என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, ஆதார் எண் இணைப்பு - பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கல்லூரி மாணவர்கள்
- வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து, பெயர் சேர்த்தல், திருத்தங்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கினர்.
- வடக்கு தாசில்தார் கனகராஜ், தேர்தல் பிரிவு தாசில்தார் தங்கவேல் உடனிருந்தனர்.
திருப்பூர்:
தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி, வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த பணி நடந்துவருகிறது. கடந்த 9-ந் தேதி வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் 8 தொகுதிகளில் 11 லட்சத்து 42 ஆயிரத்து 432 ஆண் ,11 லட்சத்து 76 ஆயிரத்து 453 பெண்,324 திருநங்கை என மொத்தம் 23 லட்சத்து 19 ஆயிரத்து 219 பேர் வரைவு பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.வரும் டிசம்பர் 8-ந்தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் நடக்கிறது. பணிக்கு செல்வோர் வசதிக்காக 4 வார விடுமுறை நாட்கள் சிறப்பு முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முகாம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டத்தில் 1,061 ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது. தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.அதனால் முதல் நாள் முகாம் களைகட்டவில்லை. முதல் முகாம் நாளில் மொத்தம் 5,198 பேர் விண்ணப்பித்துள்ளனர். 2,819 பேர் முகாம் வாயிலாகவும், 2,379 பேர், வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.
மொத்த விண்ணப்பத்தில் 52.15 சதவீதம் அதாவது, 2,711 பேர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான படிவம் 6 வழங்கியுள்ளனர். இவர்களில் 1,944 பேர் முகாமிலும்,767 பேர் ஆன்லைனிலும் பெயர் சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ளனர்.வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து, பெயர் சேர்த்தல், திருத்தங்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கினர்.
திருப்பூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட மணி பப்ளிக் பள்ளி ஓட்டுச்சாவடி மையம், வடக்கு தொகுதியில் நெசவாளர் காலனி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, பாப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கேத்தம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, குமரானந்தபுரம் மாநகராட்சி பள்ளிகளில் நடந்த முகாமை கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார்.உதவி கலெக்டர் (பயிற்சி) பல்லவி வர்மா, வடக்கு தாசில்தார் கனகராஜ், தேர்தல் பிரிவு தாசில்தார் தங்கவேல் உடனிருந்தனர்.
பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக 6,719 பேர்,முகவரி மாற்றம் உட்பட பல்வேறு திருத்தங்களுக்காக 2,415 பேர், பெயர் நீக்கத்துக்கு 908 பேர் என ஞாயிற்றுக்கிழமை முகாமில் மொத்தம் 10,042 பேர் நேரடியாக விண்ணப்பித்தனர்.
தொடர்ந்து வரும் 26, 27-ந் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர் பங்கேற்பர். குறிப்பாக பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு இளம் வாக்காளர் ஏராளமானோர் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது.அதனால் அனைத்து மையங்களிலும் பெயர் சேர்ப்பதற்கான படிவம் 6 தட்டுப்பாடு இன்றி வைத்திருக்கவேண்டும் என்பது அனைத்து கட்சியினரின் கோரிக்கையாக உள்ளது.
18 வயது பூர்த்தியான, ஒவ்வொருவரையும் வாக்காளராக மாற்றும் முயற்சியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இந்த அரிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 மாணவர்கள் காலேஜ் ரோடு, கொங்கணகிரி பகுதியில், 2 நாட்களாக நடந்த வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு முகாம் குறித்து அப்பகுதியினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேராசிரியர்கள் விநாயகமூர்த்தி, அமிர்தராணி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன் குமார் தலைமையில், என்.எஸ்.எஸ்., மாணவர்கள் வீடு வீடாக சென்று, 100 சதவீத ஓட்டுப் பதிவை உறுதி செய்ய, 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் அடையாள அட்டையில் தங்களது பெயரை இணைக்க வேண்டும். வயது பூர்த்தியான ஒவ்வொருவரையும் வாக்காளராக மாற்றும் முயற்சியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இந்த அரிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதாரையும் இணைக்க வேண்டும். வரும் 26 மற்றும் 27 ம் தேதி ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் நீக்கம் செய்தல், பெயர் சேர்க்க, ஆதார் எண் இணைத்துக் கொள்ளலாம் என தெரிவித்தனர்.தொடர்ந்து மாணவர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்