என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்த பா.ஜ.க. வலியுறுத்தல்
- மாவட்ட மருத்துவமனைக்கு நிகரான தரத்தோடு அரசு தலைமை மருத்துவமனை அமைக்க வேண்டும்.
- அரசு புறம்போக்கு நிலங்களில் இரவு-பகலாக கொள்ளை நடக்கிறது.
தாராபுரம்:
தாராபுரத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் மங்கலம் என்.ரவி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பா.ஜ.க.தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பி.யுமான சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
மத்திய அரசின் நிதி உதவியோடு தாராபுரம் அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனைக்கு நிகராக தரம் உயர்த்த ஒதுக்கப்பட்ட நிதியை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பயன்படுத்தாமல் வேறு நகரத்திற்கு பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.உடனடியாக தமிழக அரசு இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும். மேலும் ஏற்கனவே திட்டமிட்டபடி தாராபுரத்தில் மாவட்ட மருத்துவமனைக்கு நிகரான தரத்தோடு அரசு தலைமை மருத்துவமனை அமைக்க வேண்டும்.
திருப்பூர் மாவட்டம் முழுவதும் அனுமதி இல்லாமல் கனிம வளங்கள் அரசு புறம்போக்கு நிலங்களில் இரவு-பகலாக கொள்ளை நடக்கிறது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதனை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.