என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை - கடைகளுக்கு சீல் வைத்து அபராதம், அவிநாசியில் அதிகாரிகள் அதிரடி
- அதிகாரிகள் கடையில் இருந்த பிளாஸ்டிக் கேரி பேக்குகள், கப்புகள், மாத்திரைகள் என 300 கிலோவை பறிமுதல் செய்தனர்.
- இக்கடையில் மாத்திரைகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் வழங்கப்பட்டு வந்தது தெரிய வந்தது.
அவிநாசி:
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கேரி பேக்குகள், கப்புகள் உள்ளிட்ட 14 வகையான பொருட்கள் பயன்படுத்த, விற்க அரசு தடை விதித்துள்ளது. இதற்கு மாற்றாக துணிப் பைகளை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. மேலும் கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பலவற்றில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் உடனடியாக பறிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
எச்சரிக்கை விடுத்தும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே இந்த உத்தரவை மீறும் வகையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் சில கடைகள் செயல்பட்டு வருவதாக சுகாதரத்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்த, மொத்த விற்பனை கடையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் கப்புகள், துணி பைகள் என மூட்டை மூட்டையாக குடோனில் வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இது மட்டுமின்றி காய்ச்சல், தலைவலி என உடல் உபாதைகளோடு வருபவர்களுக்கு இக்கடையில் மாத்திரைகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் வழங்கப்பட்டு வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அதிகாரிகள் கடையில் இருந்த பிளாஸ்டிக் கேரி பேக்குகள், கப்புகள், மாத்திரைகள் என 300 கிலோவை பறிமுதல் செய்தனர். அதே போல் அக்கடையின் அருகே செயல்பட்டு வந்த மற்றொரு கடையில் இருந்த இதே போல் 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட 600 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள பறிமுதல் செய்யப்பட்டு மொத்த விற்பனை கடைக்கு அபராதமும், மற்றொரு கடைக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்