படி, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி - புதிய பாரத எழுத்தறிவு திடடம் திருப்பூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட 83 மையங்களில் தொடங்கப்பட்டது.

    திருப்பூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட நொய்யல் வீதி மாநகராட்சி துவக்கப்பள்ளியின் குடியிருப்பு பகுதியில் துவக்கப்பட்டுள்ள மையத்தில் திருப்பூர் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் அண்ணாதுரை தலைமையில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் தி வசந்தி மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் கீதா ஆகியோர் உடனிருந்தனர். தன்னார்வலர் பௌஜியா பேகம் கற்போருக்கு பாடம் கற்பித்தார்.

    பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி புதிய பாரத எழுத்தறிவு திட்டமானது 2022 முதல் 2027 வரை செயல்படுத்தப்பட உள்ளது. கற்றல் மையங்களை, பள்ளிகள், கற்போர் குடியிருப்பு பகுதி, நூறு நாள்வேலை திட்டம் நடைபெறும் இடம் மற்றும் கற்போர் பணிபுரியும் தொழிற்சாலை வளாகம் ஆகியவற்றில் கற்போருக்கு ஏதுவான ஒரு இடத்தை தேர்வு செய்து அமைக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    கற்போருக்கு எழுத்துக்களை அடையாளம் காணுதல், சொற்களின் வரிவடிவத்தை அறிதல், பிறர் உதவியின்றி எழுதுதல் மற்றும் வாசித்தல், 1 முதல் 1000 வரை எண்களை எழுதுதல், கூட்டல், கழித்தல் கணக்குகள் செய்தல், கடிகாரத்தில் நேரமறிதல், பயணச்சீட்டு முன்பதிவு, பீம் செயலி போன்றவற்றை அன்றாட வாழ்வில் பயன்படுத்துதல், சட்ட அறிவு, பணமில்லா பரிவர்த்தனை மற்றும் உடல்நலமும் சுகாதாரமும் போன்றவற்றை கற்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×