என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கும்பாபிஷேகத்தையொட்டி சாமராயபட்டி கோவிலில் 2 நாட்கள் அன்னதானம்
- நாளை 13-ந்தேதி அதிகாலை, 3:30 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை, நிறைவேள்வி, தீபாராதனை நடக்கிறது.
- ஸ்ரீ காளியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிேஷகம் நடக்கிறது.
மடத்துக்குளம்:
மடத்துக்குளம் தாலுகா சாமராயபட்டியில், பழமையான விநாயகர் மற்றும் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து, மகா கும்பாபிேஷக விழா மங்கள இசை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமத்துடன் தொடங்கியது. நேற்றுமாலை6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கும்ப ஸ்தாபனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் முதற்கால யாக பூஜை நடந்தது.
இன்று காலை 9 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, 11மணிக்குவிமான கலசம் வைத்தல், மதியம்2 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சிநடைபெற்றது. மாலை,4மணிக்கு, மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது. நாளை 13-ந்தேதி அதிகாலை, 3:30 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை, நிறைவேள்வி, தீபாராதனை நடக்கிறது.
காலை 5 மணிக்கு மேல் 5:30 மணிக்குள், விமானங்கள் சம கால கும்பாபிேஷகமும், 5:30 முதல் 6 மணிக்குள், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ காளியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிேஷகம் நடக்கிறது. தொடர்ந்து, தச தானம், தச தரிசனம், மகா அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடக்கிறது. கும்பாபிேஷக விழாவையொட்டி இன்று மாலை முதல், நாளை மாலை வரை தொடர் அன்னதானம் நடக்கிறது.