search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் முதல்முறையாக   20 ஓவர் பிங்க் பால்  கிரிக்கெட் போட்டி- ஈரோடு அணி சாம்பியன்
    X

    வெற்றி கோப்பையுடன் ஈேராடு வி.கே.சி.சி. அணி வீரர்களை படத்தில் காணலாம்.

    திருப்பூரில் முதல்முறையாக 20 ஓவர் பிங்க் பால் கிரிக்கெட் போட்டி- ஈரோடு அணி சாம்பியன்

    • ஈரோடு வி.கே.சி.சி. அணி வெற்றி பெற்று பரிசு கோப்பையையும், ரூ.1 லட்சம் ரொக்க பரிசையும் தட்டி சென்றது.
    • திருப்பூரில் முதல் முறையாக பிங்க் பந்தில் இப்போட்டி நடத்தப்பட்டது

    பெருமாநல்லூர்:

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள அய்யம்பாளையத்தில் மாவட்ட அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்தது. திருப்பூரில் முதல் முறையாக பிங்க் பந்தில் இப்போட்டி நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 24 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. குறிப்பாக ரஞ்சி தொடர், டி.என்.பி.எல். ஆகிய தொடர்களில் விளையாடிய வீரர்களும் இதில் கலந்து கொண்டு ஆடினர். தொடர்ந்து 14 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில், இறுதி போட்டிக்கு ஈரோடு வி.கே.சி.சி. அணியும், திருப்பூர் தேசிங்கு வாரியர் அணியும் தகுதி பெற்று, விளையாடியது. முடிவில் ஈரோடு வி.கே.சி.சி. அணி வெற்றி பெற்று பரிசு ேகாப்பையையும், ரூ.1 லட்சம் ரொக்க பரிசையும் தட்டி சென்றது. திருப்பூர் தேசிங்கு வாரியர் அணி 2-வது இடத்தை பிடித்தது. அந்த அணிக்கு ரூ.50 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. மேலும் 3-வது இடம் பிடித்த திருப்பூர் எம்.எஸ்.சி.சி. மற்றும் சென்னை வி.எல்.சி.சி. அணிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பெருமாநல்லூர் கேலக்ஸி கிரிக்கெட் அகாடமி தலைவர் ஜான் பிரபாகரன் செய்து இருந்தார்.

    Next Story
    ×