search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திறந்த வெளி விளையாட்டு அரங்கம்-ரெயில்வே மேம்பால பணிகளை கலெக்டர் ஆய்வு
    X

    திறந்த வெளி விளையாட்டு அரங்கம்-ரெயில்வே மேம்பால பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.  

    திறந்த வெளி விளையாட்டு அரங்கம்-ரெயில்வே மேம்பால பணிகளை கலெக்டர் ஆய்வு

    • திருப்பூர் மாவட்டம் சிக்கண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் திறந்த வெளி விளையாட்டு அரங்கம் கட்டுப்பட்டு வருகிறது.
    • மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் சிக்கண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கட்டப்பட்டு வரும் திறந்த வெளி விளையாட்டு அரங்கம் மற்றும் திருப்பூர் வஞ்சிபாளையத்தில் கட்டப்பட்டு வரும் ெரயில்வே மேம்பாலம் பணியினை கலெக்டர் கிறிஸ்துராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    திருப்பூர் மாவட்டம் சிக்கண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் திறந்த வெளி விளையாட்டு அரங்கம் கட்டுப்பட்டு வருகிறது. இவ்விளையாட்டு அரங்கில் தரை தளத்தில் உபகரண அங்காடி அறை, உடற்பயிற்சி அறை, பணியாளர்கள் அறை, விளையாட்டு வீரர்கள் உடை மாற்றும் அறை மற்றும் கழிவறை வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. முதல் தளத்தில் சுமார் 1050 நபர்கள் அமரும் வசதியுடன் பார்வையாளர்கள் அரங்கமும், மாற்றுத்திறனாளிகள் முதல் தளம் சென்று வருவதற்கு தனியாக சாய்தளம் வசதியும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 400 மீட்டர் அளவில் ஓடுதளமும், கால்பந்து மைதானமும் திறந்த வெளி விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்டு வருவதை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து, திருப்பூர் - சோமனூர் செல்லும் சாலையில் இருந்து சிக்கண்ணா கல்லூரி செல்லும் சாலையில் திருப்பூர் - வஞ்சிபாளையம் ெரயில்வே நிலையங்களுக்கு இடையே கட்டப்பட்டு வரும் ெரயில்வே மேம்பாலப்பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

    இந்த ஆய்வின் போது, உதவிக்கோட்டப் பொறியாளர் (நெடுஞ்சாலை (நெடுஞ்சாலை திட்டங்கள்) மல்லிகா, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர்கள் சுரேஷ், ஈஸ்வரமூர்த்தி, பொதுபணித்துறை உதவி செயற்பொறியாளர் முத்துசரவணன், உதவி பொறியாளர் சத்தியராஜா, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×