search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்நடை மருத்துவமனை செயல்படும் நேரத்தை மாற்ற வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்
    X

    கோப்புபடம். 

    கால்நடை மருத்துவமனை செயல்படும் நேரத்தை மாற்ற வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்

    • பால் கறவை செய்யும் நேரம் என்பதால் இந்த நேரத்தில் சிகிச்சைக்கு கொண்டு சென்று அழைத்து செல்லுவது சரியாக இருக்காது.
    • பால் கறவை செய்யும் நேரம் என்பதால் இந்த நேரத்தில் சிகிச்சைக்கு கொண்டு சென்று அழைத்து செல்லுவது சரியாக இருக்காது.

    திருப்பூர்:

    திருப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆர்.டி.ஓ. பண்டரிநாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் சி.பொன்னுசாமி கொடுத்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    இடுவாய் கிராமத்தில் உள்ள சீரங்ககவுண்டன்பாளையம், சின்னக்காளிபாளையம், ஆட்டையாம்பாளையம் போன்ற பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக செயல்படுகிறது. கால்நடை வளர்ப்பிலும் ஈடுபடுகின்றனர். இங்கு ஒரே ஒரு கால்நடை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளார். இவருக்கு உதவியாக கால்நடை ஆய்வாளரோ, கால்நடை பராமரிப்பு ஊழியரோ இல்லை. இதனால் விவசாயிகள் கொண்டு வரும் கால்நடைகள் சிகிச்சை பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே காலியாக உள்ள இடத்திற்கு புதிதாக ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் திருப்பூரில் உள்ள கால்நடை மருத்துவமனைகள் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மதியம் 3 மணி முதல் 5 மணி வரையிலும் செயல்படுகிறது. ஆனால் மதியம் 3 மணி முதல் 5 மணி வரை உள்ள சமயம் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று திரும்பவும், பால் கறவை செய்யும் நேரம் என்பதால் இந்த நேரத்தில் சிகிச்சைக்கு கொண்டு சென்று அழைத்து செல்லுவது சரியாக இருக்காது. எனவே கால்நடை மருத்துவமனை நேரத்தை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை தொடர்ந்து செயல்பட தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

    Next Story
    ×