search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கயம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.55 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகள்- ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம்
    X

    காங்கயம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்ற காட்சி.

    காங்கயம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.55 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகள்- ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம்

    • கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர்மகேஷ்குமார் தலைமை தாங்கினார்.
    • ரூ.55 லட்சம் மதிப்பில் புதிய வளர்ச்சி திட்டபணிகள் தேர்வு செய்யப்பட்டன.

    காங்கயம்:

    காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர்மகேஷ்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் காங்கயம் ஊராட்சி ஒன்றியத்தின் மூலமாக ரூ.55 லட்சம் மதிப்பில் புதிய வளர்ச்சி திட்டபணிகள் தேர்வு செய்வது.

    காங்கயத்தில் வணிகவரித்துறை அலுவலக கட்டிடம் கட்ட ராசி ஒன்றியத்திற்கு சொந்தமான 7½ சென்ட் நிலத்தை வழங்குவது. காங்கயத்தில் அடுத்த மாதம் (ஜூலை) 2-ந் தேதி நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமிற்கு ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் விளம்பரப்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் ஒன்றியக்குழு துணைதலைவர் ஜீவிதா ஜவ ஹர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஞானசேகரன், ராகவேந்திரன் மற்றும் மின்சார வாரியம், வேளாண்மைத்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×