search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    செங்குளத்தில் முகாமிடும் பறவைகள் - பார்த்து ரசிக்கும் பொதுமக்கள்
    X

    கோப்புபடம். 

    செங்குளத்தில் முகாமிடும் பறவைகள் - பார்த்து ரசிக்கும் பொதுமக்கள்

    • 6 மாதங்களுக்கு ஒரு மண்டலம் வீதம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
    • 8குளங்களுக்கு விடப்படும் தண்ணீர் மூலம் அந்த பகுதியில் உள்ள பகுதிகளும் பாசன வசதி பெறுகிறது.

    உடுமலை:

    உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், ஏழு குளம் என்று அழைக்கப்படும் குளங்களின் நீர் மட்டும் கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில் செங்குளத்தில் பறவைகள் முகாமிட்டுள்ளன. செங்குளம் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த பகுதிகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 6 மாதங்களுக்கு ஒரு மண்டலம் வீதம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    பாசன பகுதிகளுக்கு உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர், கால்வாய்கள் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது. அத்துடன் திருமூர்த்தி அணையில் இருந்து உடுமலை வரை அடுத்தடுத்துள்ள ஏழு குளம் என்று அழைக்கப்படும் பகுதிகளில் தினைக்குளம், செட்டிகுளம், செங்குளம், கரிசல்குளம், அம்மாபட்டி குளம், பெரியகுளம், ஒட்டுக்குளம் மற்றும் வளையபாளையம் குளம் ஆகிய 8குளங்களுக்கு விடப்படும் தண்ணீர் மூலம் அந்த பகுதியில் உள்ள பகுதிகளும் பாசன வசதி பெறுகிறது.

    திருமூர்த்தி அணையில் இருந்து தளி வாய்க்கால் மூலம் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்காக இந்த குளங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் முதல் அடுத்த ஆண்டு மே மாதம் வரையிலான 10 மாதங்களுக்குள் எவ்வளவு தண்ணீர் வழங்க வேண்டும் என்று அரசாணை வருகிறதோ? அந்த அளவு தண்ணீர் அந்த காலத்திற்குள், அந்த பகுதியில் உள்ள விவசாயிகளின் தேவையைப்பொறுத்து விடப்படும்.

    அதன்படி ஒட்டுக்குளம் பகுதியில் உள்ள விவசாயிகள் தற்போது தண்ணீர் கேட்காத நிலையில் அவர்கள் கேட்கும்போது விட அதிகாரிகள் தயாராக உள்ளனர். இதனால் அந்த குளம் தவிர மற்ற 7குளங்களுக்கும் கடந்த ஒருவாரத்திற்கு முன்பு, திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.அதனால் இந்த குளங்களின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில் பள்ளபாளையம் அருகில் உள்ள செங்குளத்திற்கு பறவைகள் வருகை அதிகரித்துள்ளது. கொக்குகள், நாரைகள் மற்றும் நீர்க்கோழிகள் அதிகமாக வந்துள்ளன.நீர்க்கோழிகள் கூட்டமாக குளத்துதண்ணீரில் நீந்தி செல்கின்றன.கரையோரங்களில் கொக்குகள் மற்றும் நாரைகள் தண்ணீரில் மீன்களை தேடுகின்றன.மீன்கள் தென்பட்டதும் அதை கொக்குகளும், நாரைகளும் கொத்தி தின்கின்றன.இடையிடையே அவை குளத்திற்குள் உள்ள மரங்களில் கூட்டமாக உட்கார்ந்து இளைப்பாறுகின்றன.

    Next Story
    ×